For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைவ உணவு மட்டும் சாப்பிடுறதால... உங்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

வைட்டமின் பி 12 நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை உருவாக்க உதவுகிறது. இந்த குறைபாடு சோர்வு, கால்களில் கூச்ச உணர்வு மற்றும் மனச்சோர்வுக்கு கூட வழிவகுக்கும்.

|

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு இல்லாதபோது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இது உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஊட்டச்சத்து குறைபாடுகள் மோசமானதாக அல்லது குறைக்கப்பட்ட ஊட்டச்சத்து உட்கொள்ளல், நாள்பட்ட சுகாதார நிலைகள், கடுமையான சுகாதார நிலைமைகள், மருந்துகள், மாற்றப்பட்ட ஊட்டச்சத்து வளர்சிதை மாற்றம் அல்லது இந்த காரணிகளின் கலவையால் ஏற்படலாம். சைவ உணவு வாழ்க்கை முறையை பின்பற்றுவதால், இதய நோய்களின் ஆபத்து குறைந்து டைப் 2 நீரிழிவு வரை, பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

Common Nutritional Deficiencies On A Vegan Diet

சைவ உணவு காய்கறிகள், தானியங்கள், நட்ஸ்கள் மற்றும் பழங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் போன்ற தாவரங்களை மட்டுமே உள்ளடக்கியது. சைவ உணவு உண்பவர்கள் பால் பொருட்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து வரும் உணவுகளை சாப்பிடுவதில்லை. ஏராளமான நன்மைகள், சைவ வாழ்க்கை முறையில் இருந்தாலும், இங்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை சந்திக்கிறோம். இக்கட்டுரையில், சைவ உணவைப் பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதில் முக்கியமானது மற்றும் எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது. வைட்டமின் டி குறைபாடு எலும்பு அடர்த்தி குறைவதற்கு வழிவகுக்கும் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும். இது உடல் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமாகும். எளிய இரத்தப் பரிசோதனையின் உதவியுடன் வைட்டமின் டி அளவை நீங்கள் சரிபார்க்கலாம்.

வைட்டமின் பி 12 குறைபாடு

வைட்டமின் பி 12 குறைபாடு

வைட்டமின் பி 12 நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை உருவாக்க உதவுகிறது. இந்த குறைபாடு சோர்வு, கால்களில் கூச்ச உணர்வு மற்றும் மனச்சோர்வுக்கு கூட வழிவகுக்கும். சைவ உணவு உண்பவர்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் பேசி இந்த வைட்டமின் சப்ளிமெண்ட்ஸிலிருந்து பெறலாம்.

துத்தநாகக் குறைபாடு

துத்தநாகக் குறைபாடு

இந்த ஊட்டச்சத்து உடல் முழுவதும் காணப்படுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றம் சரியாக செயல்பட உதவுகிறது. துத்தநாகம் காயத்தை குணப்படுத்துவதற்கு உதவுகிறது மற்றும் உங்கள் சுவை மற்றும் வாசனை உணர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. துத்தநாகம் பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படுகையில், இந்த உணவுகளில் பைடிக் அமிலமும் உள்ளது. இது துத்தநாகத்தை உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் (DHA) குறைபாடு

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் (DHA) குறைபாடு

ஒமேகா -3 நிறைவுறா கொழுப்பு அமிலமாகும், இது உடலில் உள்ள அழற்சி எதிர்ப்பு செயல்முறைகளுக்கு உதவுகிறது. இந்த அமிலம் இதயம் மற்றும் இரத்த நாளங்களின் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சைவ உணவில் DHA, அத்தியாவசிய ஒமேகா -3 கொழுப்பு அமிலம் இல்லை. இது சாதாரண மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த கொழுப்பு அமிலத்தின் குறைபாடு மன ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாடு, குறிப்பாக குழந்தைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இரும்புச்சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு

இரும்பு சிவப்பு இரத்த அணுக்களின் ஒரு கனிம கூறு. உங்களுக்கு இரும்புச்சத்து இல்லாவிட்டால், நீங்கள் இரத்த சோகை, சோர்வு மற்றும் தலைசுற்றல் போன்ற அறிகுறிகளை உணரலாம். ஹீம் இரும்பு குறைபாடு சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படுவது. ஹீம் இரும்பு என்பது சிவப்பு இறைச்சியில் மட்டுமே காணப்படும் ஒரு வகை இரும்பு. ஹீம் இரும்பு மற்றும் ஹீம் அல்லாத இரும்பு என இரண்டு உள்ளது. இரும்புச் சத்து குறைபாடு உள்ளதா என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். பீன்ஸ் மற்றும் பிற பச்சை காய்கறிகள் போன்ற சைவ உணவு மூலங்களிலிருந்து இரும்பைப் பெறலாம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை வைட்டமின் சி (சிட்ரஸ் பழங்கள்) உடன் இணைப்பதன் மூலம் அதன் உறிஞ்சுதலை அதிகரிக்கலாம்.

கார்னோசைன் குறைபாடு

கார்னோசைன் குறைபாடு

கார்னோசைன் ஒரு வகை புரதம் (ஆக்ஸிஜனேற்றம்). இது உடல் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமானது. கார்னோசைன் இறைச்சி சார்ந்த உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் அத்தியாவசியமற்றதாக கருதப்படுகிறது. இது தசைச் சோர்வைக் குறைக்கவும் உடல் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

சைவ உணவில் இருந்து பிற ஊட்டச்சத்து குறைபாடுகள் பின்வருமாறு:

சைவ உணவில் இருந்து பிற ஊட்டச்சத்து குறைபாடுகள் பின்வருமாறு:

கிரியேட்டின் குறைபாடு (விலங்கு உணவுகளில் காணப்படும் மூலக்கூறு மற்றும் தசை நிறை மற்றும் வலிமையை அதிகரிக்க உதவுகிறது).

டாரைன் குறைபாடு (மூளை, இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உட்பட பல்வேறு உடல் திசுக்களில் காணப்படும் ஒரு சல்பர் கலவை)

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

மேற்கூறிய அனைத்து ஊட்டச்சத்து குறைபாடுகளையும் சரியான ஆராய்ச்சி செய்து ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரிடம் பேசுவதன் மூலம் நிர்வகிக்க முடியும். உங்கள் ஒட்டுமொத்த உணவை சமநிலைப்படுத்த உதவும் பல சைவ மாற்று மற்றும் கூடுதல் உணவு வகைகள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Nutritional Deficiencies On A Vegan Diet

Here we are talking about the Common Nutritional Deficiencies On A Vegan Diet. Read on.
Story first published: Tuesday, October 5, 2021, 18:35 [IST]
Desktop Bottom Promotion