Just In
- 6 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 8 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 10 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 11 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
Don't Miss
- News
எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடிக்கடி தொடர் தும்மலால் சிரமப்படுறீங்களா? அதை உடனே நிறுத்தும் சில இயற்கை வழிகள்!
சளி பிடித்தால், அலர்ஜி ஏற்பட்டால் அல்லது ஏதேனும் வித்தியாசமான வாசனை போன்றவற்றால் பலர் தொடர்ச்சியான தும்மலை சந்திப்பார்கள். ஒருவருக்கு இம்மாதிரியான தொடர் தும்மல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சில சமயங்களில் இந்த தும்மல் தர்ம சங்கடத்தையும் உண்டாக்கலாம்.
தும்மல் என்பது எரிச்சலூட்டிகள் மற்றும் தொற்று கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கான உடலின் இயற்கை வழியாகும். இப்படிப்பட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கு இயற்கை வழிகளை நிச்சயம் மேற்கொள்ளலாம். அதுவும் தற்போது மழைக் காலம் என்பதால், ஏராளமானோர் சளி பிரச்சனையால், கடுமையான தும்மலால் அவஸ்தைப்படுவார்கள்.
உங்க குழந்தைக்கு புற்றுநோய் இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
இக்கட்டுரையில் தொடர் தும்மலை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, அவற்றைப் பின்பற்றி தும்மலில் இருந்து விடுபடுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப்ஃபுரூட் போன்றவற்றில் உள்ள குறிப்பிட்ட தாவர கெமிக்கல்களான ப்ளேவோனாய்டுகள் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும். மேலும் இது உடலைத் தாக்கி சளியை உண்டாக்கும் தேவையற்ற பாக்டீரியாக்கள் மற்றும் இதர அலர்ஜிகளை எதிர்த்துப் போராட உதவும். இந்த பழங்களை மழைக்காலங்களில் தினமும் உட்கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஜிங்க் உணவுகள்
சளி தொல்லை அல்லது தும்மல் பிரச்சனையை சந்திப்பவர்கள், ஜிங்க் உணவுகளை உண்பதே சிறந்தது. நீங்கள் இப்பிரச்சனையில் இருந்து உடனே விடுபட நினைத்தால், ஜிங்க் சத்து நிறைந்த உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்டுகளை எடுங்கள். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, விரைவில் குணமாகலாம். இத்தகைய ஜிங்க் சத்து பருப்பு வகைகள், நட்ஸ், விதைகளில் அதிகம் நிறைந்துள்ளது.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதற்கு நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவில் எடுக்கலாம். தொடர் தும்மலால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை நெல்லிக்காயை உட்கொண்டால், தும்மல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கருப்பு ஏலக்காய்
நறுமணமிக்க மசாலாப் பொருளான கருப்பு ஏலக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த மசாலாப் பொருள் இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும். தும்மல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் இரண்டு முதல் மூன்று முறை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கருப்பு ஏலக்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இது சுவாசப் பாதையில் உள்ள சளி ஓட்டத்தை இயல்பாக்க உதவுகிறது. அதற்கு இந்த எண்ணெயைக் கொண்டு லேசாக மசாஜ் செய்தாலே போதுமானது.

இஞ்சி
இஞ்சியில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளது மற்றும் இது சளியைக் குணப்படுத்த உதவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், 3 இன்ச் இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்கவும் அல்லது தும்மல் பிரச்சனையின் போது தயாரித்துக் குடிக்கவும்.

துளசி
புனிதமான துளசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. துளசி இலையில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது அபாயகரமான தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 3-4 துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 2-3 நாட்கள் குடித்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பூண்டு
பூண்டில் உள்ள உட்பொருட்கள், தொல்லைத் தரும் அலர்ஜி பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவும். பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் ஸ்பெஷலான உட்பொருள், சுவாசக் குழாயில் சளித் தேக்கத்தைத் தடுப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ஆகவே தும்மல் பிரச்சனைக்கு சிறப்பான பலன் கிடைக்க, சில பூண்டு பற்களை நெய்யில் போட்டு பொன்னிறமாக வதக்கி உட்கொள்ளுங்கள்.

குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சளி மற்றும் தும்மல் பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை வழிகள் தான். ஆனால் உங்களுக்கு சளி அல்லது தும்மல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது வேறு ஏதேனும் பிரச்சனைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே இந்நிலையில் உங்கள் மருத்துவரை சந்தித்து, அவர் பரிந்துரைப்பதைப் பின்பற்றுங்கள்.