For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு பூஞ்சை Vs. வெள்ளை பூஞ்சை: இரண்டில் எது ஆபத்தானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன தெரியுமா?

கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனைத் தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுநோயும் வேகமாக பரவி வருகிறது.

|

கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் சூழலில் அதனைத் தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுநோயும் வேகமாக பரவி வருகிறது. கருப்பு பூஞ்சை சமீபத்தில் இந்தியாவில் நான்கு மாநிலங்களில் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டது.

Difference Between Black Fungus and White Fungus

கருப்பு பூஞ்சை மக்களைப் பயமுறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு, பாட்னாவில் வெள்ளை பூஞ்சையால் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். கருப்பு பூஞ்சை விட வெள்ளை பூஞ்சை மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. சிகிச்சையின் தாமதம் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும், எனவே அவர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை இரண்டில் மிகவும் ஆபத்தானது எது மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை பூஞ்சை

வெள்ளை பூஞ்சை

வெள்ளை பூஞ்சை மிகவும் ஆபத்தானதாக இருக்க காரணம், இது நுரையீரல் மற்றும் பிற உடல் பாகங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆபத்தானது மற்றும் மூளை, சுவாச அமைப்பு, செரிமான அமைப்பு போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கலாம்.

கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை

மியூகோமைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை முகம், மூக்கு, கண் சுற்றுப்பாதை மற்றும் மூளையை கூட பாதிக்கும், மேலும் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். இது நுரையீரலுக்கும் பரவுகிறது. AIIMS இயக்குனர் ரன்தீப் குலேரியா ஸ்டெராய்டுகளை தவறாகப் பயன்படுத்துவதுதான் அது பரவுவதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

MOST READ: கொரோனா நோயாளிகளுக்கு எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களை காப்பாற்றுவது கடினம் தெரியுமா?

வெள்ளை பூஞ்சை யாருக்கெல்லாம் வர வாய்ப்பிருக்கு?

வெள்ளை பூஞ்சை யாருக்கெல்லாம் வர வாய்ப்பிருக்கு?

வெள்ளை பூஞ்சை நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களை தாக்குகிறது, அதாவது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சுகாதாரமற்ற சூழல்கள் இந்த பூஞ்சை தொற்றுநோயைப் பிடிக்க மக்களை ஆளாகின்றன. இந்த நோய் தொற்றுநோயல்ல, ஆனால் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மற்றொரு நபர் ஆபத்தில் இருக்கக்கூடும், ஏனெனில் இவை நோயாளியால் சுவாசிக்கப்படலாம். நீரிழிவு நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட ஸ்டெராய்டு சிகிச்சையில் இருப்பவர்கள் வெள்ளை பூஞ்சைநோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

கருப்பு பூஞ்சை யாருக்கெல்லாம் வர வாய்ப்பிருக்கு?

கருப்பு பூஞ்சை யாருக்கெல்லாம் வர வாய்ப்பிருக்கு?

நீரிழிவு நோயாளிகள், கோவிட் நோயாளிகள் மற்றும் ஸ்டெராய்டுகளை நீண்ட காலமாகப் பயன்படுத்துபவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக ஐ.சி.யூ-வில் தங்கியிருப்பது கூட கருப்பு பூஞ்சை அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வெள்ளை பூஞ்சையின் அறிகுறிகள்

வெள்ளை பூஞ்சையின் அறிகுறிகள்

வெள்ளை பூஞ்சையின் அறிகுறிகள் COVID அறிகுறிகளுடன் மிகவும் ஒத்தவை. இதனால் நுரையீரல் பாதிக்கப்படலாம் மற்றும் மார்பு வலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும். இது தலைவலி, வலிகள், நோய்த்தொற்றுகள் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும்.

MOST READ: வாரத்திற்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது ஆணுறுப்பிற்கு நல்லது தெரியுமா? இதைவிட குறைஞ்சா அவ்வளவுதான்...!

கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்

கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்

சமீபத்திய வாரங்களில், கருப்பு பூஞ்சை COVID இலிருந்து மீண்டு வருபவர்களைத் தாக்குகிறது. நோய்த்தொற்று மூக்கின் மீது நிறமாற்றம், மங்கலான பார்வை, ஒரு பக்க முக வலி, பல் வலி, மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், இது நோயாளிகளுக்கு இரத்தத்தை இருமுவதற்கும் வழிவகுக்கும். சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால் இந்த தொற்று அபாயகரமானதாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Difference Between Black Fungus and White Fungus in Tamil

Check out the major differences between black fungus and white fungus.
Desktop Bottom Promotion