For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க செய்யும் இந்த தவறுகளால் தான் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குதாம்!

ஒருவரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால், பொதுவாக எந்த ஒரு அறிகுறியையும் காட்டாது. ஆகவே, வருடத்திற்கும் ஒருமுறை உடலை முழு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

|

கொலஸ்ட்ரால் உங்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற உடலில் உள்ள கொழுப்பு பொருளாகும். இது உண்ணும் உணவுகளை செரிக்கவும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி-யை உருவாக்கவும் உதவுகிறது. ஏற்கனவே நமது செல்களின் கொழுப்பு உள்ளது மற்றும் தேவைப்படும் போது உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி மற்றும் சீஸ் போன்ற சில உணவுகளிலும் காணப்படுகிறது.

Common Mistakes that Can Increase Your Cholesterol Level

அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற வாஸ்குலர் நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். அதோடு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றையும் உண்டாக்கும். ஆகவே கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு முதலில் நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். இக்கட்டுரையில் நாம் செய்யும் சில விஷயங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது

உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது

உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் செயல்பாட்டிற்கு ஏதாவது வேலை செய்வது அலல்து உடற்பயிற்சி செய்வது உங்க உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். உடற்பயிற்சி செய்வதால் உடலில் இருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பு உடல் எடை அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த வகை கொழுப்புக்கள் தான் இதய நோய்க்கு வழிவகுக்கும்.

உடற்பயிச்சி செய்வது

உடற்பயிச்சி செய்வது

உடற்பயிற்சி செய்யும் போது, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கல்லீரலுக்கு நகர்த்தி, வெளியேற்றும் அல்லது பித்தமாக மாற்றும். மேலும் உடற்பயிற்சியினால் கொழுப்பைப் பரப்பும் புரதத் துகள்களின் அளவை அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு 30-45 நிமிட நடைப்பயிற்சி, ஜாக்கிங், பைக்கிங், யோகா, நடனம் அல்லது ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சிகள் கொழுப்பைக் குறைக்க உதவும். எனவே உடற்பயிற்சிகளை சரியாக மேற்கொண்டு உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

மோசமான அல்லது ஆரோக்கியமற்ற டயட்

மோசமான அல்லது ஆரோக்கியமற்ற டயட்

அதிக சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளான வறுத்த உணவுகள், பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாசேஜ், ஹாட் டாக்ஸ், குக்கீஸ், கேக்குகள், ஐஸ் க்ரீம், மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கக்கூடியவை. ஆதலால் , அவற்றை தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளான ஓட்ஸ், பழங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள் அல்லது காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு

நல்ல கொழுப்புக்கள் நிறைந்த சால்மன் மீன், அவகேடோ மற்றும் வெஜிடேபிள் எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், கனோலா எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களை சமையலில் பயன்படுத்துங்கள். ஏனெனில், மோசமான உணவுப் பழக்கமானது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடித்தல் பழக்கமானது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களை காயப்படுத்தி, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். அதோடு, புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. மேலும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவை உயர்த்திவிடும்.

உடல் பரிசோதனைகளைப் புறக்கணிப்பது

உடல் பரிசோதனைகளைப் புறக்கணிப்பது

ஒருவரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால், பொதுவாக எந்த ஒரு அறிகுறியையும் காட்டாது. ஆகவே, வருடத்திற்கும் ஒருமுறை உடலை முழு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அப்படி சோதனை செய்வதால், உடலில் ஏதேனும் பிரச்சனை இருப்பின், அது ஆரம்பத்திலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் மற்றும் சரியான மருந்துகளின் உதவியுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

மருந்துகளைத் தவிர்ப்பது

மருந்துகளைத் தவிர்ப்பது

உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், அதற்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள். நீங்களாகவே மருந்துகளை மாற்றி எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அது கொலஸ்ட்ரால் அளவில் இடையூறு ஏற்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதித்துவிடும். எனவே, மருந்துகளை மாற்றி எடுத்துக்கொள்ளாமல் அன்றாடம் உட்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுடன், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Mistakes that Can Increase Your Cholesterol Level

Here we are talking about the list of common mistakes that can increase your cholesterol levels
Story first published: Wednesday, August 25, 2021, 13:35 [IST]
Desktop Bottom Promotion