For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைத்தட்டுதல், விளக்கேற்றுதலை தொடர்ந்து மோடி இன்னைக்கு மக்களுக்கு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

|

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிட் -19 தாக்கத்தால் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு தழுவிய ஊரடங்கு இன்று முடிவுக்கு வந்த நிலையில், பல மாநில அரசுகள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்திருந்தனர்.

covid19 coronavirus lockdown extended top 10 points pm narendra modi speech 14 april

இன்று, ஏப்ரல் 14 அன்று காலை 10 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி முழுமையான ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளார். கோவிட்-19 தொற்றுநோய் குறித்து உரையாற்றிய மோடி, "மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம். வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கவனத்துடன் கையாள வேண்டும்." என்று தெரிவித்தார். மேலும் அவர் என்ன உரையாற்றினார் என்பது குறித்து இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வணக்கம் செலுத்துகிறேன்

வணக்கம் செலுத்துகிறேன்

நாட்டு மக்களின் முயற்சியால் மட்டுமே, கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸால் ஏற்பட்ட சேதத்தை ஒரு பெரிய அளவிற்கு சமாளிக்க முடிந்தது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். நாட்டு மக்கள் தங்கள் கடமைகளைச் செய்து, பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மக்களின் தியாகங்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

MOST READ: கொரோனா வேகமாக பரவி வரும் இந்த காலத்தில் மீண்டும் பரவத் தொடங்கும் மற்றொரு ஆபத்தான வைரஸ்...!

தனிமைப்படுத்துதல்

தனிமைப்படுத்துதல்

இந்திய நாட்டில் ஒரு கோவிட்-19 நேர்மறை நோயாளி கூட இல்லாத நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளை இந்தியா கண்காணித்து தனிமைப்படுத்தி வைத்தது.

21 நாள் ஊரடங்கு

21 நாள் ஊரடங்கு

இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் 100 ஐ எட்டுவதற்கு முன்பே, வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 550 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோத 21 நாள் ஊரடங்கை விதித்தோம்.

இந்தியா காத்திருக்கவில்லை

இந்தியா காத்திருக்கவில்லை

கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகள் தோன்றியபோது, இந்த பிரச்சினை அதிகரிக்கும் வரை இந்தியா காத்திருக்கவில்லை. இந்தியாவின் முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் விரைவான முடிவுகள் கொரோனாவால் ஏற்படும் பெரிய ஆபத்திலிருந்து மக்களை காக்க உதவுகின்றன.

MOST READ: காஃபி பிரியரா நீங்கள்? இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இவற்றில் சிறந்தது எது தெரியுமா?

மே 3 வரை நீட்டிப்பு

மே 3 வரை நீட்டிப்பு

அனைத்து பரிந்துரைகளையும் சாத்தியங்களையும் கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கு உத்தரவை மே 3, ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மே 3ஆம் தேதி வரை ரயில் சேவைகளும் ரத்து.

ஏப்ரல் 20

ஏப்ரல் 20

ஏப்ரல் 20 வரை, ஒரு கடுமையான ஊரடங்கு இருக்கும், அது மாநிலங்கள், மாவட்டங்கள், வட்டாரங்கள் அல்லது பகுதிகளாக இருந்தாலும் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். மக்கள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு சில முக்கியமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

தளர்வுகள் கலைக்கப்படும்

தளர்வுகள் கலைக்கப்படும்

ஊரடங்கு உத்தரவு விதியை யாராவது மீறினால், அந்தப் பகுதி கொரோனாவால் பாதிக்கப்பட்டால், இந்த பகுதிகளில் உள்ள தளர்வுகள் உடனடியாகக் கலைக்கப்படும்.

MOST READ: நீங்க ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...!

மருத்துவமனைகள்

மருத்துவமனைகள்

10,000 கொரோனா நோயாளிகள் இருக்கும்போது, இந்த நோயாளிகளுக்கு சுமார் 1500 முதல் 1600 படுக்கைகள் தேவை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்தியாவில், 1 லட்சம் படுக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். மேலும் இந்நோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு 600 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

சிறந்து விளங்குகிறது

சிறந்து விளங்குகிறது

கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

 பணியிலிருந்து நீக்க வேண்டாம்

பணியிலிருந்து நீக்க வேண்டாம்

சக ஊழியர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நிறுவனங்கள் ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

MOST READ: படுக்கைக்கு செல்வதற்கு முன் நீங்க இதை செய்வது உங்க இல்லற வாழ்க்கைக்கு ரொம்ப நல்லதாம்...!

ஏழு குறிப்புகள்

ஏழு குறிப்புகள்

நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டிய 7 குறிப்புகளை மோடி தெரிவித்தார்.

  • உங்கள் வீட்டில் உள்ள மூத்த குடிமக்களை, குறிப்பாக அடிப்படை பிரச்சனைகள் உள்ளவர்களை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள்.
  • ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை வீட்டில் தயாரித்தே அணிந்து கொள்ளலாம்
  • ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்
  • Aarogya Setu செயலியை பதிவிறக்கம் செய்து கொரோனா பரவல் குறித்து தெரிந்து கொண்டு பரவலை தடுக்கலாம்
  • முடிந்தவரை ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள்
  • உங்கள் வணிகங்களில், உங்கள் சக ஊழியர்களுக்கு உதவுங்கள். ஆட்குறைப்பு செய்யாதீர்கள்
  • கொரோனா வைரஸை எதிர்த்து நிற்கும் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை மதியுங்கள்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Lockdown Extended : Top 10 Points of PM Narendra Modi Speech on 14 April

Here we are talking about the covid19 coronavirus lockdown extended top 10 points pm narendra modi speech 14 april
Desktop Bottom Promotion