For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டுவலியால் ரொம்ப அவதிப்படுறீங்களா? இதில் ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கோங்க... சீக்கிரம் குணமாகிரும்!

நரம்பு சிதைவு முழங்கால், மூட்டு அல்லது முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? ஆனால் இந்த மோசமான வலிக்கு என்ன காரணம் என்று சிந்தித்து உள்ளீர்களா?

|

நரம்பு சிதைவு முழங்கால், மூட்டு அல்லது முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? ஆனால் இந்த மோசமான வலிக்கு என்ன காரணம் என்று சிந்தித்து உள்ளீர்களா? வலி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், குறிப்பாக மூட்டுகள் மற்றும் முழங்கால் வலியை பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சிலர் தொடர்ந்து அதிகரித்து வரும் எடை, காயம், வீக்கம் காரணமாக மூட்டுவலி ஏற்படலாம்.

Common Foods That Can Naturally heal Arthritis Pain in Tamil

மூட்டுவலியைக் குணப்படுத்துவது, உணவுமுறையை மாற்றுவதன் மூலமோ அல்லது மேற்பூச்சு களிம்புகள் அல்லது பாப்பிங் மாத்திரைகள் மூலமாகவோ குணப்படுத்துவது நோயைக் குணப்படுத்த ஒரு நிலையான வழி அல்ல. மூட்டுவலி மற்றும் முழங்கால் வலி போன்ற நோய்களை குறைக்கவும், குணப்படுத்தவும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் முழுமையான மாற்றத்தை உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இயற்கையாகவே இந்த வலியை குணப்படுத்த உதவும் சில எளிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு மற்றும் வெங்காயம

பூண்டு மற்றும் வெங்காயம

பூண்டு மற்றும் வெங்காயத்தின் வலுவான வாசனை மற்றும் சுவை உடல் வலிகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கும். பாரம்பரியமாக பூண்டு மற்றும் கடுகு எண்ணெயை சூடாக்கி வலி மண்டலங்களில் பயன்படுத்துவதற்கான காரணம் இதுதான். ஏனெனில் பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. வெங்காயத்திலும் உடல்வலி மற்றும் மூட்டு வலியை குணப்படுத்தும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

கொழுப்பு நிறைந்த மீன்கள்

கொழுப்பு நிறைந்த மீன்கள்

டூனா, சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் புரதத்தின் சிறந்த ஆதாரங்கள் மற்றும் மூட்டுவலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த கொழுப்பு மீன்களை விட சிறந்த மாற்று இல்லை. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி இருப்பதால், தசை வலிமையை அதிகரிக்கவும், செல்கள் மற்றும் திசுக்களின் மீளுருவாக்கம் செய்யவும் உதவுகிறது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

ஒரு கப் கிரீன் டீ குடிப்பது உங்கள் உணர்வுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், வீக்கம், மூட்டுகள் மற்றும் முழங்கால்களில் வலியைக் குறைக்க உதவுகிறது. ஏனென்றால், கிரீன் டீயில் எபிகல்லோகேடசின்-3-கேலேட் (EGCG) எனப்படும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. ஆய்வுகளின்படி, இந்த மூலப்பொருள் உடலில் அழற்சி இரசாயனங்கள் உருவாவதைக் குறைக்கும் மற்றும் முழங்கால் மூட்டுகளை குணப்படுத்தவும் பாதுகாக்கவும்,ம் மேலும் குருத்தெலும்பு உடைவதைத் தடுக்கவும் உதவும்.

பெர்ரீஸ்

பெர்ரீஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, தினசரி உணவில் பெர்ரிகளை சேர்ப்பது வீக்கம், வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆன்டிஆக்ஸிடன்ட்களான ஆந்தோசயினின்கள் இருப்பதால் செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது.

அடர் பச்சை இலைக்காய்கறிகள்

அடர் பச்சை இலைக்காய்கறிகள்

பெரும்பாலான மக்கள் கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற இலை கீரைகளை விரும்புவதில்லை, ஆனால் இந்த நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த கீரைகள் கீல்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த சிறந்தவை. இயற்கையாகவே வைட்டமின்கள் ஈ மற்றும் சி நிறைந்துள்ள இலை கீரைகளை உட்கொள்வது கொலாஜனின் வளர்ச்சிக்கு உதவுகிறது, இது குருத்தெலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Foods That Can Naturally heal Arthritis Pain in Tamil

These common foods can naturally heal arthritis pain.
Desktop Bottom Promotion