For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் செய்யும் இந்த தவறுகள் அவர்களின் மார்பக ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்குமாம் தெரியுமா?

மார்பகங்கள் ஒரு முக்கியமான உடல் உறுப்பு, ஆனால் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும் கவனம் மார்பகங்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

|

மார்பகங்கள் ஒரு முக்கியமான உடல் உறுப்பு, ஆனால் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும் கவனம் மார்பகங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. நம்மில் பலரும் மார்பகங்களை அடிக்கடி சோதிப்பதில்லை. நீங்கள் மார்பகத்தில் எந்த பிரச்சினையையும் உணரவில்லை என்றாலும் உங்கள் மார்பகங்களுக்கு சிறப்பு கவனம் தேவை.

Common Mistakes That Can Hurt Your Breast Health

மார்பகம் தொடர்பான அனைத்து வகையான நோய்களையும் தவிர்க்க நாம் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நம்மில் பலர் காலப்போக்கில் நம் மார்பக ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறோம். உங்கள் மார்பக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொதுவான பழக்கங்கள் இங்கே உள்ளன, இவற்றை உடனடியாக நிறுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறான அளவு ப்ராவை அணிவது

தவறான அளவு ப்ராவை அணிவது

நீங்கள் சரியான ப்ரா அளவை அணியவில்லை என்றால் நீங்கள் ஒருபோதும் நன்றாக உணர மாட்டீர்கள். இவ்வாறு ப்ரா அணிவது மார்பகத்தைத் தொந்தரவு செய்வதற்கும், அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும். மிகவும் இறுக்கமான ப்ரா அணிவதால் இரத்த ஓட்டம் தடுக்கப்படும். இது கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும்.

மார்பகக்காம்புகளில் இருக்கும் முடியை அகற்றுதல்

மார்பகக்காம்புகளில் இருக்கும் முடியை அகற்றுதல்

பிஸிக்கல் ஆகிடிவிட்டிமற்றும் ஹெல்த் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, மார்பகக்க்காம்பு பகுதியைச் சுற்றி ரேஸரைப் பயன்படுத்துவது தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். எந்த வகையிலும் முடி அகற்றுவது வீக்க அபாயத்தை அதிகரிக்கும்.

MOST READ: பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...!

மார்பகக்காம்பில் துளையிடுவது

மார்பகக்காம்பில் துளையிடுவது

லாவா பல்கலைக்கழகத்தில் மார்பகக்காம்பு துளையிடுவதை பற்றி நடத்திய ஆய்வின்படி, இது பால் உற்பத்தி குழாய்களை சேதப்படுத்தும் மற்றும் பாலூட்டிகளில் புண் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும், இது வலி நிறைந்த மற்றும் சீழ் நிரப்பப்பட்ட தொற்றுநோயாகும்.

அதிகப்படியான புகைத்தல் மற்றும் காஃபின் உட்கொள்ளல்

அதிகப்படியான புகைத்தல் மற்றும் காஃபின் உட்கொள்ளல்

புகைபிடித்தல் நம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிப்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இது நெகிழ்ச்சி இழப்பு, தொய்வு, மார்பக புற்றுநோயின் ஆபத்து மற்றும் மார்பக மென்மை இழப்பு போன்ற மார்பக தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

ப்ரா அணியாமல் இருப்பது

ப்ரா அணியாமல் இருப்பது

நீங்கள் எப்போதும் வீட்டை விட்டு வெளியேறும்போது ப்ரா அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மார்பகத்திற்கு போதுமான ஆதரவைக் கொடுக்காதது கடுமையான வலி மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

MOST READ: தலைசுற்ற வைக்கும் பண்டைய உலகின் மோசமான பாலியல் வரலாற்று சம்பவங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

டக்ட் டேப்பைப் பயன்படுத்துதல்

டக்ட் டேப்பைப் பயன்படுத்துதல்

ப்ராவுடன் அணிய முடியாத ஒரு ஆடையை நீங்கள் அணியும்போது உங்கள் ப்ராவை தூக்கி ஆதரிக்க டக்ட் டேப்பைப் பயன்படுத்த ஃபேஷன் வீடியோ பெரும்பாலும் பரிந்துரைக்கிறது. ஆனால் டக்ட் டேப் ஒவ்வாமை, அரிப்பு, வீக்கம் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Mistakes That Can Hurt Your Breast Health

Here is the list of common mistakes that can hurt your breast health.
Desktop Bottom Promotion