Just In
- 4 min ago
இந்த பழக்கங்கள் உங்கள் மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்துகிறது என்பது தெரியுமா?
- 19 min ago
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில எப்பவுமே நிம்மதி இருக்காதாம்... கவலைப்பட்டுட்டே இருப்பாங்களாம்...!
- 34 min ago
வயதின் அடிப்படையில் உங்களுக்கு இதய நோய் ஏற்படுமாம்... ஆய்வு என்ன சொல்கிறது? அது எந்த வயது தெரியுமா?
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- Finance
தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!
- Sports
இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. இங்கிலாந்தின் பலே மூவ்.. பந்துவீச்சு தேர்வு செய்ததன் பின்னணி?
- Automobiles
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...
- Movies
Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!
- News
உலகில் அதிவிரைவாகக் கரைந்து காணாமல் போகும் பொருள்.. வேறென்னங்க.. சம்பளப் பணம்தான்!
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த பழக்கங்கள் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்லன்னா வயிற்றில் பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும், உணவுகளை ஜீரணிப்பதற்கும் வயிற்றின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வயிற்றில் சிறு பிரச்சனையை சந்தித்தாலும், அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். ஆனால் நமது சில பழக்கங்கள் நமது வயிற்றின் ஆரோக்கியத்தை அழிக்கிறது என்பது தெரியுமா?
உதாரணமாக, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் காபி, வயிற்றில் அமில அளவை அதிகரிப்பதோடு, வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். இது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் இது தவிர நமது வயிற்றின் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய சில பழக்கவழக்கங்கள் உள்ளன. அந்த மோசமான பழக்கவழக்கங்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை தவிர்க்க முயலுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது
காலையில் எழுந்ததும், சிலர் ஆரஞ்சு ஜூஸை குடித்துவிட்டு காலை உணவை உண்பார்கள். ஆனால் பொதுவாக சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், அமிலம் அதிகளவு உற்பத்தியாகி, வயிற்று வலி, குமட்டல், வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் காலை உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டால், பழங்களில் உள்ள ஃபுருக்டோஸ் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மெதுவாக்கும். அதுவும் ஆரஞ்சு ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால், அது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்தி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கும்.

ஸ்பான்ச் கொண்டு பாத்திரங்களை கழுவுவது
பாத்திரங்களை பிளாஸ்டிக் அல்லது சிலிகான் பிரஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அவை பயன்படுத்தப்படாத போது உலர்ந்திருக்கும். ஆனால் ஸ்பான்ச் கொண்டு பாத்திரங்களைக் கழுவும் போது, அந்த ஸ்பான்ச்சில் நீண்ட நேரம் ஈரம் இருக்கும். இதனால் அதில் பாக்டீரியா அதிகம் வளரும்.

பாத்திரங்களை கழுவாமல் இருப்பது
இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள அழுக்கு பாத்திரங்களைக் கழுவாமல் தூங்கக்கூடாது. அழுக்கு பாத்திரங்களில் பாக்டீரியாக்களானது 4 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். இதை அவ்வப்போது கழுவாமல் விட்டுவிட்டால், அந்த பாக்டீரியாக்கள் சமையலறையில் பரவ ஆரம்பித்துவிடும். எனவே அழுக்கு பாத்திரங்களை சேர்த்து வைக்காமல் அவ்வப்போது கழுவிவிடுங்கள்.

மதிய உணவாக காய்கறி சாலட் சாப்பிடுவது
காய்கறி சாலட்டுகள் நல்லது தான். ஆனால் அதை மதிய வேளையில் உணவிற்கு மாற்றாக உண்ணக்கூடாது. மேலும் சாலட்டுகளில் புரோட்டீன் இல்லை. உடலுக்கு போதுமான புரோட்டீன் கிடைக்காவிட்டால், அதன் விளைவாக புரோட்டீன் பற்றாக்குறை ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

குளிர்ந்த உணவுகளை உண்பது
சமைத்த உணவை குளிர்ந்த நிலையில் எப்போதும் உண்பது வயிற்றின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்ந்த உணவுகளானது செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் மற்றும் இது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் மற்றும் வயிற்று பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால், உணவுகளை எப்போதும் சூடாக சாப்பிடுங்கள்.

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவது
தயிர் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு நல்லது தான். ஆனால் அந்த தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது செரிமான மண்டலத்தை மோசமாக்கும். குறிப்பாக அசிடிட்டி மற்றும் அமில சுரப்பு பிரச்சனை உள்ளவர்கள் தயிரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் செரிமான மண்டலம் சற்று மந்தமாகவும், ஓய்வெடுப்பதற்கு தயாராகவும் இருப்பதால், தயிரை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை சந்திக்க நேரிடும்.

அடிக்கடி சூயிங் கம் சாப்பிடுவது
அடிக்கடி வாயில் சூயிங் கம் போன்று மெல்லுவது தாடை வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வேண்டுமானால் ஒரு நாளைக்கு ஒரு சூயிங் கம் போதுமானது.

பலவகையான பழங்களை ஒரே வேளையில் உண்பது
பல வகையான பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிடுவதை ஆயுர்வேதம் பரிந்துரைப்பதில்லை. மாறாக தனித்தனியாக சாப்பிடவே ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பழத்திற்கும் தனித்தனி புளிப்புச் சுவையுண்டு. இந்த புளிப்புக்களை ஒன்றாக கலந்து சாப்பிட்டால், அது வயிற்றில் பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும் ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விகிதத்தில் செரிமானமாகின்றன. நீங்கள் வயிற்று உப்புசத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், பழ சாலட்டுகளை சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.