For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் வராமல் தடுக்கும் டயட்... இத ஃபாலோ பண்ணுங்க கேன்சர்ல இருந்து ஈஸியா தப்பிக்கலாம்...!

புற்றுநோயின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக நமது வாழ்க்கை முறையிலும், உணவுமுறையிலும் சில மாற்றத்தை பின்பற்ற வேண்டும்.

|

புற்றுநோய் உலகளவில் அதிக மக்களை கொல்லும் இரண்டாவது நோயாக உள்ளது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளது, அதில் சில புற்றுநோய்கள் குணப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அதற்கான செலவானது சாதாரண மக்களால் செய்ய முடியாததாக இருக்கிறது. நோயைக் காட்டிலும் அதற்கான செலவே மக்களுக்கு அதிக அச்சமூட்டுகிறது. அதனாலேயே மக்கள் புற்றுநோயிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள்.

Cancer Prevention Eating Guidelines

புற்றுநோய் உருவாவதற்கு காரணம் என்ன? இது நம் மரபணுக்களில் அல்லது சுற்றுசூழலில் உள்ளதா? நாம் பின்பற்றும் உணவோடு இதற்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்று பல கேள்விகள் மக்களிடையே பரவலாக உள்ளது. புற்றுநோயின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக நமது வாழ்க்கை முறையிலும், உணவுமுறையிலும் சில மாற்றத்தை பின்பற்ற வேண்டும். புற்றுநோயைத் தடுக்க உங்கள் உணவில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேக்ரோனி மற்றும் சீஸை தவிர்க்கவும்

மேக்ரோனி மற்றும் சீஸை தவிர்க்கவும்

பெத்தலேட்ஸ் என்பது உண்மையில் பிளாஸ்டிக்கில் நெகிழ்வுத்தன்மை மற்றும் பிளாஸ்டிக்கின் ஆயுளை மேம்படுத்த பயன்படும் ரசாயனமாகும். இதிலிருக்கும் எண்டோகிரைன் மார்பக புற்றுநோயுடன் நேரடியாக தொடர்புடையது. மேக்ரோனி மற்றும் சீஸ் தயாரிக்கப் பயன்படும் சீஸ் பொடியில் காணப்படும் தாலேட்டுகள் கருவுறாமை மற்றும் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

தேசிய சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கைகள் மற்றும் பாதுகாப்பு சேர்மங்கள் அதிகம் உள்ளன, அவை உணவுகளின் அடுக்கு ஆயுளை அதிகரிக்கும், ஆனால் நமது ஆயுளைக் குறைக்கும். என்ஐஎச் வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு மோசமானவை மட்டுமல்ல, அவை நம்மை அதிகமாக சாப்பிட வைக்கின்றன, இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இந்த உணவை அதிகப்படியாக உட்கொள்வது புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது மற்றும் உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.

அதிக கொழுப்பு உணவுகள்

அதிக கொழுப்பு உணவுகள்

அதிக கொழுப்பு நிறைந்த உணவு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர், அதனால்தான் தினசரி கொழுப்பு உட்கொள்ளலை சுமார் 10% ஆக குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. புதிய எஃப்.டி.ஏ வழிகாட்டுதலின்படி புற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க மீன் மற்றும் கடல் உணவுகளின் நுகர்வை அதிகரிக்க பரிந்துரைக்கிறது.

MOST READ: இந்த 7 பழங்கள் உங்கள் உடல் எடையை நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக குறைக்கும்... நம்பி சாப்பிடுங்க!

உப்பின் அளவை சரிபார்க்கவும்

உப்பின் அளவை சரிபார்க்கவும்

உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி உங்கள் உப்பு உட்கொள்ளலை ஒரு நாளைக்கு 5 கிராம் குறைவாக வைத்திருக்க பரிந்துரைக்கிறது. உலக சுகாதார அமைப்பும் இந்த அளவைதான் பரிந்துரைத்துள்ளது. ஒரு நாளைக்கு 5 கிராம் வரை உப்பை கட்டுப்படுத்துவது வயிற்று புற்றுநோய் மற்றும் பிற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உணவை குறைக்க வேண்டும்

சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உணவை குறைக்க வேண்டும்

டானா-ஃபார்பர் புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் பெண்களுக்கு கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, அதிகப்படியான இன்சுலின் கணைய புற்றுநோயின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

கிரீன் டீ உட்கொள்ளலை அதிகரிக்கவும்

கிரீன் டீ உட்கொள்ளலை அதிகரிக்கவும்

சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் நிபுணர்களின் கூற்றுப்படி, பச்சை தேயிலையில் உள்ள பாலிபினால்கள், புற்றுநோய் செல்களைக் கொல்லவும், அவற்றின் முன்னேற்றத்தை நிறுத்தவும் உதவுகின்றன, இது பல்வேறு புற்றுநோய்களைத் தடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 472 பெண்களை அவர்கள் ஆய்வு செய்தனர் இந்த ஆராய்ச்சியின் முடிவில், அதிக க்ரீன் டீ அருந்தியவர்களுக்கு இந்த நோய் பரவுவது குறைந்தது கண்டறியப்பட்டது.

நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும்

நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும்

நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் குடல் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. உடலில் உள்ள நார்ச்சத்துக்களின் அன்றாட தேவைக்கு ஈடுசெய்யக்கூடிய முழு தானிய தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. உணவில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள பாக்டீரியாவை சந்திக்கும் போது, ​​பாக்டீரியா ப்யூட்ரேட்டை உருவாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, இது குடலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

MOST READ: ஆக்ஸ்போர்டில் கொரோனா தடுப்பூசி எப்படி உருவாக்கப்பட்டது? எப்ப மக்களுக்கு கிடைக்கும் தெரியுமா?

 வைட்டமின் டி 3 நுகர்வை அதிகரிக்கவும்

வைட்டமின் டி 3 நுகர்வை அதிகரிக்கவும்

வைட்டமின் டி நோயெதிர்ப்பு மற்றும் நரம்பு மண்டலம் சரியாக செயல்பட உதவுகிறது. குறைந்த அளவு வைட்டமின் டி உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண மார்பக உயிரணு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், மார்பக புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கவும் வைட்டமின் டி நுகர்வு அதிகரிப்பது அவசியம். வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்தவர்களுக்கு புற்றுநோயால் இறக்கும் ஆபத்து 13% குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cancer Prevention Eating Guidelines

Check out the list of changes that you need to make in your diet to prevent cancer at all costs.
Desktop Bottom Promotion