For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

ஆய்வில் கலந்துகொண்டு காலப்போக்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள், ஆரஞ்சு சாறு, ஆரஞ்சு, மிளகாய், செலரி, திராட்சைப்பழம், திராட்சைப்பழம் சாறு, ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற உணவுகளை ஒரு நாளைக்கு சராசரியாக அரை வேளை சாப்பிட்ட

|

நீங்கள் உட்கொள்ளும் உணவு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஆம், உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் மூலம் தான் பெற முடியும். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையும் அளிக்கலாம், பாதிப்பையும் ஏற்படுத்தலாம். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நல்ல அறிவாற்றல் கொண்டிருக்க உங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான உணவு போதுமானதா? எனில், ஆம் என்றே கூறலாம். உங்கள் உணவில் புதிய, வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பது அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது.

Colourful Foods to Boost Your Brain and Memory

சில உணவுகள் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆய்வின்படி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, மிளகாய் மற்றும் ஆப்பிள் போன்ற ஃபிளாவனாய்டுகள் அதிகம் உள்ள உணவுகளை ஒரு நாளைக்கு குறைந்தது பாதி அளவு உட்கொள்ளும் மக்கள் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை 20 சதவீதம் குறைவாகக் கொண்டிருக்கலாம் என்று கூறுகிறது. இதுகுறித்து இக்கட்டுரையை விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

ஆய்வின் முடிவுகள் அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூரோலஜியின் மருத்துவ இதழான 'நரம்பியல்' இணைய இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு பல வகையான ஃபிளாவனாய்டுகளைப் பார்த்தது. ஃபிளாவோன்கள் மற்றும் அந்தோசயினின்கள் மிகவும் பாதுகாப்பு விளைவைக் கொண்டிருக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்தது.

MOST READ: நம் முன்னோர்கள் போல நீங்களும் கட்டுமஸ்தான உடலை பெற என்னென்ன உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?

ஃபிளாவனாய்டுகள்

ஃபிளாவனாய்டுகள்

ஃபிளாவனாய்டுகள் தாவரங்களில் காணப்படும் இயற்கையான கலவைகள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகக் கருதப்படுகின்றன. ஆக்ஸிஜனேற்றிகள் மிகக் குறைவாக இருந்தால் வயதாகும்போது அறிவாற்றல் குறைய தொடங்கும் என்று கருதப்படுகிறது. உங்களுக்கு வயதாகும்போது உங்கள் சிந்தனை திறன் குறைவதைத் தடுப்பதற்கு ஃபிளாவனாய்டுகள் சக்தி முக்கிய பங்கு வகிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் உணவில் எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

பகுப்பாய்வு

பகுப்பாய்வு

ஆய்வின் தொடக்கத்தில் சராசரியாக 48 வயதுடைய 49,493 பெண்களையும் 51 வயதுடைய 27,842 ஆண்களையும் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 வருட பின்தொடர்தலில், மக்கள் பல்வேறு உணவுகளை எத்தனை முறை சாப்பிட்டார்கள் என்பது குறித்து பல பரிசோதனைகளை நிறைவு செய்தனர். பல்வேறு வகையான ஃபிளாவனாய்டுகளின் உட்கொள்ளல் ஒவ்வொரு உணவின் ஃபிளாவனாய்டு உள்ளடக்கத்தையும் அதன் அதிர்வெண்ணால் பெருக்கி கணக்கிடப்பட்டது.

நினைவாக சிக்கல்

நினைவாக சிக்கல்

ஆய்வின் போது பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த அறிவாற்றல் திறன்களை இரண்டு முறை மதிப்பீடு செய்தனர். இந்த மதிப்பீடு ஆரம்பகால நினைவக சிக்கல்களைப் பதிவுசெய்தது, மக்களின் நினைவகம் அவர்கள் கவனிக்கும் அளவுக்கு மோசமாகிவிட்டது. ஆனால் ஒரு ஸ்கிரீனிங் சோதனையில் கண்டறிய இது போதுமானதாக இல்லை.

MOST READ: மருந்துகளே இல்லாமல் உங்க இரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

எவ்வளவு ஃபிளாவனாய்டுகள்?

எவ்வளவு ஃபிளாவனாய்டுகள்?

ஃபிளாவனாய்டு நுகர்வோரின் மிக உயர்ந்த 20 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் உள்ள மக்கள், சராசரியாக, 600 மில்லிகிராம் (மி.கி.) ஒவ்வொரு நாளும் தங்கள் உணவில் எடுத்துக்கொண்டனர். குறைந்த அளவு 20 சதவிகிதம் ஃபிளாவனாய்டு நுகர்வோருடன் ஒப்பிடும்போது, ​​சுமார் 150 மி.கி. ஒவ்வொரு நாளும் அவர்களின் உணவுகளில் கிடைக்கிறது. உதாரணமாக, ஸ்ட்ராபெர்ரிகளில், 100 கிராமுக்கு 180 மி.கி ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அதே நேரத்தில் ஆப்பிள்களில் 113 உள்ளது.

ஆபத்து குறைவு

ஆபத்து குறைவு

வயது மற்றும் மொத்த கலோரி உட்கொள்ளல் போன்ற காரணிகளை சரிசெய்த பிறகு, தங்கள் உணவுகளில் அதிக ஃபிளாவனாய்டுகளை உட்கொண்ட மக்கள் அறிவாற்றல் வீழ்ச்சியின் குறைந்த ஆபத்தை கொண்டிருந்தனர். மிக உயர்ந்த ஃபிளாவனாய்டு நுகர்வோர் குழுவானது, குறைந்த குழுவில் உள்ள மக்களை விட சுய- அறிவாற்றல் வீழ்ச்சியின் ஆபத்தை 20 சதவீதம் குறைவாக கொண்டிருந்தனர்.

எந்த உணவுகளில் உள்ளது?

எந்த உணவுகளில் உள்ளது?

ராய்ச்சியாளர்கள் தனிப்பட்ட ஃபிளாவனாய்டுகளையும் பரிசோதனை செய்து பார்த்தனர். சில வாசனை திரவியங்கள் மற்றும் மஞ்சள் அல்லது ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஃபிளாவோன்கள், வலுவான பாதுகாப்பு குணங்களைக் கொண்டிருந்தன மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தில் 38 சதவிகிதம் குறைப்புடன் தொடர்புடையது. மிளகாயில் 100 கிராமுக்கு சுமார் 5 மி.கி ஃபிளாவோன்களைக் கொண்டுள்ளது. ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் செர்ரிகளில் காணப்படும் அந்தோசயனின்ஸ், அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை 24 சதவீதம் குறைத்தது. அவுரிநெல்லிகளில் 100 கிராமுக்கு சுமார் 164 மி.கி.ஃபிளாவனாய்டுகள் உள்ளது.

MOST READ: இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்...ஜாக்கிரதை!

ஆய்வு உணவுகள்

ஆய்வு உணவுகள்

இந்த ஆய்வில் கலந்துகொண்டு காலப்போக்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள், ஆரஞ்சு சாறு, ஆரஞ்சு, மிளகாய், செலரி, திராட்சைப்பழம், திராட்சைப்பழம் சாறு, ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற உணவுகளை ஒரு நாளைக்கு சராசரியாக அரை வேளை சாப்பிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

மற்ற பைட்டோ கெமிக்கல்கள் இங்கு வேலை செய்யக்கூடியதாக இருந்தாலும், ஃபிளாவனாய்டுகள் நிறைந்த வண்ணமயமான உணவு-குறிப்பாக ஃபிளாவோன்கள் மற்றும் அந்தோசயினின்கள்-நீண்ட கால மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு நல்ல சத்தாகத் தெரிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Colourful Foods to Boost Your Brain and Memory

Here are the list of Colourful Foods For A Sharper Brain, Good Memory.
Story first published: Tuesday, August 10, 2021, 12:29 [IST]
Desktop Bottom Promotion