For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

29 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா 'லாம்ப்டா' - அதன் அறிகுறிகள் என்ன? தடுப்பூசி இதை தடுக்குமா?

'லாம்ப்டா மாறுபாடு' என்று அழைக்கப்படும் கொரோனாவின் புதிய பிறழ்வு சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் கவனிக்கப்பட வேண்டிய வைரஸ் மாறுபாட்டின் (variants of interest) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

|

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை அந்த வைரஸ் பல உருமாற்றங்களைப் பெற்று மக்களிடையே அதிவேகமாக பரவி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு உருமாற்றமடைந்த கொரோனாவின் டெல்டா வைரஸ் தான் காரணம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

COVID-19 Lambda Variant: All you need to Know about the New COVID Variant Found in 29 Countries

இந்நிலையில் 'லாம்ப்டா மாறுபாடு' என்று அழைக்கப்படும் கொரோனாவின் புதிய பிறழ்வு சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் கவனிக்கப்பட வேண்டிய வைரஸ் மாறுபாட்டின் (variants of interest) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஏஜென்சி 50-க்கும் மேற்பட்ட கோவிட் வகைகளை கண்டறிந்து, அதனால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து வருகிறது. ஆனால் அவை அனைத்துமே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மோசமானதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டு பிரிவுகள்

இரண்டு பிரிவுகள்

கொரோனா மாறுபாடுகளானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை Variants Of Interest (VOI) மற்றும் Variants Of Concern (VOC) ஆகும். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், VOC என்பவை பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால் VOI பிரிவைச் சேர்ந்தவை சிக்கலை உண்டாக்கும் அளவிலான திறன் கொண்டிருப்பதில்லை.

பெருவில் கண்டறிப்பட்ட லாம்ப்டா

பெருவில் கண்டறிப்பட்ட லாம்ப்டா

கொரோனாவின் லாம்ப்டா வகையானது முதன் முதலில் பெருவில் காணப்பட்டது என்றும் இது மரபணு குறிப்பான்களைக் கொண்டுள்ளதாகவும், மேலும் அதிக அளவில் பரவக்கூடியது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2020 இல் தோன்றிய லாம்ப்டா

2020 இல் தோன்றிய லாம்ப்டா

SARS-CoV-2 இன் பரம்பரை C.37 முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெருவில் கண்டறியப்பட்டது. இந்த லாம்ப்டா மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது கொரோனா பாதிப்பை அதிகரிப்பதற்கு தேவையான மரபணு மாற்றத்தை லாம்ப்டா வகை கொரோனா கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

29 நாடுகளில் பரவியுள்ள லாம்ப்டா

29 நாடுகளில் பரவியுள்ள லாம்ப்டா

தற்போது 29 நாடுகளில் லாம்ப்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் குறிப்பாக சிலி, பெரு, ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் லாம்ப்டா வழக்குகள் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும், இது தென் அமெரிக்காவில் மிகவும் பரவலாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இன்று வரை பதிவான வழக்குகளில் சுமார் 81 சதவீதம் லாம்ப்டா வகையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பெரு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே லாம்ப்டா மரபணு குறிப்பான்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. இது தான் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

லாம்ப்டா மாறுபாடு: அறிகுறிகள் மற்றும் தடுப்பூசிகளின் செயல்திறன்

லாம்ப்டா மாறுபாடு: அறிகுறிகள் மற்றும் தடுப்பூசிகளின் செயல்திறன்

லாம்ப்டா மாறுபாட்டின் அறிகுறிகள் ஏற்கனவே அறியப்பட்ட கோவிட்-19 இன் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, இருமல், சளி மற்றும் வாசனை இழப்பு ஆகிய அறிகுறிகளில் இருந்து வித்தியாசமாக தெரியவில்லை. இதற்கான அறிகுறிகள் குறித்து உலக அமைப்புகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றன.

மேலும் லாம்ப்டா மாறுபாட்டின் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, இது எம்மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் இந்த லாம்ப்டா பிறழ்வு தடுப்பூசிகளிடம் இருந்து தப்பிக்குமா என்பது குறித்து கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏன் இது 'Variant of Interest' என்று அழைக்கப்படுகிறது?

ஏன் இது 'Variant of Interest' என்று அழைக்கப்படுகிறது?

உலக சுகாதார அமைப்பு லாம்ப்டா மாறுபாட்டை கவனிக்கப்பட வேண்டிய வைரஸ் மாறுபாடு (Variant of Interest) என்று வரையறுத்துள்ளது. ஏனெனில் இது ஆல்பா, பீட்டா (தென்னாப்பிரிக்கா), காமா (பிரேசிலியன்) மற்றும் டெல்டா மாறுபாடு போன்ற அச்சுறுத்தும் கோவிட் மாறுபாடுகளுக்கு முந்தைய நிலையே தவிர வேறொன்றும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

COVID-19 Lambda Variant: All you need to Know about the New COVID Variant Found in 29 Countries

COVID-19 Lambda Variant: All you need to Know about the New COVID Variant Found in 29 Countries. Take a look...
Desktop Bottom Promotion