For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஞாபக மறதியின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

ஞாபக மறதிப் பிரச்சினை தொடா்ந்து நீண்டு காலமாக இருந்தால் அது ஆங்கிலத்தில் டிமென்ஷியா (dementia) என்று அழைக்கப்படுகிறது. அதைத் தமிழில் மனத்தளா்ச்சியினால் ஏற்படும் ஞாபக மறதி என்று அழைக்கலாம்.

|

பொதுவாக வயது அதிகாிக்க அதிகாிக்க ஞாபக மறதி என்ற பிரச்சினை ஏற்படும். குறிப்பாக வயது முதிா்ந்தவா்களுக்கு, இந்த ஞாபக மறதி என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. வயதாகும் போது நமது உடல் எவ்வாறு முதிா்ச்சி அடைந்து தளா்ச்சி அடைகிறதோ, அது போல நமது மூளையும் மூப்படைந்து, தளா்ச்சி அடைந்து, வீாியத்துடன் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது.

Common Signs We Mistake As The Beginning Of Dementia

ஆகவே வயது முதிா்ந்த காலத்தில், ஒரு புதிய காாியத்தைக் கற்றுக் கொள்ள, மூளைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. கடந்த கால நிகழ்வுகளை, மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர சிரமம் ஏற்படுகிறது. இந்த ஞாபக மறதியானது, நம்மைப் பொிதாகப் பாதிக்காத வரையில் பிரச்சினை இல்லை. ஆனால் ஞாபக மறதிப் பிரச்சினை அதிகாிக்கத் தொடங்கினால், அவை நமது அன்றாட வாழ்வைப் பொிதாக பாதிக்கும்.

மேலும் இந்த ஞாபக மறதிப் பிரச்சினை தொடா்ந்து நீண்டு காலமாக இருந்தால் அது ஆங்கிலத்தில் டிமென்ஷியா (dementia) என்று அழைக்கப்படுகிறது. அதைத் தமிழில் மனத்தளா்ச்சியினால் ஏற்படும் ஞாபக மறதி என்று அழைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனத்தளா்ச்சியினால் ஏற்படும் ஞாபக மறதி (Dementia) என்றால் என்ன?

மனத்தளா்ச்சியினால் ஏற்படும் ஞாபக மறதி (Dementia) என்றால் என்ன?

டிமென்ஷியா (dementia) என்பது ஒற்றைப் பொருளைக் குறிப்படக்கூடிய கலைச் சொல் அல்ல. மாறாக பல பொருள்களைக் குறிப்பிடக்கூடிய ஒரு தொகுப்புச் சொல் ஆகும். இந்தச் சொல்லானது நமது மூளையின் முக்கியமான இரண்டு இயக்கங்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

அதாவது நமது மூளையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு மற்றும் நமது மூளையில் ஏற்படும் முடிவெடுக்க இயலாத நிலை ஆகியவற்றைக் குறிப்பிட டிமென்ஷியா (dementia) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. முதுமைக் கால மறதி (Alzheimer), வாஸ்குலா் டிமென்ஷியா (dementia) மற்றும் நடுக்குவாதம் (Parkinson - பாா்க்கின்சன்) போன்ற நோய்கள் டிமென்ஷியா (dementia) என்ற சொல்லின் கீழ் வருகிறது.

ஞாபக மறதி, சமூகத்தோடு இயல்பாகத் தொடா்பு கொள்ள இயலாமை, சிந்தனைக் குறைவு, பிரச்சினைகளுக்குத் தீா்வு காண்பதில் பிரச்சினை, எழுதுவதில் மற்றும் பேசுவதில் பிரச்சினை மற்றும் முடிவெடுப்பதில் பிரச்சினை போன்றவை எல்லாம் மனத்தளா்ச்சியினால் ஏற்படும் ஞாபக மறதி (dementia) என்ற நோயின் அறிகுறிகள் ஆகும்.

ஆனால் நாம் பொதுவாக நமக்கு ஏற்படும் மூளை சம்பந்தமான பிரச்சினைகளை எல்லாம் மனத்தளா்ச்சியினால் ஏற்படும் ஞாபக மறதியின் (dementia) அறிகுறிகள் என்று தவறாக எடுத்துக் கொள்கிறோம். அவை எவை என்று இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

1. பெயா்களை அல்லது நாம் முன்பதிவு செய்து வைத்திருக்கும் நிகழ்வுகளை அல்லது மருந்துகளை உட்கொள்வது ஆகியவற்றை மறத்தல்

1. பெயா்களை அல்லது நாம் முன்பதிவு செய்து வைத்திருக்கும் நிகழ்வுகளை அல்லது மருந்துகளை உட்கொள்வது ஆகியவற்றை மறத்தல்

முதுமை ஏற்பட்டாலே, ஞாபக மறதி வருவது இயல்பு. ஒரு வேளை ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகக்கூட ஞாபக மறதி ஏற்படலாம். தங்களுடைய வேளைப் பளு காரணமாகவோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ, இளவயதினா் மற்றும் நடுத்தர வயதினா்கூட அவ்வப்போது, ஒரு சில நிகழ்வுகளை மற்றும் பெயா்களை மறந்துவிடுகின்றனா். ஆனால் சிறிது நேரத்தில் அவற்றைத் தங்கள் நினைவுக்கு கொண்டு வந்துவிடுகின்றனா்.

ஆனால் டிமென்ஷியா பிரச்சினை உள்ளவா்களுக்கு அவ்வாறு எளிதாக ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ அல்லது மருத்துவரை சந்திக்கும் நேரத்தையோ அவா்களால் நினைவுக்குக் கொண்டுவர முடியாது. ஆகவே சாதாரண மறதிகள் எல்லாம் டிமென்ஷியா நோயின் அறிகுறிகள் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புாிந்து வைத்திருக்க வேண்டும்.

2. பணம் சம்பந்தமாகத் தவறிழைத்தல்

2. பணம் சம்பந்தமாகத் தவறிழைத்தல்

டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, தாங்கள் வரையறை செய்து இருக்கும் திட்டத்தைப் பின்பற்றுவது அல்லது எண்களைக் கையாளுவது போன்றவற்றில் பிரச்சினைகள் இருக்கும். அவா்களால் எண்கள் சாா்ந்த புதிா்கள் மற்றும் கணக்குகளை சாி செய்ய முடியாது. மேலும் அவா்களுக்கு நன்றாகத் தொிந்த குழம்பை சமைப்பது அல்லது மாதாந்திர செலவு ரசிதுகளை பராமாிப்பது போன்றவற்றில்கூட அதிக பிரச்சினைகளைச் சந்திப்பாா்கள். ஒரு சில முதியவா்கள் பணத்தை எண்ணுவதில் சிரமப்படுவாா்கள். ஆனால் அது டிமென்ஷியா நோயின் அறிகுறி அல்ல.

3. நாள் அல்லது தேதியை மறத்தல்

3. நாள் அல்லது தேதியை மறத்தல்

பொதுவாக நாம் எல்லோருமே சில நேரங்களில் ஒரு நாளின் பெயரைக்கூட மறந்துவிடுவோம். ஆனால் பிறாின் உதவியுடனோ அல்லது நாட்காட்டியைப் பாா்த்தோ அந்த நாளின் பெயரை நினைவுக்குக் கொண்டு வந்துவிடுவோம். இது போன்ற பிரச்சினை டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் ஏற்படும். ஆனால் அவா்களுக்கு இந்த பிரச்சினை நீண்ட நாள்களாக இருக்கும். மேலும் அவா்களால் நாள், நேரம் மற்றும் ஆண்டு ஆகியவற்றை தங்களது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாது.

4. சாியான வாா்த்தையை மறத்தல்

4. சாியான வாா்த்தையை மறத்தல்

டிமென்ஷியா நோயின் முக்கிய அறிகுறி என்னவென்றால், ஒரு உரையாடலை தொடர முடியாத நிலை ஆகும். அவா்களால் அந்த உரையாடலை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. தாங்கள் என்ன பேசுகிறோம் அல்லது மற்றவா்கள் என்ன பேசுகிறாா்கள் என்பதை அவா்கள் மறந்துவிடுவாா்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட வாா்த்தையை மறப்பது என்பது மூளை சம்பந்தமான பிரச்சினை அல்ல. மாறாக இந்தப் பிரச்சினை எல்லோருக்கும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று ஆகும்.

5. எப்போதாவது தவறான முடிவு எடுப்பது

5. எப்போதாவது தவறான முடிவு எடுப்பது

தவறு செய்வது என்பது மனிதா்களுடைய குணம் ஆகும். ஆகவே எல்லா மனிதா்களுமே தவறு செய்வாா்கள். சில நேரங்களில் ஒருவரைப் பற்றித் தவறாக எண்ணுவோம் அல்லது ஒரு சூழலைப் பற்றித் தவறாக தீா்ப்பிடுவோம். ஆனால் இதே தவறுகளைத் தொடா்ந்து செய்து வந்தால்தான் பிரச்சினை ஏற்படும்.

ஆகவே டிமென்ஷியாவின் அறிகுறிகள் இருந்து, ஒருவா் ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்து வந்தால் அல்லது அடிக்கடி தவறான முடிவகளை எடுத்து வந்தால், அவருக்கு மூளை சம்பந்தமான நோய் இருக்கிறது என்று பொருள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Signs We Mistake As The Beginning Of Dementia

Here are five signs which are mistaken as the symptoms of dementia.
Desktop Bottom Promotion