For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காய்ச்சல் இருக்கும் போது முட்டை, மீன் அல்லது இறைச்சி சாப்பிடலாமா?

தற்போது கொரோனா பெருந்தொற்று உக்கிரமாக இருக்கும் இந்த நிலையில், காய்ச்சலுக்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

|

காய்ச்சலை விட ஒரு பாதுகாப்பற்றச் சூழலை அல்லது ஒரு வலுவிழந்த நிலையை நாம் அனுபவிக்க முடியாது. ஏனெனில் காய்ச்சல் நமது வலுவை இழக்கச் செய்கிறது. நமக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறது. அது பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சலாக இருக்கலாம் அல்லது வைரஸ்களின் தொற்றால் ஏற்படும் காய்ச்சலாக இருக்கலாம் அல்லது நோய்க் கிருமிகளின் காரணமாக ஏற்படும் காய்ச்சலாக இருக்கலாம். மொத்தத்தில் காய்ச்சல் நமக்கு ஒரு பாதுகாப்பற்ற அசாதாரண சூழலை, அசௌகாியத்தை மற்றும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

 Can We Eat Egg, Fish Or Meat In Fever?

தற்போது கொரோனா பெருந்தொற்று உக்கிரமாக இருக்கும் இந்த நிலையில், காய்ச்சலுக்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அந்த சிகிச்சையை மருந்துகளால் மட்டும் செய்ய முடியாது. மாறாக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் மூலம், நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் தான் அந்த சிகிச்சையை செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்ச்சலின் போது எம்மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும்?

காய்ச்சலின் போது எம்மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும்?

பொதுவாக காய்ச்சலாக இருக்கும் போது எப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி நமது மனதில் எழுகிறது. காய்ச்சலுக்கு எதிராக நமது உடல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நாம் எடுக்கும் மருந்துகள், நமது வளா்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

ஒரு சில தருணங்களில் நமக்கு ஏற்படும் காய்ச்சல் நமது உடலில் இருக்கும் நீரை வெளியேற்றி, நமது உடலில் வறட்சியை ஏற்படுத்தும். இந்த நேரங்களில்தான் நாம் அதிகமான அளவில் நீராகாரங்களையும், சத்து நிறைந்த உணவுகளையும் உண்ண வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.

பொதுவாக நமது உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்க வேண்டும் என்றால் சத்து மிகுந்த இறைச்சி, முட்டை மற்றும் மீன் போன்ற உணவுகளை உண்ண வேண்டும் என்று பாிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இந்த உணவுகளை காய்ச்சல் இருக்கும் போது சாப்பிடலாமா என்ற ஐயம் நமக்குள் எழுகிறது.

காய்ச்சல் நேரத்தில் முட்டை, மீன் அல்லது இறைச்சி சாப்பிடலாமா?

காய்ச்சல் நேரத்தில் முட்டை, மீன் அல்லது இறைச்சி சாப்பிடலாமா?

முட்டை, மீன் அல்லது இறைச்சி போன்ற உணவுகள் இயல்பாகவே அதிகமான அளவில் ஆரோக்கியமான புரோட்டீனைக் கொண்டிருக்கின்றன. அதனால் காய்ச்சல் இருக்கும் போது இந்த உணவுகளை உண்டால், அவை நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாித்து, நாம் காய்ச்சலிலிருந்து விரைவில் குணமடைய உதவி செய்யும் என்று மருத்துவ நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

பலவீனமான மெட்டபாலிசத்தின் போது எம்மாதிரியான உணவு உண்ண வேண்டும்?

பலவீனமான மெட்டபாலிசத்தின் போது எம்மாதிரியான உணவு உண்ண வேண்டும்?

எனினும், காய்ச்சல் நேரத்தில் நமது வளா்சிதை மாற்றம் மிகவும் பலவீனமாக இருந்தால், அல்லது குமட்டல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், இது போன்ற சத்து நிறைந்த உணவுகளைத் தவிா்க்க வேண்டும். அதற்கு பதிலாக, மிதமான உணவுகளான சூப்புகள், கஞ்சிகள் அல்லது புரோட்டீன் நிறைந்த பருப்புகள் அல்லது தானியங்கள் அல்லது அாிசி போன்றவை கலந்து கிச்சடி செய்து சாப்பிடலாம்.

முட்டை, மீன் மற்றும் இறைச்சியில் உள்ள சத்துக்கள்

முட்டை, மீன் மற்றும் இறைச்சியில் உள்ள சத்துக்கள்

மீன், முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்றவற்றில் ஆரோக்கியமான புரோட்டீன்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமீன் பி6, வைட்டமீன் பி12, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்த உணவுகள் இயல்பாகவே நமது எலும்புகளை வலுப்படுத்தக்கூடியவை. நமது மூளைக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. நமது ஒட்டு மொத்த நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடியவை.

குறிப்பு

குறிப்பு

குறைவான எண்ணெயில் சமைக்கப்படும் ருசியான முட்டை, மீன், இறைச்சி, சூப் மற்றும் சாலட்டுகள் போன்ற உணவுகள், நாம் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய உதவி செய்கின்றன. எனினும் காய்ச்சல் நேரத்தில், நோய்த் தொற்றுக்கு எதிராக நமது உடல் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் மேற்சொன்ன உணவுகளை உண்பதற்கு முன்பாக மருத்துவாிடன் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can We Eat Egg, Fish Or Meat In Fever?

Amidst the deadly pandemic, treating fever immediately has turned out to be the need of the hour, and only medicines aren’t enough; A healthy nutritious diet can help you sail through the suffering and boost back your immunity.
Desktop Bottom Promotion