For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிஷீல்டு Vs கோவாக்சின் Vs ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் எது குறைவான பக்க விளைவுகளை கொண்டது தெரியுமா?

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆகும்.

|

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே நம்முடைய பேராயுதமாக இருக்கிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆகும்.

Covaxin vs. Covishield vs. Sputnik V: Possible Side Effects

ரஷ்ய தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவதால், தடுப்பூசியின் பயன்பாட்டைச் சுற்றி ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. செயல்திறன், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பக்க விளைவுகளையும் தாண்டி பயன்பாட்டிற்கான அங்கீகரிக்கப்பட்டுள்ள மூன்று தடுப்பூசிகள் தீங்கு விளைவிக்கும் கொரோனா வைரஸின் அபாயங்களைத் தடுப்பதில் நல்ல பலன்களைக் கொண்டுள்ளன. ஆனால் சில மென்மையான பக்க விளைவுகளும் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஷ்ய தடுப்பூசியின் செயல்திறன்

ரஷ்ய தடுப்பூசியின் செயல்திறன்

ரஷ்யாவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஸ்பட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை இந்திய மருந்துகள் கம்ப்ரோலர் ஜெனரல் (டிஜிசிஐ) வழங்கியது, ஸ்பூட்னிக் வி 91.6% செயல்திறன் வீதத்தையும், தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்துவதில் அதிக செயல்திறனையும் கொண்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்தின் வைரஸ் பிறழ்வுக்கு எதிராக கண்டறியப்பட்ட இந்தியாவின் கோவாக்சின் 81% க்கும் மேலான செயல்திறனை கொண்டுள்ளது, அதே நேரத்தில் உலகளவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் 70.4% க்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளது, தடுப்பூசியின் டோஸ்களுக்கு இடையில் இடைவெளி அதிகரிக்கும் போது இது 90% வரை உயர வாய்ப்புள்ளது.

தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்

தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்

எந்தவொரு தடுப்பூசியும், அது ஒரு பாரம்பரிய தயாரிப்பாக இருந்தாலும் அல்லது எம்ஆர்என்ஏ மாதிரியாக இருந்தாலும், சில நோயெதிர்ப்பு-மரபணு விளைவுகளைத் தூண்டுவதன் மூலம் அதன் செயல்பாட்டை தொடங்குகிறது, அவை இயற்கையாக எதிர்வினை கொண்டவை. இந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை, சில நாட்களில் குணமாகலாம், ஆனால் இது நபருக்கு நபர் வேறுபடலாம். இந்த பக்க விளைவுகளின் தன்மை ஒரு தடுப்பூசியிலிருந்து மற்றொரு தடுப்பூசிக்கு மிகக் குறைவாகவும் இருக்கலாம்.

இது எந்தவகையில் முக்கியமானது?

இது எந்தவகையில் முக்கியமானது?

தடுப்பூசி பக்கவிளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்வது ஒருவரை தடுப்பூசிக்கு தயாராக உதவுவது மட்டுமில்லாமல், இந்த பக்க விளைவுகள் ஒருவரின் உடல்நலம் மற்றும் பாதிப்புகளைப் பொறுத்து அவருக்கு எந்த மாதிரியானது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதையும் தீர்மானிக்க உதவும். ஸ்பூட்னிக் வி பொதுமக்களுக்கு கிடைக்கும் முன் அதன் பக்க விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்வது அவசியம்.

MOST READ: பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...!

ரஷ்ய தடுப்பூசியின் பக்க விளைவுகள்

ரஷ்ய தடுப்பூசியின் பக்க விளைவுகள்

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி கேம்லியா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தால் உருவாக்கப்பட்டது, உலகளவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் பதிவுசெய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஸ்பூட்னிக் வி ஒன்றாகும். தடுப்பூசி ஆன்டிபாடி உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது, எனவே வழக்கமான அழற்சி எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது, அவற்றில் பெரும்பாலானவை லேசான இயல்புடையவை. பிப்ரவரி 2021 இல் வெளியிடப்பட்ட லான்செட் ஆய்வின்படி, தலைவலி, சோர்வு, ஊசி போட்ட இடத்தில் வலி, லேசான காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். இதுவரை இந்த தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவுகள் பதிவுசெய்யப்படவில்லை.

கோவாக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள்

கோவாக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் உருவாக்கி தயாரித்த கோவாக்சின்நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த ஒரு செயலற்ற SARS-COV-2 ஆன்டிஜென் திரிபு (அல்லது ஒரு இறந்த வைரஸ்) பயன்படுத்துகிறது. இது ஒரு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால், இது பெரும்பாலும் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது மற்றும் மாடர்னா மற்றும் ஃபைசர் ஷாட்கள் போன்ற எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. இருப்பினும், ஊசி போடும் இடத்தில் சிவத்தல், வீக்கம், வலி, காய்ச்சல், அதிகளவில் வியர்த்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இரத்தப்போக்கு கோளாறுகள், நோயெதிர்ப்பு குறைபாடு, கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் மற்றும் எந்தவொரு தடுப்பூசி பொருட்களுக்கும் ஒவ்வாமை எதிர்விளைவுகளின் வரலாற்றைக் கொண்டவர்கள் இப்போது தடுப்பூசி எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவுகள்

கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவுகள்

உலகெங்கிலும் 62 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, இரத்தம் உறைதல் உட்பட சில விரும்பத்தகாத பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது மற்றும் பாதகமான எதிர்விளைவுகள் 'அரிதானவை' என்று ஆய்வுகள் நிரூபித்தாலும், கோவிஷீல்ட் ஊசியின் பக்க விளைவுகள் கோவாக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஒத்ததாக இருக்கிறது. இருப்பினும், பக்க விளைவுகளின் தீவிரம் சற்று தீவிரமாக இருக்கலாம். ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய முக்கிய பக்க விளைவுகள் என்னவெனில் ஊசி போடும் இடத்தில் வலி, மிதமான அல்லது அதிக காய்ச்சல், மயக்கம் மற்றும் சோம்பல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

MOST READ: ஆண்கள் தங்கள் மனைவியிடம் இருக்க வேண்டுமென்று விரும்பும் 'அந்த' 6 விஷயங்கள் என்ன தெரியுமா?

எதை தேர்ந்தெடுக்க வேண்டும்?

எதை தேர்ந்தெடுக்க வேண்டும்?

மக்கள் தங்களுக்கு விருப்பமான தடுப்பூசிகளை முன்பதிவு செய்வதற்கான சாய்ஸ்கள் இப்போது இருப்பதால், தடுப்பூசிகளின் நன்மைகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் பற்றிய முன் தகவல்களைப் பெறுவது ஒரு நல்ல முன்னேற்பாடாகும். சொல்லப்போனால், பயன்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்கின்றன மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுப்பதில் கிட்டத்தட்ட சமமானவை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Covaxin vs. Covishield vs. Sputnik V: Possible Side Effects

Read to know about the possible side effects of Indian and Russian COVID-19 vaccines.
Story first published: Saturday, May 15, 2021, 13:55 [IST]
Desktop Bottom Promotion