For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு நீங்க முட்டை சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான திறவுகோல் உங்கள் குடல் ஆரோக்கியம் என்பதால், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

|

கோவிட் -19 தடுப்பூசி போடும்போது, பல தடைகள் மற்றும் கேள்விகள் உள்ளன. அவை பெரும்பாலும் நம்மைத் தடுக்கின்றன. உண்மையில், தடுப்பூசிகள் மற்றும் உணவுகளின் செயல்திறனைச் சுற்றியுள்ள ஒரு சில கட்டுக்கதைகள் உள்ளன. லட்சகணக்கான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி பற்றி பரவி வரும் வதந்திகளால் மக்களிடத்தில் பயம் வருகிறது. ஆனால் ஒருவர் சரியாக சாப்பிட்டு, அவர்களின் சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டதைப் பின்பற்றினால் இந்த பக்க விளைவுகளை எளிதாக நிர்வகிக்க முடியும்.

Can you eat eggs after getting vaccinated for COVID-19?

பயங்கரமான வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கான ஒரே வழி, தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே. சமூக ஊடகங்களில் மிதந்து வரும் ஒரு பொதுவான கட்டுக்கதை என்னவென்றால், தடுப்பூசி போடுவதற்கு முன்னும் பின்னும் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தான். கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு முட்டை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா அல்லது கட்டுக்கதையா? என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிபுணர்களின் கூற்றுப்படி, அத்தகைய கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு உணவை ஒருவர் பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் ஆரோக்கியமான சீரான உணவுக்கு ஒருவர் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் காய்ச்சல், உடல் வலி, பலவீனம் போன்ற தடுப்பூசிகளின் பின் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

MOST READ: நீங்க உணவை வேக வேகமா சாப்பிடுறீங்களா? அப்ப உங்க உடலில் இந்த பிரச்சனை கண்டிப்பா வருமாம்...!

குடல் ஆரோக்கியம்

குடல் ஆரோக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான திறவுகோல் உங்கள் குடல் ஆரோக்கியம் என்பதால், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக புதிய காய்கறிகளும், பழங்களும், முழு தானியங்களும் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான புரதம் அல்லது ஒல்லியான இறைச்சிகளும் எடுத்துக்கொள்ளலாம்.

முட்டையை சாப்பிடலாமா?

முட்டையை சாப்பிடலாமா?

முட்டைகள் சூப்பர் சத்தான உணவு மற்றும் புரதத்தின் நன்மைகளால் நிரம்பியுள்ளன. ஒரு பெரிய முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. இது உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்தின் ஆரோக்கியமான ஊக்கத்தை அளிக்கும். முட்டைகளில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. அவை மனித உடலால் தொகுக்க முடியாதவை, அவை நாம் உண்ணும் உணவில் இருந்து மட்டுமே பெற முடியும். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநிறைவை அதிகரிக்க தினமும் காலையில் முட்டை சாப்பிட அறிவுறுத்தப்படுவது இதற்குதான்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

தடுப்பூசிக்குப் பிறகு நம் உடலுக்கு ஒரு புரதச்சத்து நிறைந்த உணவு தேவைப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட உணவுகளும் அடங்கும், இது இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவுகிறது மற்றும் தடுப்பூசியின் பின் விளைவுகளிலிருந்து புத்துயிர் பெற உடலுக்கு போதுமான சத்துக்களை கொடுக்க உதவுகிறது.

MOST READ: ஆண்டிற்கு 300 நாட்கள் தூங்கும் வியாதி கொண்ட நவீன 'கும்பகர்ணன்'.. தலைசுற்ற வைக்கும் அறிவியல் கோளாறு!

நீங்கள் எப்போது முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்?

நீங்கள் எப்போது முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்?

இருப்பினும், உங்களுக்கு முட்டை சாப்பிடுவது ஒவ்வாமை இருந்தால், தடுப்பூசிக்கு முன் அல்லது பின் முட்டை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. நோயெதிர்ப்பு அமைப்பு உணர்திறன் அடைந்து, முட்டையின் வெள்ளை அல்லது மஞ்சள் கருவில் இருக்கும் புரதத்திற்கு அதிகமாக செயல்படும்போது முட்டை ஒவ்வாமை ஏற்படுகிறது.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு முட்டைகளின் நுகர்வு சில நேரங்களில் தடிப்புகள், அரிப்பு போன்ற ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கிறது மற்றும் கடுமையான உணவு ஒவ்வாமை எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்களுக்கு முட்டை ஒவ்வாமை இருந்தால், முட்டையை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can you eat eggs after getting vaccinated for COVID-19?

Here we are talking about the Can you eat eggs after getting vaccinated for COVID-19?.
Story first published: Friday, July 16, 2021, 17:06 [IST]
Desktop Bottom Promotion