For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி உங்களுக்கு லேசா கொரோனா வந்தாலும் இப்படி தான் இருக்கணுமாம்... கவனமா இருங்க...

நாட்டில் கோவிட்-19 வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ள நிலையில், லேசான அல்லது அறிகுறியற்ற கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை மையம் திருத்தி வெளியிட்டுள்ளது.

|

ஓமிக்ரான் வகை கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு ஊடரங்கு குறித்து ஆலோசனை செய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Centre Issues New Guidelines For Home Isolation Of Mild, Asymptomatic COVID-19 Patients Amid Covid Spike

நாட்டில் 58,000-க்கும் மேற்பட்ட கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், லேசான அல்லது அறிகுறியற்ற கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை மையம் திருத்தி வெளியிட்டுள்ளது. அந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, கொரோனா வந்த ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 இன் அறிகுறியற்ற வழக்குகள் மற்றும் லேசான வழக்குகள் என்ன?

கோவிட்-19 இன் அறிகுறியற்ற வழக்குகள் மற்றும் லேசான வழக்குகள் என்ன?

அறிகுறியற்ற வழக்குகள் என்பவை ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் ஆகும். இத்தகையவர்கள் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல், 93% க்கும் அதிகமான ஆக்ஸிஜன் செறிவூட்டலைக் கொண்டுள்ளனர்.

அதுவே காய்ச்சலுடன் அல்லது காய்ச்சலின் மேல் சுவாசக்குழாய் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள், மூச்சுத்திணறல் இல்லாமல், 93% க்கும் அதிகமான அறைக் காற்றில் ஆக்ஸிஜன் செறிவூட்டலைக் கொண்ட நோயாளிகள் மருத்துவரீதியாக லேசான வழக்குகள் ஆகும்.

யாரெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?

யாரெல்லாம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?

* கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி லேசான அல்லது அறிகுறியற்றவர்களாக இருந்தால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரால் அந்நோயாளி நியமிக்கப்பட வேண்டும்.

* கொரோனா வந்தவர்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்துவதற்கும், குடும்பத் தொடர்புகளைத் தனிமைப்படுத்துவதற்கும் அவர்களின் இல்லத்தில் தேவையான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

* ஒரு பராமரிப்பாளர் (கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்ட ஒருவர்) 24x7 என்ற அடிப்படையில் கவனிப்பை வழங்குவதற்கு உடன் இருக்க வேண்டும். இந்த பராமரிப்பாளரும் மருத்துவ அதிகாரியும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட முழு காலத்திற்கும் ஒரு முன்நிபந்தனையாகும்.

* 60 வயதிற்கு மேற்பட்ட வயதான நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், நாள்பட்ட நோய்களான நுரையீரல்/கல்லீரல்/சிறுநீரகம்/செரிப்ரோவாஸ்குலர் நோய் போன்றவற்றைக் கொண்டவர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரியின் முறையான மதிப்பீட்டிற்குப் பின்னரே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

* நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நிலைகளைக் கொண்டவர்கள், அதாவது எச்.ஐ.வி, மாற்று உறுப்பு செய்தவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெற்றவர்கள், வீட்டில் தனிமைப்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரியின் முறையான மதிப்பீட்டிற்குப் பின்னரே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவ கவனிப்பை எப்போது பெற வேண்டும்?

மருத்துவ கவனிப்பை எப்போது பெற வேண்டும்?

நோயாளி/பராமரிப்பாளர் தொடர்ந்து உடல்நிலையை கண்காணிக்க வேண்டும். தீவிரமான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ கவனிப்பைப் பெற வேண்டும். அந்த அறிகுறிகளாவன:

* அளவுக்கு அதிகமான காய்ச்சல் (3 நாட்களுக்கு மேல் 100° F-க்கு மேல் இருந்தால்)

* மூச்சுவிடுவதில் சிரமம்

* ஆக்ஸிஜன் செறிவூட்டலில் தோய்வு

* நெஞ்சில் தொடர்ந்து வலி/அழுத்தம், மனக் குழப்பம்

* கடுமையான சோர்வு மற்றும் மயால்ஜியா

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதை எப்போது நிறுத்தலாம்?

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதை எப்போது நிறுத்தலாம்?

* வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கோவிட்-19 நோயாளி,சோதனை செய்த பின் குறைந்தபட்சம் 7 நாட்கள் இருக்க வேண்டும் மற்றும் அந்நோயாளிக்கு 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். இந்நிலையில் அந்நோயாளி வீட்டு தனிமையில் இருந்து வெளிவரலாம்.

* கோவிட் நோயாளி தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு மீண்டும் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று அரசு கூறுகிறது.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறியற்றவர்களுடன் தொடர்புடையவர்கள் கொரோனா சோதனை செய்ய வேண்டிய அவசயமில்லை மற்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Centre Issues New Guidelines For Home Isolation Of Mild, Asymptomatic COVID-19 Patients Amid Covid Spike

Covid Home Isolation: Union Health Ministry issued revised guidelines for home isolation of mild and asymptomatic Covid-19 patients as Omicron cases surge across India.
Story first published: Wednesday, January 5, 2022, 18:41 [IST]
Desktop Bottom Promotion