For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிட் பூஸ்டர் டோஸ் குறித்து பலரது மனதில் எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்...

கோவிட் பூஸ்டர் டோஸ், 2022 ஜனவரி 10 ஆம் தேதியில் இருந்து முன்கள பணியாளர்களுக்கு மற்றும் வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்போது பூஸ்டர் டோஸ் தொடர்பான சில கேள்விகளுக்கான பதிலை அறிவோம்.

|

கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை பெரும் அழிவை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் அலை பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மோசமான அளவில் உள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கொரோனாவின் வழக்குகள் குறைந்து வந்த நிலையில், தற்போது கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிவேகமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைப் பார்க்கும் போது பலரது மனதிலும் அச்சம் எழுகிறது.

Common Questions Related To The Booster Dose In Tamil

கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 இன் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலகெங்கிலும் பரவி வருகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த வகை கோவிட் மாறுபாடு பரவியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மீண்டும் லாக்டவுன் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வழக்குகள் புயல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூஸ்டர் டோஸ்/மூன்றாவது டோஸ்

பூஸ்டர் டோஸ்/மூன்றாவது டோஸ்

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் இரண்டு டோஸ்களை மக்களுக்கு போட்டால், கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடுவதோடு, அதனால் ஏற்படும் ஆபத்து தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டன. ஆனால் தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது, அது முற்றிலும் மாறுபட்டு தெரிகிறது. அதோடு மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட வேண்டுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த கோவிட் பூஸ்டர் டோஸ், 2022 ஜனவரி 10 ஆம் தேதியில் இருந்து முன்கள பணியாளர்களுக்கு மற்றும் வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பிரச்சாரத்தின் போது கொமொர்பிடிட்டி சான்றிதழ் விவரங்களை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மொத்தம் 22 நோய்கள் அரசின் கூட்டு நோய்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

* சர்க்கரை நோய், சிறுநீரக நோய் அல்லது டயாலிசிஸ்

* இதய நோய்

* ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை

* புற்றுநோய்

* சிரோசிஸ்

* சிக்கிள் செல் நோய்

* ஸ்டெராய்டுகளின் நீண்ட கால பயன்பாடு

* நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள்

* தசைநார் சிதைவு

* சுவாச அமைப்பில் ஆசிட் தாக்குதல்

* செவிடு-குருட்டுத்தன்மை போன்ற பல குறைபாடுகள்

* கடுமையான சுவாச நோயினால் இரண்டு வருடங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்

இப்போது பூஸ்டர் டோஸ் தொடர்பான சில கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து கொள்வோம்.

1. பூஸ்டர் தடுப்புசியாக எந்த தடுப்பூசியை போட வேண்டும்?

1. பூஸ்டர் தடுப்புசியாக எந்த தடுப்பூசியை போட வேண்டும்?

பூஸ்டர் டோஸ் என்பது நீங்கள் முதல் இரண்டு டோஸ்களுக்கு எந்த தடுப்பூசியை எடுத்தீர்களோ, அதையே பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. இரண்டாவது டோஸுக்கும், பூஸ்டர் டோஸுக்கும் எவ்வளவு கால இடைவெளி இருக்க வேண்டும்?

2. இரண்டாவது டோஸுக்கும், பூஸ்டர் டோஸுக்கும் எவ்வளவு கால இடைவெளி இருக்க வேண்டும்?

பூஸ்டர் டோஸை இரண்டாவது டோஸ் எடுத்த பிறகு குறைந்தது 9 மாதங்கள் இடைவெளிக்கு பின் எடுப்பது நல்லது.

3. முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களில் உள்ள அதே முன்னெச்சரிக்கைகள் பூஸ்டர் டோஸின் போதும் அவசியம் பின்பற்ற வேண்டுமா?

3. முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களில் உள்ள அதே முன்னெச்சரிக்கைகள் பூஸ்டர் டோஸின் போதும் அவசியம் பின்பற்ற வேண்டுமா?

ஆம், முதல் மற்றும் இரண்டாவது டோஸின் போது பின்பற்றப்பட்ட அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பூஸ்டர் டோஸின் போதும் எடுக்க வேண்டும். மேலும் வெறும் வயிற்றில் தடுப்பூசி எடுக்காதீர்கள். மேலும் தடுப்பூசி போட செல்லும் போது மாஸ்க் அணியுங்கள் மற்றும் தடுப்பூசிக்கு பிறகு நன்கு ஓய்வெடுங்கள்.

4. பூஸ்டர் டோஸ் போட்ட பிறகும் காய்ச்சல் வருமா?

4. பூஸ்டர் டோஸ் போட்ட பிறகும் காய்ச்சல் வருமா?

அனைவருக்குமே காய்ச்சல் வரும் என்று கூறிவிட முடியாது. அது ஒவ்வொருவருக்கு மாறுபடும். ஆனால் பூஸ்டர் டோஸ் போட்ட பின்னர் காய்ச்சல் வரலாம் அல்லது வராமலும் போகலாம்.

5. பூஸ்டர் டோஸுக்கு பிறகு ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

5. பூஸ்டர் டோஸுக்கு பிறகு ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?

பூஸ்டர் டோஸுக்கு பிறகு ஒருவரது உடலில் ஆன்டிபாடிகளானது 3 முதல் 6 மாதங்கள் வரை நீடித்திருக்கும்.

6. பூஸ்டர் டோஸ் மக்களில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை/ஹெர்டு இம்யூனிட்டியை வளர்க்குமா?

6. பூஸ்டர் டோஸ் மக்களில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை/ஹெர்டு இம்யூனிட்டியை வளர்க்குமா?

நிச்சயம் இல்லை. மந்தை நோயெதிர்ப்பு சக்திக்கும், பூஸ்டர் டோஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அனைவருக்குமே தொற்று ஏற்பட்டால் மட்டுமே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாகவே உருவாகக்கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Questions Related To The Booster Dose In Tamil

Here are some common questions related to the booster dose in tamil. Read on to know more...
Story first published: Monday, January 10, 2022, 15:24 [IST]
Desktop Bottom Promotion