For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

5 ஆண்டுகளுக்கு முன்னரே மார்பக புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் தெரியுமா?

மார்பக புற்றுநோயை பற்றி ஆராய்ச்சி செய்த போது 5 வருடங்களுக்கு முன்னரே சில அறிகுறிகளை வைத்து நாம் மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

|

ஆண்டுதோறும் பெண்களை தாக்கும் ஒரு கொடிய புற்று நோய் என்றால் அது மார்பக புற்றுநோய். இந்த மார்பக புற்றுநோயால் ஏராளமான பெண்கள் இன்று வரை இறந்து வருகிறார்கள். எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவதும் எளிதாகி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நாம் அதற்கான அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடுகிறோம். மருத்துவ துறையும் இதற்காக ஏகப்பட்ட புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்து தான் வருகிறது.

Breast Cancer Symptoms Can Be Identified 5 Years Before It Actually Happens

அந்த வகையில் தற்போது இரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை கண்டறியும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான வெளியீட்டை வெளியிட்டு உள்ளனர். அதாவது புற்றுநோய் ஒரு மனிதருக்கு ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் மார்பக புற்றுநோயை பற்றி ஆராய்ச்சி செய்த போது 5 வருடங்களுக்கு முன்னரே சில அறிகுறிகளை வைத்து நாம் மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

MOST READ: டர்ர்ர்.... புர்ர்ர்... மூலமா கொரோனா வைரஸ் பரவும் என்பது உண்மையா? ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இங்கிலாந்து ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

இங்கிலாந்து ஆராய்ச்சி என்ன சொல்கிறது?

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட 90 நோயாளிகளின் இரத்த மாதிரிகள் மற்றும் முற்றிலும் ஆரோக்கியமான பெண்களின் 90 மாதிரிகளும் மருத்துவர்களால் சேகரிக்கப்பட்டது. இதன் துல்லியத்தை கண்டறிய இந்த இரத்த மாதிரிகளை மேலும் மேலும் பரிசோதித்தோம்.

MOST READ: நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க...

இரத்த பரிசோதனை

இரத்த பரிசோதனை

இது குறித்து நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் டானியா அல்பதானி கூறுகையில், "மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் இரத்த பரிசோதனை மூலம் கண்டறிவது நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் புற்றுநோய் சிகிச்சைக்கு என்று ஏகப்பட்ட செலவுகள் வருகின்றன என்று அவர் கூறினார். மேலும் இதன் மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிய உதவும் விலையுயர்ந்த சாதனங்கள் இனி தேவைப்படாது. இது ஒரு எளிதான மாற்றமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

MOST READ: இந்த சாதாரண பழக்கங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? இன்னக்கே அத கைவிடுங்க...

2.1 பில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைகின்றனர்

2.1 பில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைகின்றனர்

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.1 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 2018 ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் 27 ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் இறந்தனர். இது மற்ற வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் இறப்புகளில் சுமார் 15 சதவீதம் ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை கூறிய ஸ்பானிஷ் நிபுணர்கள்... அது என்ன அறிகுறி?

முன்பே அடையாளம் காணலாம்

முன்பே அடையாளம் காணலாம்

அல்படானி கூறுகையில், "இந்த ஆராய்ச்சியில் நாங்கள் மேலும் பணியாற்ற வேண்டியிருக்கிறது , மேலும் இதை மேம்படுத்த வேண்டும். இருப்பினும் இந்த ஆராய்ச்சியில், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே அதன் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்பது ஒரு சந்தோஷமா செய்தி . இதன் துல்லியத்தை மேம்படுத்த நாங்கள் இன்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதை நீக்க வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோளாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

MOST READ: இருமல் வந்தாலே கொரோனா வைரஸா இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க...

பரிசோதனை 4 அல்லது 5 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்

பரிசோதனை 4 அல்லது 5 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்

இந்த ஆராய்ச்சியின் பயன் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் வந்து விடும். இந்த ஆராய்ச்சி குறித்த மேலும் விவரங்கள் இங்கிலாந்தின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தால் கிளாஸ்கோ என்ற புற்றுநோய் மாநாட்டில் வழங்கப்பட்டது.

MOST READ: மக்களே உஷார்..! கொரோனா வைரஸ் காற்றிலும் பரவுமாம்.. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்..

புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்

புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்

மேலும் மக்கள் புற்றுநோய் விழிப்புணர்வை பெற புற்றுநோய் எங்கு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, எப்படி பரவுகிறது போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். நிட்டி பாக் நகரில் உள்ள ராஜீவ் காந்தி புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சஜ்ஜன் ராஜ்புரோஹித் கூறுகையில், "மார்பக புற்றுநோயைப் பற்றி அதன் உடற்கூறியல் அறிவைப் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது அவசியம். மார்பகமானது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். மார்பகத்தின் செயல்பாடு அதன் திசு வழியாக தாய்ப்பாலை உருவாக்குவதாகும். இந்த திசுக்கள் முலைக்காம்புடன் குழாய்களின் வழியாக இணைக்கப்படுகின்றன. இது தவிர, கொழுப்பு, நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் சில நிணநீர் சேனல்கள் போன்ற சில நார்ச்சத்து பொருட்கள் இங்கு உள்ளன. அவை தான் பெண்களுடைய மார்பக கட்டமைப்பை நிறைவு செய்கின்றன. மார்பக புற்றுநோய்கள் இருந்தால் மற்றும் பரவாமல் இருந்தால், எளிதாக சிகிச்சையளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் தாமதமாக சிகிச்சையளிப்பது பெண்களின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை குறைக்கும். எனவே மார்பக புற்றுநோய்களில் ஆரம்பகால நோயறிதலை நாம் கண்டறிய வேண்டும் என்கிறது இந்த ஆராய்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Blood Test Can Detect Breast Cancer 5 Years Before Symptoms Occur

Did you know breast cancer symptoms can be identified 5 years before it actually happens. Read on to know more...
Desktop Bottom Promotion