For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு பாலியல் ஆசைகள் அதிகமாக இருக்கா? அப்ப இதுதான் அதற்கு காரணமாம்... ஷாக் ஆகாதீங்க...!

பாலியல் ஆசைகள் குறைவது என்பது ஒரு ஆரோக்கிய பிரச்சினையாகும், ஆனால் அதிக பாலியல் உந்துதல் இருப்பது முற்றிலும் இயற்கையானதே.

|

பாலியல் ஆசைகள் குறைவது என்பது ஒரு ஆரோக்கிய பிரச்சினையாகும், ஆனால் அதிக பாலியல் உந்துதல் இருப்பது முற்றிலும் இயற்கையானதே. ஹார்மோன் மாற்றங்கள் முதல் ஆரோக்கியமான மற்றும் புதிய உறவு வரை, பல காரணிகள் லிபிடோ அளவை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும், உங்களிடம் உள்ள பாலியல் உந்துதலின் அளவை தீர்மானிப்பதில் வயது முக்கிய பங்கு வகிக்கிறது.

Reasons for High Libido

நீங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பதை உணர்ந்தால், நீங்கள் எப்போதும் ஒரு வேடிக்கையான, உற்சாகமான மற்றும் காதல் சந்திப்புக்கு தயாராக இருந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள். இருப்பினும், உங்கள் பாலியல் உந்துதல் அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதை அறிவதும் முக்கியம். பாலியல் உந்துதல் அதிகரிக்க பொதுவான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்மோன்களில் மாற்றம்

ஹார்மோன்களில் மாற்றம்

பாலியல் உந்துதல் என்று வரும்போது, அதில் ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் ஹார்மோன் அளவுகள் வேறுபடுகின்றன. நீங்கள் பருவ வயதை அடைந்தாலும் அல்லது மாதவிடாய் நின்றாலும், உங்கள் ஹார்மோன் அளவு உங்கள் லிபிடோவை பாதிக்கும்.

பருவமடைதல் அல்லது வயது அதிகரிப்பு

பருவமடைதல் அல்லது வயது அதிகரிப்பு

வயதானவர்களை விட இளம் வயதினர் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கலாம். பருவமடையும் போது, பருவ வயதுடைய ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி வயதான ஆண்களை விட அதிகமாக உள்ளது.

இருப்பினும், பெண்களில் இது முற்றிலும் எதிர்மாறானது. நடுத்தர வயது பெண்கள் இளம் பெண்களை விட அதிக பாலியல் உந்துதல் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, அவர்கள் அதிக சுறுசுறுப்பான பாலியல் வாழ்க்கை கொண்டிருப்பதால் இது ஏற்படுகிறது.

 வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி

உடல் செயல்பாடுகளின் அதிகரிப்பு உங்கள் பாலியல் உந்துதல் அதிகரிக்க வழிவகுக்கும்.ஆராய்ச்சிகள் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தை உயர்ந்த பாலியல் ஆசைகளுடன் இணைத்துள்ளது.

MOST READ: இந்தியாவில் விலைமதிப்பற்ற புதையல்கள் இருக்கும் ரகசிய இடங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

பாலுணர்வு உணவுகள்

பாலுணர்வு உணவுகள்

உணவுகள் உங்கள் பாலியல் உந்துதலையும் பாதிக்கலாம். சாக்லேட்டுகள், ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழங்கள், அஸ்பாரகஸ் போன்ற பாலுணர்வு உணவுகள் உங்கள் லிபிடோவை அதிகரிக்கும்.

புதிய காதல் உறவு

புதிய காதல் உறவு

ஒரு புதிய காதல் உறவு என்பது உற்சாகமும், ஆர்வமும் நிறைந்ததாக இருக்கும். உறவில் இருக்க வேண்டுமென்ற தொடர்ச்சியான ஏக்கம், காதல் தொடங்கியவுடன் நிறைவேறுவதால் புதிய உறவின் தொடக்கத்தில் தம்பதிகள் பெரும்பாலும் தங்கள் பாலியல் உந்துதலில் அதிகரிப்பை அனுபவிக்கிறார்கள்.

மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது

மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது

ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை பராமரிப்பது என்பது உங்கள் மன அழுத்த நிலைகளையும் பதட்டத்தையும் கட்டுப்படுத்துவதாகும். குறைந்த மன அழுத்தம் மற்றும் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு நபர் அதிக பாலியல் ஆசை கொண்டிருப்பார்.

MOST READ: உங்களின் இந்த செயல்கள் லட்சுமி தேவியை உங்கள் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற்றி விருமாம் தெரியுமா?

ஹைபர்செக்ஸுவாலிட்டி

ஹைபர்செக்ஸுவாலிட்டி

அதிக லிபிடோவின் பாதிப்பில்லாத காரணங்களைத் தவிர, ஹைபர்செக்ஸுவாலிட்டி பாலியல் உந்துதலின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பாலியல் எண்ணங்கள், தூண்டுதல்கள் அல்லது நடத்தைகளுடன் தொடர்புடைய ஒரு கோளாறு ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Causes of High Libido in Tamil

Check out the common causes for high libido.
Desktop Bottom Promotion