Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
காண்டம் உபயோகிக்கும் போது ஆண்கள் இந்த தவறுகளை தெரியாமல் கூட செய்யக்கூடாது... இல்லனா சிக்கல்தான்...!
ஆணுறைகள் கர்ப்பத்தைத் தடுப்பதற்கும் பாலியல்ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும்.
ஆணுறைகள் கர்ப்பத்தைத் தடுப்பதற்கும் பாலியல்ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும். ஆனால், இந்த கருத்தடை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது தங்களுக்குத் தெரியும் என்று ஆண்கள் நம்பினாலும், அவர்கள் இன்னும் சில தவறுகளைச் செய்யும் அபாயம் உள்ளது.

இந்த தவறுகள் தேவையற்ற கர்ப்பத்தின் வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு உங்களை தாக்கலாம். இதைத் தொடர்ந்து, ஆணுறை பயன்படுத்தும் போது ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்ன அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆணுறையின் காலாவதி தேதியை சரிபார்க்காமல் இருப்பது
அனைத்து பொருட்களுக்கும் காலாவதி தேதி இருக்கிறது, அதற்கு ஆணுறையும் விதிவிலக்கல்ல. ஆணுறைகளும் காலாவதியாகி சேதமடையலாம். ஒவ்வொரு ஆணுறைக்கும் ஒரு காலாவதி தேதி உள்ளது, அதை மக்கள் பொதுவாக கவனிப்பதில்லை. காலாவதியான ஆணுறைகள் அடிக்கடி உடைப்பு மற்றும் லீக்கேஜ்க்கு வழிவகுக்கிறது, இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமின்றி, உங்களை தொற்றுநோய்களுக்கு ஆளாக்கும் என்பதால் இதனை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. எனவே நீங்கள் ஆணுறை வாங்கும் முன், உற்பத்தி மற்றும் செல்லுபடியாகும் தேதியை சரிபார்க்கவும். ஆணுறைகள் காலாவதியாகலாம் என்பதால் அவற்றை சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும்.

தவறான நேரத்தில் காண்டம் அணிவது
ஆணுறை எப்போது போட வேண்டும் என்பதை ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆணுறுப்பு விறைப்படைவதற்கு முன்பபோ, உடலுறவுக்குப் பிறகு தாமதமாகவோ அல்லது சீக்கிரமாகவோ ஆணுறை அணியக்கூடாது. விறைப்புத்தன்மையை அடைவதற்கு முன்பு நீங்கள் ஆணுறையை அணிந்திருந்தால், நீங்கள் அதை சரியாக அணியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது உங்கள் STI களின் ஆபத்தை மேலும் அதிகரிக்கலாம் மற்றும் உங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கலாம்.

அளவு முக்கியமானது
ஆணுறைகள் அனைத்து அளவுகளிலும் வருகின்றன, ஏனெனில் இது கருத்தரித்தல் அல்லது வைரஸ்களுக்கு ஆளாகும் வாய்ப்புகளை பாதிக்கலாம். ஏனெனில் மிகவும் இறுக்கமான அல்லது மிகவும் தளர்வான ஆணுறையை அணிவது காண்டம் உடைவதற்கு வழிவகுக்கும். உதாரணமாக, நீங்கள் மிகவும் இறுக்கமான ஆணுறையை அணிந்தால், அது உடைந்து அல்லது சேதமடையலாம். இதேபோல், மிகவும் தளர்வான ஆணுறை அதன் வேலையைச் செய்யத் தவறி, எளிதில் ஆணுறுப்பை விட்டு விலகலாம்.

ஆணுறையை ஒருபோதும் மீண்டும் உபயோகிக்கக்கூடாது
இது நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கும், ஆனால் சில ஆண்கள் இந்த தவறை செய்கிறார்கள். இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய தவறாகும். ஆணுறைகள் ஒரு முறை பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒருபோதும் மீண்டும் உபயோகிக்கப்படக்கூடாது. ஆணுறைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் அது சேதமடையலாம் அல்லது உடையலாம். பல ஆணுறைகளை கையில் வைத்துக்கொண்டு, விந்து வெளியேறிய பிறகு ஒவ்வொரு ஆணுறையையும் அப்புறப்படுத்துவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விந்து வெளியேறிய பிறகு ஆணுறையை கழட்டாமல் இருப்பது
விந்து வெளியேறியவுடன், ஆணுறையை உடனடியாக கழற்ற வேண்டியது அவசியம். நீங்கள் கசிவைத் தவிர்க்க விரும்பினால், ஆணுறுப்பு விறைப்புத்தன்மையை இழந்தவுடன் இதனை செய்ய வேண்டும். விந்து வெளியேறிய உடனேயே ஆண்கள் விறைப்புத்தன்மையை இழக்க நேரிடும், இதனால் ஆணுறை நழுவி விந்து வெளியேறும். அதைத் தடுக்க, உடலுறவு முடிந்தவுடன் ஆணுறையைக் கழற்ற வேண்டும். ஆணுறையின் அடிப்பகுதியை ஆண்குறிக்கு எதிராகப் பிடித்து, விறைப்புத்தன்மையை இழக்கும் முன் இரண்டையும் வெளியே இழுக்கவும்.

இரண்டு காண்டம் அணிவது
இது பல ஆண்கள் செய்யும் ஒரு பொதுவான தவறாகும். சில ஆண்கள் அதிக பாதுகாப்புக்காக இரண்டு காண்டம் அணிகிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு ஆணுறையே போதுமான பாதுகாப்பை அளிக்கும். இரண்டை ஆணுறையை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இரண்டு ஆணுறைகளுக்கு இடையே உராய்வு ஏற்படுவது மட்டுமின்றி, உடைவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. இது நடந்தால், கர்ப்பம் மற்றும் தொற்றுநோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications