For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நேரத்துல நீங்க பல் துலக்குனா... நீண்ட ஆயுளோட ஆரோக்கியமா இருக்கலாமாம் தெரியுமா?

உங்கள் பற்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, உங்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. 20-க்கும் மேற்பட்ட பற்கள் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், பற்கள் இல்லாதவர்களுக்கு 30 சதவிகிதம் அதிகமான இறப்பு ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர

|

வாய்வழி சுகாதாரம் என்பது ஒருவரின் வாயை சுத்தமாகவும், பல் நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் இல்லாமல், தொடர்ந்து பல் துலக்குதல் மற்றும் பற்களுக்கு இடையில் சுத்தம் செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும். ஆனால் உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது உண்மையில் நீண்ட ஆயுளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். மேலும் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல் துலக்குவது சிறந்த நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அந்த நேரத்தில் உங்கள் வாய்வழி சுகாதாரத்தை பேணுவது நல்லது.

Brushing Teeth Before Bedtime Is Linked To A Longer Life, Says Study in tamil

எனவே, உங்கள் வாயின் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்பதற்கும் உள்ள இந்த ஆச்சரியமான தொடர்பைப் பற்றி ஆராய்ச்சிகள் என்ன வெளிப்படுத்தியுள்ளன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி கூறுவது

ஆராய்ச்சி கூறுவது

ஏஜிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், நல்ல வாய் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. 1992 முதல் 2009 வரை 5,611 வயதான பெரியவர்களிடம் பல் சுகாதார நடத்தைகள் மற்றும் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு பற்றிய பற்களின் நிலை ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஆபத்து மதிப்பீடுகளை கணக்கிட்டனர். பாலினம், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), புகைபிடிக்கும் நிலை மற்றும் பங்கேற்பாளர்களின் நாள்பட்ட நோயின் வரலாறு போன்ற மாறிகள் முடிவுகளுக்கு வருவதற்கு முன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்?

ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்?

இரவில் படுக்கைக்கு முன் பல் துலக்குவது நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும், ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரப் பழக்கவழக்கங்கள், தினசரி பல் ஃப்ளோஸைப் பயன்படுத்துதல் மற்றும் பல் மருத்துவரைப் பார்ப்பது போன்றவை நீண்ட ஆயுளுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கின்றனர். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் மருத்துவரைப் பார்ப்பதை விட, கடந்த 1 வருடத்தில் பல் மருத்துவரைப் பார்க்காதவர்களின் இறப்பு அபாயம் 30-50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இறப்பு அபாயம்

இறப்பு அபாயம்

மறுபுறம், தினமும் துலக்குவதை விட, இரவில் ஒருபோதும் பல் துலக்காதவர்களின் இறப்பு அபாயம் 20-35 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும், தினசரி பற்களின் இடுக்குகளில் சுத்தம் செய்பவர்களை ஒப்பிடுகையில், ஒருபோதும் பற்களின் இடுக்குகளில் சுத்தம் செய்யாதவர்களின் இறப்பு அபாயம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

பற்களின் எண்ணிக்கை மற்றும் நீண்ட ஆயுள்

பற்களின் எண்ணிக்கை மற்றும் நீண்ட ஆயுள்

உங்கள் பற்களின் எண்ணிக்கை குறைந்து வரும்போது, உங்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. 20-க்கும் மேற்பட்ட பற்கள் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், பற்கள் இல்லாதவர்களுக்கு 30 சதவிகிதம் அதிகமான இறப்பு ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சமூக பல் மருத்துவம் மற்றும் வாய்வழி தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஆரோக்கியமான பற்களைப் பராமரிப்பது வயதானவர்களுக்கு உயிர்வாழ்வதை ஊக்குவிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

உடல்நல பிரச்சனைகள்

உடல்நல பிரச்சனைகள்

70 வயதிற்குள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட பற்கள் உள்ளவர்கள் 20க்கும் குறைவான பற்களைக் கொண்டவர்களை விட நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட ஆயுளைத் தவிர, வாய்வழி சுகாதார குறிகாட்டிகள் இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

வாய்வழி ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?

வாய்வழி ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?

ஆரோக்கியமான வாயை பராமரிக்க, நிபுணர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஃவுளூரைடு பற்பசை மூலம் துலக்க பரிந்துரைக்கின்றனர். நீங்கள் அடிக்கடி சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதைக் குறைத்து, ஒவ்வொரு உணவிற்கும் பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும். உங்கள் பல்மருத்துவரை தவறாமல் சந்திப்பது உங்களுக்கு ஏதேனும் நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். மேலும் இது உங்கள் புன்னகையை மேம்படுத்தவும் உதவும். உங்கள் பற்களை நன்கு கவனித்துக்கொள்வது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Brushing Teeth Before Bedtime Is Linked To A Longer Life, Says Study in tamil

Here we are talking about the Brushing Teeth Before Bedtime Is Linked To A Longer Life, Says Study in tamil.
Story first published: Monday, July 4, 2022, 15:06 [IST]
Desktop Bottom Promotion