For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக பரவும் புதிய வகை ஓமிக்ரான்.. இது ஆபத்தானதா? இந்தியாவில் எங்கெல்லாம் உள்ளது?

ஓமிக்ரானின் துணை வகைகள் கொரோனா வைரஸின் முந்தைய விகாரங்களைக் காட்டிலும் வேகமாக பரவுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஓமிக்ரானின் புதிய வகை பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

|

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சில மாநிலங்களில் ஆயிரக்கணக்கான புதிய கொரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் ஓமிக்ரானின் ஒரு புதிய துணை வகையை நெருக்கமாக கண்காணித்து வருவதை உறுதிபடுத்தியுள்ளனர். கொரோனாவின் ஓமிக்ரான் வகை பரவ ஆரம்பித்ததில் இருந்து, அதன் துணை வகைகள் மக்களை அதிகம் தாக்குகின்றன.

Covid-19: New Omicron sub-variant BA.2.75 detected in India says WHO

அதுவும் ஓமிக்ரானின் துணை வகைகள் கொரோனா வைரஸின் முந்தைய விகாரங்களைக் காட்டிலும் வேகமாக பரவுகின்றன. ஆனால் இந்த துணை விகாரங்கள் ஆபத்தானவை இல்லை என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், சில பிறழ்வுகள் மோசமாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஓமிக்ரானின் புதிய வகை பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 WHO தலைமை விஞ்ஞானி கூற்று

WHO தலைமை விஞ்ஞானி கூற்று

உலக சுகாதார அமைப்பு ஜூலை 6 ஆம் தேதி புதிய வகை ஓமிக்ரானைக் குறித்த ஒரு வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டது. அந்த வீடியோவில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, இந்த புதிய ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக எந்த பெயரும் வைக்கவில்லை. ஆனால் இது BA.2.75 என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய மாறுபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்துள்ளதால், இதுக்குறித்து முழுமையாக தெரியவில்லை. ஆனால் இந்த மாறுபாடு ஸ்பைக் புரதத்தின் ஏற்பியில் சில பிறழ்வுகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்று கூறினார்.

BA.2.75 என்றால் என்ன?

BA.2.75 என்றால் என்ன?

BA.2.75 என்பது BA.4 மற்றும் BA.5 போன்ற ஓமிக்ரானின் துணை வகைகளில் ஒன்றாகும். தற்போது BA.2.75 இந்தியாவில் சுமார் 10 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG), மரபணு கண்காணிப்பு அமைப்பானது, நாட்டில் துணை மாறுபாட்டைக் கண்டறிவதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை. இந்த புதிய வகை மாறுபாட்டைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், நிபுணர்கள் இதுக்குறித்த கவலைகளை எழுப்பியுள்ளனர்.

இதுவரை எத்தனை நாடுகளில் இந்த புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

இதுவரை எத்தனை நாடுகளில் இந்த புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

மரபணு தரவுகளின் திறந்த மூல தளமான நெக்ஸ்ட்ஸ்ட்ரெய்னில் இதுவரை 8 நாடுகளில் இருந்து 85 பேரின் தரவு பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவில் இருந்து 69 பேரின் தரவு அடங்கும். அவை டெல்லி (1), ஹரியானா (6), இமாச்சல் பிரதேசம் (3), ஜம்மு (1), கர்நாடகா (10), மத்திய பிரதேசம் (5), மகாராஷ்டிரா (27), தெலுங்கானா (2), உத்தர பிரதேசம் (1) மற்றும் மேற்கு வங்கம் (13). மேலும் இந்தியாவைத் தவிர, ஜப்பான் (1), ஜெர்மனி (2), இங்கிலாந்து (6), கனடா (2), அமெரிக்கா (2), ஆஸ்திரேலியா (1) மற்றும் நியூசிலாந்து (2) போன்ற நாடுகளிலும் இந்த புதிய வகை கண்டறியப்பட்டுள்ளது.

BA.2.75 மாறுபாடு அதிக ஆதிக்கம் செலுத்துமா?

BA.2.75 மாறுபாடு அதிக ஆதிக்கம் செலுத்துமா?

டெல் ஹாஷோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் இருக்கும் மத்திய வைராலஜி ஆய்வகத்தில் இருந்து டாக்டர். ஷே ஃப்ளீஷன் கூற்றுப்படி, BA.2.75 அதிக ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக இருக்குமா என்பது தற்போது கூற முடியாவிட்டாலும், சற்று எச்சரிக்கையாக இருந்தால், வரவிருக்கும் ஆபத்தைத் தடுக்கலாம் என்று கூறுகிறார்.

மேலும் கடந்த சில மாதங்களாக ஓமிக்ரானின் துணை பிறழ்வுகளான BA.1, BA.2, BA.3, BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றின் ஸ்பைக் புரதத்தில் பிறழ்வு ஏற்பட்டு, ஓமிக்ரானின் துணை பிறழ்வுகள் உருமாற்றமடைய ஆரம்பிப்பதாகவும் கூறுகிறார்.

ஓமிக்ரானின் புதிய துணை வகையைப் பற்றி ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஓமிக்ரானின் புதிய துணை வகையைப் பற்றி ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானி தாமஸ் பீகாக்கின் கூற்றுப்படி, துணை மாறுபாட்டை கூர்ந்து கவனிப்பது நல்லது. ஃபிரெட் ஹட்ச் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ப்ளூம் ஆய்வகம் BA.2.75 குறித்த ஒரு விஷயத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அது என்னவெனில், ஓமிக்ரானின் BA.2 உடன் ஒப்பிடும் போது, BA.2.75 ஒரு குறிப்பிடத்தக்க ஆன்டிஜெனிக் மாற்றத்தைக் கொண்டிருப்பதால், இது கண்காணிக்கத் தகுந்தது.

உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் கோவிட் வகைகள்

உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் கோவிட் வகைகள்

தற்போது ஓமிக்ரானின் BA.4 மற்றும் BA.5 துணை வகைகள் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வழக்குகளின் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது. அமெரிக்காவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் BA.2.75 கொரோனா வழக்குகளின் அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது. இவற்றில் BA.4 மற்றும் BA.5 ஆகியவை ஆபத்தானவையாக கருதப்படவில்லை மற்றும் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், அது இயற்கையான மற்றும் தடுப்பூசியால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கலாம் என்பதால், இது மிகவும் எளிதாகவும் திறமையாகவும் பரவுகிறது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

தற்போது SARs-CoV-2 வைரஸ் சமாளிக்கக்கூடியதாக மாறியிருந்தாலும், உருமாற்றமடைந்து வரும் மாறுபாடுகளுக்கு மத்தியில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் உருமாற்றமடையும் வைரஸின் கணிக்க முடியாத தன்மை தான் அதை மிகவும் கவலையடையச் செய்கிறது. ஆகவே நம்மை கோவிட்டில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழி கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவதாகும்.

அதற்கு வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவதோடு, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதோடு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, கொரோனா தொற்றை உணர்த்தும் சளி அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமாக தவறாமல் பூஸ்டர் ஷாட்டுகளை சரியான நேரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Covid-19: New Omicron sub-variant BA.2.75 detected in India says WHO

A new sub variant BA.2.75 of the Omicron variant of covid 19 has been detected in India. Read on.
Story first published: Friday, July 8, 2022, 14:42 [IST]
Desktop Bottom Promotion