For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இத' உணவில் அதிகமா சேர்த்துக்கிட்டா உங்க நோயெதிர்ப்பு சக்தி குறைவதோடு மாரடைப்பு வர வாய்ப்பிருக்காம்!

நம் தோல் உப்புத் தேக்கமாக செயல்படுகிறது என்பதையும் இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உடல் இரத்தத்திலும் பல்வேறு உறுப்புகளிலும் உப்பு செறிவை பெரும்பாலும் சீராக வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

|

சமையலில் உப்பு மிகமிக அவசியாமானது. உப்பில்லா பண்டம் குப்பைக்கு என்ற பழமொழிக்கு ஏற்ப உப்பில்லா உணவை உண்ண முடியாது. காரமான உணவைப் பொறுத்தவரை, உப்பு தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். நாம் உண்ணும் மற்ற எல்லா உணவுகளிலும் சில அளவு உள்ளது. எந்த உணவுப் பொருளை நாம் பயன்படுத்தினாலும், அதை சரியான அளவு பயன்படுத்த வேண்டும். உப்பும் அதுபோலதான். அதன் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிக உப்பு நல்லதா? நிச்சயமாக இல்லை. அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், பல சிக்கல்களையும் இது ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Coronavirus and immunity: Why you should add less salt while cooking

சமீபத்திய ஆய்வின்படி, இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியத்திலிருந்து நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது முக்கியம். இக்கட்டுரையில், நீங்கள் சமைக்கும்போது ஏன் குறைந்தளவு உப்பை பயன்படுத்தத வேண்டும் என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு மற்றும் உணவு நோய் எதிர்ப்பு சக்தி

உப்பு மற்றும் உணவு நோய் எதிர்ப்பு சக்தி

யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் பான் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தி சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, அதிக உப்பு கலந்த உணவு மிகவும் கடுமையான பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில், தன்னார்வலர்கள் ஒரு நாளைக்கு கூடுதலாக ஆறு கிராம் உப்பை உட்கொண்டனர், அவர்களுக்கு நோயெதிர்ப்பு குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து கிராம் உப்பை உட்கொள்ள பரிந்துரைக்கிறது. இது ஒரு தேக்கரண்டிக்கு சமம். இந்தளவு எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

அதிக உப்பு கொண்ட உணவு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் அதன் மூலம் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் பலவீனப்படுத்துகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மனித தோல் ஒரு உப்பு நீர்த்தேக்கம்

மனித தோல் ஒரு உப்பு நீர்த்தேக்கம்

பொதுவாக நம் தோலில் உப்பு தன்மை இருக்கும். நம் தோல் உப்புத் தேக்கமாக செயல்படுகிறது என்பதையும் இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உடல் இரத்தத்திலும் பல்வேறு உறுப்புகளிலும் உப்பு செறிவை பெரும்பாலும் சீராக வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலின் உப்பு தேக்கமாக செயல்படும் தோல் மட்டுமே முக்கிய விதிவிலக்கு. அதனால்தான் சோடியம் குளோரைடு கூடுதலாக உட்கொள்வது சில தோல் நோய்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இருப்பினும், உடலின் மற்ற பாகங்கள் உணவுடன் உட்கொள்ளும் கூடுதல் உப்புக்கு வெளிப்படுவதில்லை. மாறாக, சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது.

சமைக்கும் போது உப்பு சேர்ப்பதை எப்படி குறைப்பது மற்றும் எது சிறந்த உப்பு?

சமைக்கும் போது உப்பு சேர்ப்பதை எப்படி குறைப்பது மற்றும் எது சிறந்த உப்பு?

காய்கறிகளில் குறைந்த அளவு தண்ணீர் சேர்க்கவும், இந்த விஷயத்தில், உங்களுக்கு குறைந்த உப்பு தேவைப்படும்

இறுதியில் உப்பு சேர்க்கவும்

சாலட்களில் உப்பை தவிர்க்கவும்

சாப்பிடும்போது அதிக ஊறுகாயைப் பயன்படுத்த வேண்டாம்

உங்கள் குழம்பு அல்லது கறியில் உப்பு அதிகமாக இருந்தால், அதிக சாஸ்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும்

கேக்குகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் குக்கீகளில் நீங்கள் விரும்பும் இடத்தில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

ஒருவர் முயற்சி செய்யக்கூடிய உப்பு மாற்று என்ன?

ஒருவர் முயற்சி செய்யக்கூடிய உப்பு மாற்று என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, சில மசாலா மற்றும் மூலிகைகள் உணவுகளுடன் தடையின்றி கலக்கின்றன மற்றும் உணவின் சுவையை அதிகரிக்க உப்புக்கு மாற்றாக பயன்படுத்தலாம். உதாரணமாக, எலுமிச்சை சாறு, கருப்பு மிளகு, உலர்ந்த வெங்காயம், வெங்காயத் தூள், ஊட்டச்சத்து ஈஸ்ட் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்து சுவையாக மாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus and immunity: Why you should add less salt while cooking

Here we are talking about the Coronavirus and immunity: Why you should add less salt while cooking.
Story first published: Wednesday, December 29, 2021, 12:33 [IST]
Desktop Bottom Promotion