Just In
- 3 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 10 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
- 13 hrs ago
மாம்பழ பூரி
- 15 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
Don't Miss
- Technology
Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!
- Automobiles
இந்த வீடியோவை நிச்சயம் நீங்க பாத்திருப்பீங்க! ஸ்கூட்டர் தானாக விழுந்ததற்கு பின்னால் இருக்கும் மர்மம் இதுதான்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து விலகவில்லை... ரசிகர்கள் கோரிக்கையால் மனம் மாறிய சிபு சூரியன்
- News
தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட்.. ஓபிஎஸ் கோஷ்டியின் பாய்ச்சல்..எதுவும் நடக்காதோ பீதியில் ஈபிஎஸ் அணி!
- Sports
சாவு பயத்தை காண்பித்த அயர்லாந்து.. கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் அசத்தல்.. இந்தியா த்ரில் வெற்றி
- Finance
வேலை நேரம், விடுமுறையில் என்ன மாற்றம் வரலாம்.. புதிய தொழிலாளர் சட்டம் சொல்வதென்ன?
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தேனோட 'இந்த' பொருளை சேர்த்து சாப்பிட்டா... உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் எதுமே வராதாம்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பரவலினால், மக்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இயற்கை உணவு பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வீட்டிலேயே இயற்கை பானங்களை தயாரித்து உட்கொள்கின்றனர். பொதுவான உடல்நலப் பிரச்சனைகள் வரும்போது, பிரபலமாக அழைக்கப்படும் வீட்டு வைத்தியங்களைதான் நாம் அடிக்கடி நம்புகிறோம். மேலும் பெரும்பாலான மக்கள் கூறும் பொதுவான தீர்வு தேன் மற்றும் இலவங்கப்பட்டை. அவை இரண்டும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் ஆயுர்வேதம் கூட பல உடல்நலக் கோளாறுகளைத் தடுக்க இந்த கலவை உதவிகரமாக இருப்பதாகக் கூறுகிறது.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்ட உணவுப்பொருட்கள். பாட்டி வைத்தியமாக பண்டைய காலம் முதல் இதை பயன்படுத்தி வருகிறார்கள் மக்கள். மேலும், இவை பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தி, மாதவிடாயை சீராக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கப்பட்டை மற்றும் தேன் சேர்த்த ஆரோக்கியமான கலவையில் உள்ள நன்மைகள் மற்றும் அதை நீங்கள் எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இலவங்கப்பட்டை மற்றும் தேன் இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை ஒன்றாக நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகின்றன மற்றும் நோயை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து பாதுகாக்கின்றன. மேலும், அவை செரிமான அமைப்புக்கு நல்லது மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

தேன் மற்றும் இலவங்கப்பட்டை எவ்வாறு பயன்படுத்துவது?
நிபுணர்களின் கூற்றுப்படி, வடிகட்டப்படாத தேன் மற்றும் சிலோன் இலவங்கப்பட்டை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அதில் குறைந்த அளவு கூமரின் உள்ளது. தினமும் 1/2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் 1 டீஸ்பூன் இயற்கை தேனை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், தினசரி உணவில் இவற்றை சேர்க்கும் முன், ஒரு மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

கீல்வாதம் வலி
நிபுணர்களின் கூற்றுப்படி, தேன் மற்றும் இலவங்கப்பட்டையுடன் செய்யப்பட்ட பேஸ்ட் கீல்வாத வலிக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், 1 டீஸ்பூன் தேன் மற்றும் இலவங்கப்பட்டையை வெதுவெதுப்பான நீரில் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்குங்கள். பின்னர், அந்த பேஸ்டை வலி உள்ள இடத்தில் தடவி இயற்கையாக உலர விடவும்.

இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை மற்றும் 2 டீஸ்பூன் தேன் சிறிது தண்ணீரில் சேர்த்து, இந்த கலவையை தொடர்ந்து குடித்து வர வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த பயனுள்ள முடிவுகள் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளி
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இலவங்கப்பட்டை மற்றும் தேனில் உள்ளதால், இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்க உதவும் ஒரு பயனுள்ள கலவையாக உள்ளன.

மூட்டு வலி
மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப்பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.

கொலஸ்ட்ரால்
ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு குறைந்திடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் உங்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் மற்றும் தொந்தரவுகள் குறையும்.

இறுதி குறிப்பு
தேன் மற்றும் இலவங்கப்பட்டையின் சில பயன்பாடுகள் நிரூபிக்கப்பட்டாலும், சில நிரூபிக்கப்படாத கூற்றுக்கள் உள்ளன. ஆனாலும், இவை பிரபலமாக உணவு பொருளாக உள்ளன. எனவே, எந்தவொரு உடல்நலப் பிரச்சினைக்கும் இந்த கலவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ நிபுணருடன் ஆலோசனை செய்ய எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.