Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
ஆபாசப்படம் பார்ப்பது பற்றிய புதிய ஆராய்ச்சி செய்தி... ஜோடியாக ஆபாசப்படம் பார்ப்பவர்களா நீங்கள்?
ஆனால் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது இளம் வயதினரின் முக்கியமான ஒரு பழக்கமாக இருக்கிறது. குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிலையில் ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பெருமளவில் குறைந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆபாசப்படங்கள் பார்ப்பது ஒருவரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறதா என்ற விவாதம் பல ஆண்டுகளாக இருக்கிறது. பொதுவாக ஆபாசப்படங்கள் பார்ப்பது உங்கள் பாலியல் வாழ்க்கையை முதல், உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மற்றும் உங்களை அடிமைப்படுத்துவது தொடங்கி உங்களை தார்மீகரீதியாக தவறாக வழிநடத்துகிறது என்றும் கருதப்படுகிறது. இவற்றில் எந்த அளவில் உண்மை இருக்கிறது? ஆபாசப்படங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையை சிதைக்குமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏன் ஆபாசப்படம் பார்ப்பது ஆபத்தானது?
எதிர்பாலினத்தினருடன் உடலுறவு வைத்துக்கொள்ளாமல் ஆபாசப்படம் பார்த்து சுயஇன்பம் செய்யும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமென ஆய்வுகள் கூறுகிறது. இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவு ஆபாசப்படம் பார்ப்பது பாலியல் அனோரெக்ஸியாவுக்கு வழிவகுக்கும் என்று கண்டறிந்துள்ளது, இது பாலியல் உறவின் போது தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் ஒரு பாலியல் கோளாறு ஆகும். இது மட்டுமின்றி பாலியல் நிபுணர்களின் கருத்துப்படி தொடர்ச்சியாக ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களுக்கு பாலியல் தூண்டுதல் பெற ஆபாசக்காட்சிகள் தேவை என்னும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் உடலுறவில் இருந்து அவர்கள் உடல் முழுமையான இன்பத்தை பெற இயலாது என்றும் கூறுகிறார்கள்.

நீங்கள் கவலைப்பட வேண்டுமா?
ஆபாசப்படங்கள் குறித்த ஆராய்ச்சிகள் பல அதிர்ச்சி தகவல்களை கூறும் அதே நேரத்தில், பல வல்லுநர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளின் மட்டுப்படுத்தும் அம்சத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி உடலுறவை விட ஆபாசப்படங்களை அதிகம் விரும்பும் ஆண்கள் குறைவான பாலியல் செயல்திறனை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆபாசப்படங்கள் பார்ப்பது செயல் இழப்பை ஏற்படுத்துகிறதா அல்லது சுயஇன்பம் இதனை ஏற்படுத்துகிறதா என்று இன்னும் கண்டறிய முடியவில்லை.

உங்களை பாலியல் அடிமையாக மாற்றுகிறதா?
ஆபாசப்படம் பார்ப்பது உங்களை தவறான வழியில் வழிநடத்துவதுடன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவவராகவும் மாற்றக்கூடும் என்ற கூற்றுக்கள் உள்ளன. கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆபாசப்படங்கள் பார்ப்பவர்கள் பார்க்கத்தவர்களை விட பாலின சமத்துவத்தை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறைவான பாலியல் வன்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது அவர்கள் எப்படிப்பட்ட ஆபாசப்படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்பதை பொறுத்துதான் இது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு ஆய்வின் படி இயற்கைக்கு மாறான மற்றும் அதிக வன்முறைகள் நிறைந்த படங்களை பார்க்க விரும்புபவர்களின் பாலியல் மனப்பான்மை மிகவும் மோசமானதாக இருக்கும்.

எப்போது இது பிரச்சனையாக மாறுகிறது?
ஆபாசத்தைப் பார்ப்பதை ஆரோக்கியமற்றதாக மாற்றக்கூடிய நபர்கள், சூழ்நிலைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. ஆபாசப்படத்தைப் பார்ப்பது ஒரு முன்னுரிமையாக மாறும் போது, இது ஒரு கூட்டாளருடன் உடலுறவு கொள்வதை விட அதிக இன்பத்தை அவர்களுக்கு வழங்கும். அந்த நபர் உற்சாகமடைய ஒரு குறிப்பிட்ட வகையான தூண்டுதலைச் சார்ந்து இருக்கிறார் என்று அர்த்தம். அவர்களிடம் உண்மையான விஷயம் இருக்கும்போது, அதே வகையான தூண்டுதல் வராது. இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் கவலையை ஏற்படுத்தும். மேலும், ஆபாசப்படமானது உங்கள் பாலியல் எதிர்பார்ப்புகளை மாற்றி, சாதாரண வழியில் புணர்ச்சியைப் பெறுவதை கடினமாக்குகிறது என்றால், அது கவலைக்கு ஒரு காரணம்.

குற்ற உணர்ச்சி
ஆபாசப்படத்தைப் பார்ப்பது அல்லது சுயஇன்பம் செய்வது தார்மீகரீதியாக தவறான செயலாகக் கருதும் சிலரும் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, இது குறிப்பாக மன உளைச்சலை ஏற்படுத்தும், மேலும் அவர்களின் குற்ற உணர்ச்சிகளை அதிகரிக்கும். பாலியல் வல்லுனர்களின் அறிவுரைப்படி இரண்டு வாரத்திற்கு ஆபாசப்படம் பார்ப்பதையும், சுயஇன்பம் செய்வதையும் தவிர்த்துவிட்டு, அதற்குபின் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆபாசப்படம் பார்ப்பதை தவிர்த்துவிட்டு சுயஇன்பம் மட்டும் காணலாம். அதற்குப்பின் அந்த பழக்கம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அவ்வாறு இல்லையென்றால், இது கவலைக்குரிய காரணமாகும், மேலும் அதற்கு மருத்துவ கவனிப்பு தேவை.

ஆபாசப்படம் போதை போன்றதா?
நரம்பியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மற்ற போதைப்பொருட்களைப் போலவே ஆபாசமும் போதைக்குரியதாக இருக்காது என்று தெரிய வந்துள்ளது. அதாவது, வெளிப்படையான ‘ஆபாச-அடிமையின்' மூளை போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் போல இருக்காது. ஆபாச போதை பற்றிய அதிகாரப்பூர்வ நோயறிதலும் இல்லை. இருப்பினும், உங்கள் அன்றாட நடவடிக்கைகள், உங்கள் உறவுகள், உங்கள் வேலை மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் நீங்கள் அதை அதிகமாகப் பார்த்தால் நிச்சயமாக உங்களுக்கு மருத்துவர் வழிகாட்டுதல் தேவை.

ஆபாசப்படத்தில் உள்ள நல்லது என்ன?
குறிப்பிட்ட அளவில் கட்டுப்பாட்டுடன் பார்க்கும்போது ஆபாசப்படமானது படுக்கையறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது படுக்கையறையில் புதிய விஷயங்களை முயற்சிப்பதற்கான உங்கள் விருப்பத்தை அதிகரிக்கிறது. ஆபாசப்படமானது உங்கள் உடலில் உள்ள கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை பாதியாகக் குறைக்கும் என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளதால் இது ஒரு நல்ல மன அழுத்த நிவாரணியாகும். தவிர, ஆபாசப்படமானது ஆண்கள் மற்றும் பெண்களின் பாலுணர்வை ஆராய உதவும்.

தம்பதிகள் ஒன்றாக ஆபாசப்படம் பார்க்கலாமா?
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தம்பதிகளாக ஆபாசப்படம் பார்ப்பவர்கள், பார்க்கத்தவர்களை விட உடலுறவில் அதிக திருப்தி அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மிகவும் எளிது, ஆபாசப்படமானது போரடிக்கும் சாதாரண வாழ்க்கைக்கு உற்சாகத்தையும் சிலிர்ப்பையும் சேர்க்கிறது.



Click it and Unblock the Notifications











