Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் விந்தணு தானம் செய்பவராக என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் தெரியுமா? உங்ககிட்ட இருக்கா?
விந்தணு தானம் என்பது கருவுறாத தம்பதிகள் அல்லது ஒரு தனிநபருக்கு ஒரு குழந்தையை கருத்தரிக்க உதவுவதற்காக ஒரு வளமான ஆண் தனது விந்துவை கொடுப்பது/தானம் செய்வதாகும்.
விந்தணு தானம் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகரித்து வரும் ஒன்றாகும். விந்தணு தானம் என்பது கருவுறாத தம்பதிகள் அல்லது ஒரு தனிநபருக்கு ஒரு குழந்தையை கருத்தரிக்க உதவுவதற்காக ஒரு வளமான ஆண் தனது விந்துவை கொடுப்பது/தானம் செய்வதாகும். விந்தணு தானம் செய்பவர் அந்நியராகவோ அல்லது பெறுநருக்குத் தெரிந்தவராகவோ இருக்கலாம்.

ஆண்கள் அனைவராலும் விந்தணு தானம் செய்ய முடியாது. விந்தணு தானம் செய்பவர்கள் விந்தணுவை தானம் செய்வதற்கு முன், ஏதேனும் ஆபத்துகள் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆண்கள் விந்தணு தானம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வயது
உலகம் முழுக்க பெரும்பாலான விந்தணு வங்கிகள் 18 முதல் 39 வயது வரையிலான நன்கொடையாளரை விரும்புகின்றன. ஆனால் சில விந்தணு வங்கிகள் விந்தணு தரத்தின் காரணமாக அதிகபட்ச வயது வரம்பை 34 ஆக நிர்ணயிக்கின்றன.

உளவியல் மதிப்பீடு
ஒரு உளவியல் மருத்துவர் விந்தணு தானம் செய்பவருடன், விந்தணு தானம் தொடர்பான உளவியல் மற்றும் உணர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து பேசுவார். விந்தணு நன்கொடையாளரின் மன ஆரோக்கியத்தையும் சுகாதார வழங்குநர் மதிப்பிடுவார். விந்தணு தானம் செய்பவர் பெறுநருக்குத் தெரிந்தால், அவர்களின் உறவைப் பற்றிய கேள்விகள் கேட்கப்படும்.

ஆரோக்கிய வரலாறு
தகுதிவாய்ந்த நன்கொடையாளரிடம் அவர்களின் முழுமையான மருத்துவ மற்றும் குடும்ப வரலாறு பற்றி கேட்கப்படுகிறது. விந்தணு நன்கொடையாளருக்கு அவர்களின் மருத்துவ வரலாற்றில் ஏதேனும் மரபணு அல்லது பரம்பரைக் கோளாறு இருந்தால், அந்த நபர் விந்தணு தானம் செய்பவராகத் தகுதி பெற முடியாது.
சமீபத்திய ஆய்வின் படி, கோவிட் தொற்று விந்து தரம் மற்றும் விந்தணுவின் டிஎன்ஏ-வில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) கிளினிக்குகள் மற்றும் விந்தணு வங்கி வசதிகள் கோவிட் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுவை மதிப்பிடுவதை பரிசீலிக்க வேண்டும் மற்றும் அவர்களின் விந்து தரம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை கோவிட் வரலாறு உள்ள ஆண்களை விலக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

விந்தணு தரம் மற்றும் கருவுறுதல் சோதனை
அதிகாரப்பூர்வ விந்தணு தானம் செய்பவராக மாறுவதற்கு முன், நபர் தனது விந்து மாதிரிகள் மூலம் பல விந்தணு தர சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். விந்தணு மாதிரிகளின் தரம், அளவு மற்றும் இயக்கத்திற்காக சோதிக்கப்படுகின்றன. ஒரு விந்தணு மாதிரியின் ஒரு மில்லிலிட்டருக்கு 15 மில்லியனுக்கும் அதிகமான விந்தணு எண்ணிக்கை இருக்க வேண்டும், அது வளமானதாகத் தகுதி பெறுவதற்கு. விந்தணுவானது இயல்பான அமைப்பு, வடிவம் மற்றும் 40%க்கு மேல் விந்தணுக்கள் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

உடல் பரிசோதனை
விந்தணு தானம் கொடுப்பவர் உடல் ஆரோக்கிய பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் மற்றும் சிறுநீர் மாதிரிகள் கொடுக்க வேண்டும். எய்ட்ஸ், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி 2 சி & சிபிலிஸ் போன்ற ஏதேனும் தொற்று அல்லது தன்னுடல் தாக்க நோய்கள் இருக்கிறதா என்று அவர் பரிசோதிக்கப்படுவார்.

மரபணு சோதனை
விந்தணு தானத்தை பெறுபவருக்கு அல்லது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த வகையான மரபணுக் கோளாறையும் அனுமதிக்க இயலாது, இதற்காக இரத்த மாதிரியும் பரிசோதிக்கப்படும்.

பாலியல் மற்றும் தனிப்பட்ட வரலாறு
விந்தணு நன்கொடையாளராக மாறுவதற்கு முன் தற்போதைய நாள் வரை தனது பாலியல் செயல்பாடுகளின் முழுமையான விரிவான வரலாற்றை அவர் வழங்க வேண்டும். அவர் புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்பாடு, மதுபானம் போன்றவற்றுக்கு ஏதேனும் அடிமைத்தனம் உள்ளவராக இருந்தால், அவருக்கு தொற்று நோய் அல்லது நாட்பட்ட நோய் ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். நபர் தனது பொழுதுபோக்குகள், கல்வி, தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் ஆர்வங்கள் பற்றிய தனிப்பட்ட விவரங்களையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கப்படுகிறார். மேலும் அவர்கள் சில ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை கொடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











