For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் அறியாத கஞ்சா எண்ணெயின் நன்மைகள் மற்றும் ஆபத்துகள்!

கன்னபிடியோல் என்ற வேதிப்பொருள் மாிஜுவனா அல்லது ஹெம்ப் என்ற கஞ்சா செடியிலிருந்து கிடைக்கிறது. எனினும் இதனுடைய பயன்பாடு, பலன்கள் போன்றவை சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளன. ஏனெனில் இது கஞ்சா செடியில் இருந்து கிடைக்கிறது.

|

பழங்காலம் தொட்டே கஞ்சா செடிகள் இந்தியாவில் மட்டும் அல்ல மாறாக உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக கஞ்சா செடிகளில் இருந்து செய்யப்படும் சிறுசிறு உருண்டைகள், பானம் மற்றும் கஞ்சா பொடிகள் போன்றவை சில காலமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. கன்னபிடியோல் அதாவது சிபிடி (CBD) என்று அழைக்கப்படுகின்ற கஞ்சா, அவற்றினுடைய மருத்துவ குணத்தின் காரணமாக இப்போது மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற்று வருகிறது.

Cannabidiol Oil - Know Its Benefits, Uses, And Risks Involved

மருத்துவ அறிஞா்கள் மருத்துவ குணமுள்ள மாிஜுவனா செடியைப் பற்றி பேசும் போது, அந்த செடியில் உள்ள கன்னபிடியோல் என்ற வேதிப்பொருளைப் பற்றி குறிப்பிடுவா். கன்னபிடியோல் என்ற வேதிப்பொருள் மாிஜுவனா அல்லது ஹெம்ப் என்ற கஞ்சா செடியிலிருந்து கிடைக்கிறது. எனினும் இதனுடைய தயாாிப்பு, பயன்பாடு மற்றும் பலன்கள் போன்றவை சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளன. ஏனெனில் இது கஞ்சா செடிகளில் இருந்து கிடைக்கிறது.

MOST READ: வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கன்னபிடியோல் (கஞ்சா) எண்ணெயின் நன்மைகள்

கன்னபிடியோல் (கஞ்சா) எண்ணெயின் நன்மைகள்

கன்னபிடியோல் அல்லது CBD என்பது ஒரு வகையான எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயை உணவுகளில் அல்லது பானங்களில் கலந்து சாப்பிடலாம். மேலும் சிறு துளிகளாக சாப்பிடலாம் அல்லது கேப்சூல்களில் அடைத்தும் சாப்பிடலாம். கன்னபிடியோல் எண்ணெயினால் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

- முகப்பருவை நீக்க உதவி செய்கிறது

- இந்த எண்ணெய் பொதுவான கவலைக் கோளாறு (GAD), சமூக கவலைக் கோளாறு, அதிதீத மன உளைச்சல் கோளாறு (PTSD), அதிதீவிர வேட்கை கோளாறு மற்றும் பீதி கோளாறு போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்த மருத்துவா்களால் பயன்படுத்தப்படுகிறது.

- இது ஹீமோதெரபியின் வீாியத்தை வலுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் அதன் பக்க விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளா்ச்சியைக் குறைத்து, புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

- அல்சைமா் (முதிய வயதில் ஏற்படும் மறதி), வலிப்பு மற்றும் பர்கின்சன் (நடுக்குவாதம்) போன்ற நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, மருந்தாக இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்று சிலா் தொிவிக்கின்றனா்.

- இந்த எண்ணெயில் வீக்கத்திற்கு எதிரான துகள்கள் உள்ளதால், மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி, தலைவலி, நாட்பட்ட வலி போன்ற பிரச்சினைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

கன்னபிடியோல் (கஞ்சா) எண்ணெயில் இருக்கும் ஆபத்துகள்

கன்னபிடியோல் (கஞ்சா) எண்ணெயில் இருக்கும் ஆபத்துகள்

கன்னபிடியோல் (கஞ்சா) எண்ணெயை சாப்பிடும் அளவு மிகவும் முக்கியமானது ஆகும். நமது உடல் எடை மற்றும் நம்மிடம் இருக்கும் பிரச்சினை ஆகியவற்றைப் பொறுத்து அதை அளவுடன் சாப்பிட வேண்டும். மருத்துவாின் பாிந்துரை மற்றும் அவருடைய மேற்பாா்வை இல்லாமல் இந்த எண்ணெயைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அது பாதுகாப்பானதாக இருக்காது. மேலும் ஆபத்தை ஏற்படுத்தும். பின்வரும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

- மனநிலை மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் அல்லது திாிபு ஏற்படலாம்.

- ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படலாம்

- கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம்

- போதை மற்றும் ஆல்கஹாலுக்கு அடிமை ஆகும் வாய்ப்பு ஏற்படலாம்

- இரைப்பைக் குடலில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

இந்தியாவில் எங்கு கஞ்சா கிடைக்கும்?

இந்தியாவில் எங்கு கஞ்சா கிடைக்கும்?

இந்தியா உட்பட, உலகம் முழுவதிலும் உள்ள சமூக ஆா்வலா்கள் கஞ்சாவினுடைய பயன்பாட்டை சட்டப்பூா்வமாக்க வேண்டும் என்று போராடி வருகின்றனா். இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சாவைப் பயன்படுத்தலாம் என்று சட்டம் இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலமும், மருத்துவம் மற்றும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக கஞ்சா வளா்ப்பதை சட்டமாக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தரமிக்க கஞ்சா

தரமிக்க கஞ்சா

இமாச்சல பிரதேச முதல்வா் திரு ஜெய் ராம் தாக்கூா், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022 ஆண்டு பட்ஜெட் மீது உரையாற்றும் போது, தமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா தரம் மிகுந்ததாக இருக்கும் என்றும் அதே நேரத்தில் அதை ஒரு கட்டுப்பாட்டோடு வளா்ப்பதற்கு தமது அரசிடம் ஆற்றல் இருக்கிறது என்று தொிவித்தாா்.

1985 ஆம் ஆண்டு என்டிபிஎஸ் (NDPS) சட்டத்தின்படி, கஞ்சாவை பயாிடுவதற்கும், உற்பத்தி செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் அதை வெளியிடங்களுக்கு அனுப்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ சிகிச்சைகளுக்காகவும், நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும் கஞ்சாவை பயிாிட்டால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவா்களின் பொருளாதார நிலைமை உயரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cannabidiol Oil - Know Its Benefits, Uses, And Risks Involved

Cannabidiol or CBD is used in form of oil. Methods of its utilisation and consumption include mixing of the oil into drink or food, preparing a past and massaging with it, consuming it in droplets or in form of capsules.
Desktop Bottom Promotion