For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களைத் தாக்கும் டெல்டா வகை கொரோனா - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

எய்ம்ஸ் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய தனித்தனி ஆய்வுகளில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடையே டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

|

நாவல் கொரோனா வைரஸைச் சுற்றி பல விஷங்கள் உள்ளன. ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஒவ்வொரு நாளும் இந்த வைரஸை ஆராய்ந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதலாக இன்று வரை கொரோனா பலமுறை உருமாறியுள்ளது. இப்படி உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு தனித்தனி பெயர்களும் வைக்கப்பட்டன.

Delta Variant May Infect Those Who Received Covishield Or Covaxin Doses: AIIMS Study

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு டெல்டா என்று பெயர் வைக்கப்பட்டது. அதோடு இந்த வைரஸ் தான் இரண்டாம் அலையில் பல மோசமான பாதிப்புக்கள் ஏற்பட காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையை விட இரண்டாம் அலையில் அதிக உயிர் சேதம் ஏற்படுவதற்கும் இந்த டெல்டா வைரஸ் தான் காரணம் என்றும் கூறுகின்றனர். இதன் காரணமாக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுப்பூசி போட்டவர்களைத் தாக்கும் டெல்டா வைரஸ்

தடுப்பூசி போட்டவர்களைத் தாக்கும் டெல்டா வைரஸ்

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தனித்தனி ஆய்வுகளை நடத்தியது. அதில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களையும் தாக்குவது தெரிய வந்தது. எவ்வாறாயினும், எந்தவொரு ஆய்வும் இதுவரை மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆபத்தான டெல்டா வகை கொரோனா

ஆபத்தான டெல்டா வகை கொரோனா

கோவிட்-19 இன் டெல்டா மாறுபாடு இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா மாறுபாட்டை விட 40 முதல் 50 சதவீதம் வரை மிகவும் வேகமாக பரவக்கூடியது மற்றும் ஆபத்தானது என்று பிரிட்டிஷ் சுகாதார அதிகாரிகள் உட்பட மற்ற நிபுணர்களும் கூறுகின்றனர். ஆகவே இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் வழக்குகள் அதிகரிக்கவும், அதிகமானோர் உயிரிழப்பதற்கும் இந்த வகை கொரோனா தான் காரணம் என்று எய்ம்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது. அதோடு தடுப்பூசி போட்டவர்களிடையேயும் டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

எய்ம்ஸ் ஆய்வு எதை அடிப்படையாகக் கொண்டது?

எய்ம்ஸ் ஆய்வு எதை அடிப்படையாகக் கொண்டது?

டெல்லி எய்ம்ஸ் நடத்திய ஆய்வு, 63 அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளின் பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டது. இதில் நோயாளிகள் அனைவரும் 5 முதல் 7 நாட்கள் வரை அதிக காய்ச்சல் இருப்பதாக புகார் அளித்தவர்கள். இந்த 63 பேரில், 10 பேர் குறைந்தது ஒரு டோஸ் கோவாக்சின் மற்றும் 53 பேர் குறைந்தது ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளைப் பெற்றிருந்தவர்கள். அந்த ஆய்வில் 51 ஆண்களும், 22 பெண்களும் இருந்தனர். மேலும் 36 பேர் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களையும் பெற்றவராவர்.

இதில் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றவர்களிடையே 76.9 சதவீதம் டெல்டா வகை நோய்த்தொற்று இருப்பதும், இரண்டு டோஸ் பெற்றவர்களில் 60 சதவீதம் தொற்றும் இருப்பதும் பதிவாகியுள்ளன.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்வு

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்வு

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஜீனோமிக்ஸ் அண்ட் ஒருங்கிணைந்த உயிரியல் இணைந்து நடத்திய ஆய்வில், டெல்டா வகை கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்களை பாதிப்பது தெரிய வந்தது. அதுவும் இந்த ஆய்வில், இந்த தடுப்பூசி எடுத்த 27 நோயாளிகளுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று, 70.3 சதவீதம் தொற்று விகிதத்தில் இருந்தது தெரிய வந்தது.

தடுப்பூசிக்கு தப்பிக்கும் டெல்டா வகை கொரோனா

தடுப்பூசிக்கு தப்பிக்கும் டெல்டா வகை கொரோனா

இந்த ஆய்வுகளின் முடிவைப் பார்க்கும் போது, என்ன தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் டெல்டா வகை கொரோனா தாக்கும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா வகையும் கொரோனா தடுப்பூசியில் இருந்து தப்பிக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், டெல்டா வகை கொரோனா அளவுக்கு இல்லை. சுருக்கமாக கூற வேண்டுமானால், கொரோனா பிறழ்வுகளான ஆல்பா மற்றும் டெல்டா இரண்டுமே தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைத்துக் காட்டுவது தெரிகிறது.

தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கக்கூடாது

தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கக்கூடாது

என்ன தான் தடுப்பூசி போட்ட பின்னர் கொரோனா தாக்கினாலும், போட்ட தடுப்பூசியானது தொற்று தீவிரமாவதைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது, கொரோனா தடுப்பூசி போட்டு கொரோனா வந்தாலும், அது உயிரிழப்பு ஏற்படும் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆகவே தடுப்பூசி எடுத்துக் கொள்வதைத் தவிர்க்காமல், கட்டாயம் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு நிபுணர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Delta Variant May Infect Those Who Received Covishield Or Covaxin Doses: AIIMS Study

As India's COVID-19 cases recede, two separate studies by AIIMS & NCDC have shown that the Delta variant of COVID-19 is infecting vaccinated people by any jab.
Story first published: Thursday, June 10, 2021, 18:11 [IST]
Desktop Bottom Promotion