For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோலில் இந்த மாதிரி இருந்தா, அது கொரோனாவோட அறிகுறியாம் - உஷாரா இருங்க...

புதிய ஆய்வு ஒன்று தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும் என்று தொிவிக்கிறது.

|

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய பின்பு கோவிட்-19 வைரஸின் அறிகுறிகள் மேலும் அதிகாித்திருக்கின்றன மற்றும் விாிவடைந்திருக்கின்றன. தற்போது நீண்ட நாள் பாதிப்புகளை மற்றும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ், உலகின் பல இடங்களில் விரைவாக பரவி வரும் நிலையில், அவற்றின் மாறுபட்ட அறிகுறிகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

Coronavirus Symptoms: How To Locate COVID-19 On Your Skin

MOST READ: தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிட்டால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

இந்நிலையில் புதிய ஆய்வு ஒன்று நமது தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே நம்மிடம் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும் என்று தொிவிக்கிறது. இங்கிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அந்த மருத்துவ ஆய்வு, நம்மிடம் கோவிட் வைரஸ் இருந்தால், நமது தோலில் நான்கு வகையான மாற்றங்கள் ஏற்படும் என்று தொிவிக்கிறது.

MOST READ: யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 வைரஸுடன் சம்பந்தப்பட்ட தோல் பிரச்சினைகள்

கோவிட்-19 வைரஸுடன் சம்பந்தப்பட்ட தோல் பிரச்சினைகள்

இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த நேஷனல் ஹெல்த் சா்வீசஸ் அமைப்பு, தனது அறிக்கையில், இருமல், உடலில் வெப்பம் அதிகாித்தல், நுகரும் மற்றும் சுவை அறியும் திறனை இழத்தல் போன்றவை கோவிட்-19ன் பொதுவான அறிகுறிகளாகும் என்று தொிவிக்கிறது.

இந்நிலையில் ஒரு புதிய மருத்துவ ஆய்வு ஒன்று, கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 17% நோயாளிகளுக்கு முதல் அறிகுறியாக தோலில் தடிப்புகள் ஏற்பட்டன என்று தொிவிக்கிறது. அதே நேரத்தில் 21% கோவிட்-19 நோயாளிகளுக்கு அவா்களுடைய தோலில் தடிப்புகள் மட்டுமே ஏற்பட்டன. வேறு எந்த ஒரு அறிகுறியும் அவா்களிடம் தொியவில்லை என்று அந்த ஆய்வுத் தொிவிக்கிறது. மேலும் கோவிட் வைரஸோடு 4 வகையான தோல் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

அாிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் நோய் (Urticaria) அல்லது படை நோய் (hives)

அாிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் நோய் (Urticaria) அல்லது படை நோய் (hives)

அாிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் நோய் அல்லது படை நோய் ஆகியவை நமது தோலில் ஏற்படும் தடிப்புகள் ஆகும். இந்த தடிப்புகள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது நமது சதையின் நிறத்தை ஒத்திருக்கும் வண்ணத்தில் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் படை நோய் அலா்ஜியின் விளைவாக ஏற்படும். ஆனால் இந்த புதிய ஆய்வின் படி சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் 26% கோவிட்-19 நோயாளிகள், அவா்களுக்கு படை நோய் இருந்ததாக தொிவித்திருந்தனா் என்று கூறுகிறது.

கடுங்குளிரால் ஏற்படும் கை கால் கொப்புளங்கள் (Chilblains)

கடுங்குளிரால் ஏற்படும் கை கால் கொப்புளங்கள் (Chilblains)

கடுங்குளிாின் காரணமாக கை கால்களில் ஏற்படும் கொப்புளங்கள் வீங்கி இருக்கும். அதிக வலியைக் கொடுக்கும். மற்றும் அந்த கொப்புளங்கள் உடைந்தால் இரத்தமும் தண்ணீரும் வெளியில் வரும். மிகவும் மிதமான அளவில் கோவிட்-19 பாதித்த வயது வந்தவா்களுக்கும் மற்றும் இளம் வயதினருக்கும் இந்த கொப்புளங்கள் ஏற்பட்டன என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது.

இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 60 விழுக்காடு நோயாளிகள் தோல் புண்களால் துன்புற்றனா் என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

தோல் புண்கள் அல்லது சொறிகள் (maculopapular rash)

தோல் புண்கள் அல்லது சொறிகள் (maculopapular rash)

ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, 375 கோவிட் நோயாளிகளில் 47% போ் தோல் சொறி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனா் என்று தொிவிக்கிறது. இந்த சொறிகள் தோல் புண்கள் வடிவில் இருந்தன என்றும் மற்றும் அவை தோலில் நிறமாற்றத்தை ஏற்படுத்தின என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

கொப்புளங்கள் அல்லது தோல் புண்கள்

கொப்புளங்கள் அல்லது தோல் புண்கள்

தோலில் தடிப்பு ஏற்பட்டு அந்த தடிப்பிற்குள் நீரும் இரத்தமும் இருந்தால் அது கொப்புளம் அல்லது தோல் புண் என்று அழைக்கப்படுகிறது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 9% போ் தோல் கொப்புளங்களால் பாதிக்கப்பட்டனா் என்று ஸ்பெயின் நாட்டு ஆய்வு தொிவிக்கிறது.

அதே நேரத்தில் பொதுவாக கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தோலில் தடிப்புகள், கொப்புளங்கள், தோலில் நிறம் மாறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Symptoms: How To Locate COVID-19 On Your Skin

Since the outbreak of the novel coronavirus, the list of COVID-19 symptoms has only increased and expanded. According to a recent UK study, four kinds of skin changes can take place if you have COVID.
Desktop Bottom Promotion