For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் பக்கவிளைவுகள் அனைவருக்குமே ஏற்படலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகள் குறிப்பிட்ட மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

|

உலகெங்கிலும் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி வெளிவந்த பின்னர் பலருக்கு நம்பிக்கையும், உற்சாகமும் எழுந்துள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளதால், பொது மக்களிடையே பதட்டமும், குழப்பமும் உள்ளது. ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளானது உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் பிரதிபலிப்பாகும். எனவே தடுப்பூசி எடுக்க மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

Coronavirus vaccine: Who are most likely to experience post-vaccination side effects?

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் பக்கவிளைவுகள் அனைவருக்குமே ஏற்படலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகள் குறிப்பிட்ட மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் சந்திக்கும் பொதுவான பக்கவிளைவுகள் என்ன?

தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் சந்திக்கும் பொதுவான பக்கவிளைவுகள் என்ன?

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பக்கவிளைவுகளை சந்தித்து வருகின்றனர். அதில் காய்ச்சல், முதல் சோர்வு, குமட்டல், உடல் வலி என பல அறிகுறிகளை கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் அனுபவித்திருப்பது பதிவாகியுள்ளது. இது தவிர, பலர் அரிப்பு, வீக்கம், ஊசி போட்ட இடம் சிவந்து போவது எனவும் அனுபவித்துள்ளனர்.

தடுப்பூசிக்கு பின் பக்கவிளைவுகளை அதிகம் சந்திப்பவர்கள் யார்?

தடுப்பூசிக்கு பின் பக்கவிளைவுகளை அதிகம் சந்திப்பவர்கள் யார்?

கொரோனா தடுப்பூசிக்கு பின் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அனைவருமே அறிவோம். இருப்பினும், இந்த பக்கவிளைவுகளை குறிப்பிட்ட மக்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. கீழே கொரோனா தடுப்பூசிக்கு பிறகு பக்கவிளைவுகளை அதிகம் அனுபவிக்கும் மூன்று வகையான குழுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள்

பெண்கள்

புதிய ஆய்வின் படி, ஆண்களை விட பெண்கள் கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளை அதிகம் அனுபவிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) நடத்திய ஆய்வில், வெவ்வேறு வயது மக்களுக்கு வழங்கப்பட்ட முதல் 13.7 மில்லியன் கோவிட் தடுப்பூசி ஷாட்டுகளின் தரவை ஆராய்ந்தது. போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளில், 79 சதவீத பக்கவிளைவுகள் பெண்களால் தான் பதிவாகியுள்ளன.

ஆய்வின் படி, மாடர்னா தடுப்பூசியைப் பெற்ற 19 பெண்கள் மோசமான எதிர்வினையை சந்தித்தது பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் அனாபிலாக்டிக் எதிர்விளைவுகளைப் பற்றி புகார் அளித்த 44 சதவீத பெண்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகள் பெற்றவர்களாவர்.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

ZOE கோவிட் அறிகுறி ஆய்வு ஆப்பின் படி, ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாவர். கோவிட் இல்லாதவர்களில் 19 சதவிகிதத்தினருடன் ஒப்பிடும் போது, குளிர் உட்பட முழு உடல் பக்க விளைவுகளையும் அனுபவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

அதே தரவு கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளின் பாதிப்பு இளைஞர்களிடையே அதிகம் இருப்பதாக கூறியது. அதேப் போல், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கொச்சி கிளை நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் வயதானவர்களை விட இளைய நபர்களிடையே கோவிட் -19 தடுப்பூசி பக்க விளைவுகள் அதிகம் காணப்படுவது கண்டறியப்பட்டது.

5,396 பேரை கொண்ட ஆய்வு முடிவு

5,396 பேரை கொண்ட ஆய்வு முடிவு

இந்த ஆய்வானது 20-29 மற்றும் 80-90 வயதுக்குட்பட்ட சுமார் 5,396 பேரை கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இளைஞர்கள் அனுபவித்த அறிகுறியின் அளவு 81 சதவீதமாக இருந்தது. அதே சமயம் வயதானவர்களுக்கு இது 7 சதவீதமாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus vaccine: Who are most likely to experience post-vaccination side effects?

The coronavirus vaccine rollout in and around the world brought along a ray of hope and excitement for a lot of people. However, given that the COVID vaccines are not devoid of side effects, it has also triggered a sense of nervousness and confusion amongst the public.
Story first published: Thursday, March 25, 2021, 13:31 [IST]
Desktop Bottom Promotion