For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் முக்கியமான அறிகுறிகள்... அலட்சியமா இருக்காதீங்க...!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

|

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மாநிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன, இது சுகாதார அமைப்பு சரிவின் விளிம்பிற்கு தள்ளப்படுகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Coronavirus Second Wave: Most COVID Patients Experience These Symptoms

கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலை அதன் அறிகுறிகளிலும் வித்தியாசமாக உள்ளது. கொரோனாவின் இந்த திரிபு மற்றும் அதன் தோற்றம் மேலும் கவலைகளை அதிகரித்துள்ளது. இந்த திரிபு மிகவும் வலுவாக இருப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாத அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டாவது அலை

இரண்டாவது அலை

கொரோனாவின் இரண்டாவது அலையில் சிலர் கடுமையான சிக்கல்களையும் சந்திக்கின்றனர். வைரஸ் சில முக்கிய உறுப்புகளுடன் கூடிய நோயெதிர்ப்பு பாதுகாப்பிலிருந்து விரைவாக தப்பிக்கக்கூடும் என்றும், மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து வழிகளிலும் தாக்குதலை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட அனைவரும் காய்ச்சலை பிரதான அறிகுறியாக கொண்டுள்ளனர்.

புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

இது போன்ற ஒரு நேரத்தில், முக்கியமானது என்னவென்றால் COVID நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதும், மிக முக்கியமாக, அறிகுறிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்திக் கொள்வதும்தான். COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெவ்வேறு அறிகுறிகள் இருக்கலாம், ஆனால் பின்வரும் அறிகுறிகள்தான் இப்போது பாசிட்டிவ் கேஸ்களில் பொதுவாகக் காணப்படுகின்றன.

தொண்டை வலி

தொண்டை வலி

தொண்டையில் வலி மற்றும் வீக்கம் உள்ளது போன்ற நீங்கள் உணரலாம். இது தொண்டை புண்ணின் குறிகாட்டிகளாக இருக்கலாம். COVID-19 நோய்த்தொற்றில் பொதுவாக அனுபவிக்கும் அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும், இது உலகளவில் 52% க்கும் மேற்பட்ட வழக்குகளில் காணப்படுகிறது. தொண்டை புண் உங்கள் தொண்டையில் உண்மையில் வலியை ஏற்படுத்துகிறது அல்லது எரிச்சல் அடைகிறது. சிலர் லேசான எரியும் அல்லது அரிப்பு உணர்வை அனுபவிக்கிறார்கள், இது உணவு அல்லது தண்ணீரை விழுங்கும்போது மோசமாகிவிடும்.

சோர்வு

சோர்வு

இருமல் மற்றும் தொண்டை புண் தவிர, ஏராளமான COVID நோயாளிகள் இப்போது பலவீனமான நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறியாக அனுபவிப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கவனித்துள்ளனர். எந்தவொரு வைரஸ் தொற்றுநோயிலும் சோர்வு ஒரு பொதுவான அறிகுறியாக இருந்தாலும் கொரோனவைப் பொறுத்தவரையில் அதைச் சமாளிப்பது மிகவும் கடினம். கொரோனா தொற்று பல அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும் என்பதால், சோர்வு பெரும்பாலும் அதன் விளைவாக இருக்கலாம்.

தசை மற்றும் உடல் வலி

தசை மற்றும் உடல் வலி

தசை வலிகள் தங்களது முதன்மை COVID அறிகுறியாக இப்போது புகாரளிக்கும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தசை வலி, மூட்டு வலி, உடல் வலி அனைத்தும் வைரஸுடன் போராடுவதற்கான ஸ்னீக்கி அறிகுறிகளாக இருக்கலாம். தசை வலிகள் மற்றும் உடல் வலிகள் இருப்பதற்கான முக்கிய காரணம் மயால்ஜியா ஆகும், இது வைரஸ் முக்கியமான தசை நார்களை மற்றும் திசு லைனிங்கைத் தாக்கும் விளைவாகும். பரவலான வீக்கம் தொற்றுநோய்களின் போது மூட்டு வலி, பலவீனம் மற்றும் உடல் வலி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

குளிருடன் காய்ச்சல்

குளிருடன் காய்ச்சல்

தீவிர குளிர்ச்சி அல்லது வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை உணருவது வைரஸைக் குறிப்பதற்கான அறிகுறியாகும். உண்மையில், குறைந்த அளவு காய்ச்சலுடன் கூடிய குளிர் மற்றும் நடுக்கம் ஆரம்ப நாட்களில் தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆரம்ப நாட்களில் தொற்றுநோய்க்கான அறிகுறிகளாக இப்போது பார்க்கப்படுகின்றன. வயிற்றுப்போக்கு மற்றும் தளர்வான மலம் ஆகியவை மிதமான அல்லது கடுமையான நோய்த்தொற்றின் குறிகாட்டியாக இருக்கலாம்.

தலைச்சுற்றல்

தலைச்சுற்றல்

பல நோயாளிகளில், நோய்த்தொற்றின் நரம்பியல் அறிகுறிகள் தலைச்சுற்றல், சோர்வு, உடல்நலக்குறைவு மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளையும் சுழற்றக்கூடும். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது அது என்னவென்றால், உங்கள் சோர்வு COVID-19 அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவதை கடினமாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Second Wave: Most COVID Patients Experience These Symptoms

According to doctors most COVID+ patients experience these symptoms in Coronavirus second wave.
Desktop Bottom Promotion