For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பை சீக்கிரம் குறையணுமா? அப்ப 'இத' தேன்-ல ஊற வெச்சு சாப்பிடுங்க...

|

சமையலறையில் பொதுவாக காணப்படும் இரண்டு பொதுவான பொருட்கள் தான் பூண்டு மற்றும் தேன். இவை இரண்டுமே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை. இதில் பூண்டு உணவிற்கு ஒரு நல்ல சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. தேன் ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த இரண்டு பொருட்களின் ஆரோக்கிய நன்மைகளும் அறிவியலாலும் ஆதரிக்கப்படுகின்றன.

சளி மற்றும் இருமல் முதல் அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தம் வரை, இந்த இரண்டு பொருட்களுமே ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறிகளைக் குறைத்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன. பிரபல நம்பிக்கைகளின் படி, தேன் மற்றும் பூண்டு ஆகிய இரண்டுமே சக்தி வாய்ந்தவை. இவை இரண்டும் ஒன்று சேரும் போது, அதன் பலன்கள் இரட்டிப்பாகும். குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் அவதிப்படும் உடல் பருமன் பிரச்சனைக்கு இந்த பூண்டு தேன் கலவை பெரிதும் உதவி புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் பூண்டு உடல் எடையைக் குறைக்க உதவுமா?

தேன் மற்றும் பூண்டு உடல் எடையைக் குறைக்க உதவுமா?

உண்மையாக கூற வேண்டுமானால், இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது எடை இழப்பிற்கு உதவும் என்பதற்கு எந்த ஒரு உறுதியான ஆதாரங்களும் இல்லை. அதற்காக இதை நீங்கள் முயற்சிக்கக்கூடாது என்று அர்த்தமல்ல. இரண்டு பொருட்களுமே தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அதில் இவை உடல் எடையைக் குறைக்க நேரடியாக உதவாமல் இருக்கலாம் அல்லது கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்தலாம். ஆனால் இவை நிச்சயமாக உடல் எடை இழப்பு திட்டத்தை ஆதரிக்கும்.

பூண்டு எடை இழப்பை எவ்வாறு ஆதரிக்கிறது?

பூண்டு எடை இழப்பை எவ்வாறு ஆதரிக்கிறது?

பூண்டு ஒரு ஊட்டச்சத்துக்களின் கிடங்கு. இது வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீசு, கால்சியம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் படி, 8 வாரங்களுக்கு பூண்டு சாப்பிடுவது உடலில் சேமிக்கப்படும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவும் என்பது தெரிய வந்தது. அதோடு இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

தேன் எடை இழப்பை எவ்வாறு ஆதரிக்கிறது?

தேன் எடை இழப்பை எவ்வாறு ஆதரிக்கிறது?

தேன், உடலில் ஆற்றலுக்கான குளுக்கோஸை உற்பத்தி செய்ய உதவி, உடலில் எரிபொருளாக செயல்படுகிறது. குளுக்கோஸ் மூளையின் சர்க்கரை அளவை அதிகமாக வைத்திருக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை வெளியிட கட்டாயப்படுத்துகிறது. தேனின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், ஃப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

பூண்டு மற்றும் தேனை எவ்வாறு சாப்பிடுவது?

பூண்டு மற்றும் தேனை எவ்வாறு சாப்பிடுவது?

ஒரு பூண்டு பல்லை எடுத்து அதன் தோலை உரித்துவிட்டு, நசுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய கப்பில் ஒரு டீபூன் தேனை எடுத்துக் கொண்டு, அதில் நசுக்கிய பூண்டு சேர்த்து கலந்து, 15-20 நிமிடம் ஊற வைக்கவும். இந்த தேன் பூண்டை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வேண்டுமானால், நீங்கள் கொஞ்சம் அதிகமாக தயாரித்தால், அதை 3 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு

குறிப்பு

தேனில் ஊற வைத்த பூண்டை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 2 பல் பூண்டுக்கு மேல் சாப்பிடக்கூடாது. அதிகளவு பூண்டு சாப்பிட்டால், அது வாய் துர்நாற்றம், வாய் அல்லது வயிற்றுப் பகுதியில் எரிச்சல் உணர்வு, நெஞ்செரிச்சல், வாய்வுத் தொல்லை, குமட்டல், வாந்தி, உடல் துர்நாற்றம் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராகவோ, கர்ப்பமாகவோ அல்லது இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவராக இருந்தால், மருத்துவரை அணுகாமல் உட்கொள்ளக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can Garlic And Honey Really Help You Lose Weight

Can the combination of garlic and honey help you lose weight? Read on...
Story first published: Thursday, May 13, 2021, 15:55 [IST]