For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா இரண்டாம் அலையின் முக்கியமான ஆரம்ப அறிகுறி இதுதாங்க... ஜாக்கிரதையா இருங்க...

கோவிட் நோய்த்தொற்றின் முன்பு இல்லாத சில பொதுவான அறிகுறிகள் தற்போது ஆரம்ப கால அறிகுறிகளாக செயல்படுகின்றன மற்றும் கவனத்தையும் ஈர்க்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அறிகுறி தான் உடல் சோர்வு.

|

கொரோனா இரண்டாவது அலையில் பெருந்தொற்றின் எண்ணிக்கை இருமடங்கு வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இருமல் அல்லது காய்ச்சல் மட்டும் இந்நோய்த்தொற்றின் அறிகுறிகள் அல்ல என்பது நன்கு தெரிகிறது. மேலும் இந்நோய்த்தொற்றின் முன்பு இல்லாத சில பொதுவான அறிகுறிகள் தற்போது ஆரம்ப கால அறிகுறிகளாக செயல்படுகின்றன மற்றும் கவனத்தையும் ஈர்க்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அறிகுறி தான் உடல் சோர்வு.

Coronavirus Symptoms: Is Your Fatigue An Early Sign Of Coronavirus?

பொதுவாக சோர்வு என்பது பல்வேறு காரணிகளால் ஒருவர் சந்திக்கும் ஒரு பொதுவான அறிகுறியாகும். அதில் நீரிழப்பு, மன அழுத்தம், நாள்பட்ட நோய் அல்லது மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, கோவிட் சோர்வை மற்ற வகை சோர்வுகளில் இருந்து எவ்வாறு வேறுபடுத்துவது? எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டாம் அலையில் சோர்வு அதிகம் காணப்படுகிறதா?

இரண்டாம் அலையில் சோர்வு அதிகம் காணப்படுகிறதா?

சோர்வு என்பது கோவிட்-19 இன் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்ட ஒரு அறிகுறியாகும். முன்னதாக கோவிட்-19 இன் கடுமையான வடிவங்களுடன் தொடர்புடையது என்றாலும், கொரோனாவின் முக்கிற அறிகுறிகளை சந்திப்பதற்கு முந்தைய நாட்களில் இருந்து அதிகளவு சோர்வை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும், அது நீண்ட காலமாக நீடிக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அறிகுறியின் தீவிரம் புறக்கணிக்கப்படாத அளவுக்கு தொடர்ந்து இருக்கக்கூடும். மேலும் குழந்தைகள் உட்பட எந்த வயதினருக்கும், இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் இது ஏற்படலாம்.

சோர்வு மற்றும் பலவீனம், கோவிட்-19 இன் பொதுவான அறிகுறியா?

சோர்வு மற்றும் பலவீனம், கோவிட்-19 இன் பொதுவான அறிகுறியா?

சோர்வு என்பது கோவிட் தொற்றிற்கு மட்டுமின்றி, பிற வைரஸ் தொற்றுகளுக்கும் பொதுவான அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும், கொரோனா தொற்று அறிகுறியின் தீவிரம் மற்றும் காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் வெளியாகும் சைட்டோகைன்கள் காரணமாக சோர்வு ஏற்படுவதால் தொற்று மற்றும் அழற்சியைப் போக்கும். ஆகவே தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய பின், ஆரம்ப கட்டத்தில் கூட ஒருவர் மந்தமானவராகவும், சோர்வாகவும், கடுமையான சோர்வையும் அனுபவிக்கவும் முடியும். ஆனால் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, தற்போது உடல் சோர்வு கோவிட்-19 நோய்த்தொற்றின் மூன்றாவது பொதுவான அறிகுறியாகும்.

சாதாரண உடல் சோர்வில் இருந்து கோவிட் சோர்வு எவ்வாறு வேறுபடுகிறது?

சாதாரண உடல் சோர்வில் இருந்து கோவிட் சோர்வு எவ்வாறு வேறுபடுகிறது?

சோர்வு மற்றும் களைப்பு மிகவும் ஒத்ததாக இருக்கும். ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டிற்கும் இடையே குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் உள்ளன. மருத்துவ ரீதியாக பார்த்தால், உடலின் ஆற்றல் அளவு குறையும் போது, சோர்வு ஒரு பொதுவான புகாராக இருக்கலாம். இது சில மணிநேரங்களுக்கு நீடிக்கும். ஆனால் நல்ல ஓய்விற்கு பிறகு இது சரியாகிவிடும்.

அதுவே, கோவிட் சோர்வை எடுத்தால், இது நீண்ட காலம் நீடிக்கும், எந்தவொரு சிறு பணிகளையும் மேற்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும் மற்றும் எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் நீடித்திருக்கும்.

சாதாரண சோர்வு ஒருவரை மிகவும் மந்தமாகவும், கடுமையான உடல் வலி மற்றும் ஆற்றல் இல்லாமையை உணர வைக்கும். ஆனால் கோவிட் சோர்வை எடுத்தால், அதன் தீவிரமும், கால அளவும் வித்தியாசமாக இருக்கும் என்பது மட்டுமின்றி, இது வேறு சில அறிகுறிகளுடனும் சேர்ந்து இருக்கலாம். இதை வைத்து ஒருவருக்கு இருப்பது சாதாரண சோர்வா அல்லது கோவிட் சோர்வா என்பதை அறியலாம். கீழே கோவிட் சோர்வுடன் சேர்ந்து அனுபவிக்கும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சோர்வு மற்றும் உடல்நலக் குறைவு

சோர்வு மற்றும் உடல்நலக் குறைவு

உடல்நலக் குறைவு மற்றும் சோர்வு போன்றவை வைரஸ் தொற்றுகள் மற்றும் குறிப்பிட்ட சில குறைபாடுகளின் அறிகுறிகளாக இருக்கலாம். இவை இரண்டுமே அழற்சியின் அறிகுறியாக இருக்கும் போது, சில வல்லுநர்கள் அவற்றை உண்மையான நோயின் முன்னோடி என விவரிக்கிறார்கள். மேலும் இதனால் ஒருவர் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும் மற்றும் படுக்கையில் இருந்து கூட எழ முடியாத அளவில் மிகுந்த சிரமத்தை சந்திக்கக்கூடும்.

பலவீனம் மற்றும் தலைச்சுற்றல்

பலவீனம் மற்றும் தலைச்சுற்றல்

பலவீனமாக இருப்பது, தலைச்சுற்றுவது போன்றவை உடல்நிலை சரியில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். விவரிக்க முடியாத அளவிலான உடல் பலவீனத்தை அனுபவிப்பது, குளிர்வது அல்லது வழக்கத்திற்கு மாறாக சூடாகவோ அல்லது குளிராகவோ உணர்வது போன்றவை உடல் அழற்சியை எதிர்த்துப் போராடுகின்றன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

பிளேட்லெட் எண்ணிக்கை குறைவது

பிளேட்லெட் எண்ணிக்கை குறைவது

சோர்வுடன், பிளேட்லெட் எண்ணிக்கையும் குறைவது தற்போது எளிதில் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் இது கோவிட்டின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை ஒருவர் புறக்கணித்தால், அது அபாயகரமாவதோடு, நோயறிதலையும் மோசமாக்கும். எனவே கடுமையான உடல் சோர்வை அனுபவித்தால், சற்றும் புறக்கணிக்காமல் உடனே சோதனை செய்யுங்கள்.

தசை வலிகள் மற்றும் பிற வலிகள்

தசை வலிகள் மற்றும் பிற வலிகள்

சோர்வு என்பது காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறலுக்கு முன் சந்திக்கும் ஒரு பொதுவாக அறிகுறியாக இருக்கக்கூடும். ஆரம்ப கட்ட சோர்வு மற்றும் பலவீனம், தசை வலி, உடல் வலி ஆகியவற்றுடன் சேர்ந்து இருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தசை வலியும் ஒரு கோவிட் அறிகுறியாகும். இது மிகவும் கடினமாக இருப்பதோடு, முதுகு, மூட்டுக்களில் கூர்மையான வலியை ஏற்படுத்தும் அல்லது நீங்கா தலைவலியை உண்டாக்கும். ஆகவே நீங்கள் அசாதாரண வலியை அனுபவிக்க ஆரம்பித்தால், எச்சரிக்கையாக இருங்கள்.

வேறு எந்த அறிகுறிகளை சோதிக்க வேண்டும்?

வேறு எந்த அறிகுறிகளை சோதிக்க வேண்டும்?

பல சந்தர்ப்பங்களில் சோர்வு மற்றும் பலவீனம் நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். அதன் பின்னர் காய்ச்சல், இருமல், மார்பு வலி, குளிர் அல்லது மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிற அறிகுறிகள் வெளிப்படலாம். எனவே நீங்கள் அனுபவிக்கும் சோர்வு கோவிட்-19 உடன் இணைக்கப்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேம் கொண்டால், நோய்த்தொற்றின் பிற அறிகுறிகளையும் கவனியுங்கள். கொரோனா வைரஸ் பிறழ்ந்து வருவதால், சருமத்தில் தடிப்புகள், சிவந்த கண்கள் மற்றும் இரைப்பைக் குடல் அறிகுறிகள் போன்றவற்றையும் சந்திக்கலாம்.

குறிப்பு

குறிப்பு

கோவிட் சோர்வு பொதுவாக மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாள்பட்ட சோர்வு, களைப்பு போன்றவை 2-3 நாட்களுக்கும் மேலாக நீடித்திருந்தால் மற்றும் கோவிட்டின் பிற அறிகுறிகளும் உங்களிடம் தென்பட்டால், உங்களுக்கு ஒரு கோவிட் சோதனை தேவை மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். எனவே கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Symptoms: Is Your Fatigue An Early Sign Of Coronavirus?

Coronavirus symptoms: Is your fatigue an early sign of coronavirus? Here's what you should know..
Desktop Bottom Promotion