For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா?

உலகத்தில் ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கைரேகை மட்டும்தான் இப்படி தனித்துவம் வாய்ந்ததா என்று கேள்விகேட்டால் அதற்கு இல்லை என்பதுதான் பதில்.

|

நமது உடல் என்பது பல அதிசயங்கள் நிறைந்த ஒன்றாகும். ஏனெனில் மருத்துவம் வானளவு வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் மனித உடல் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்த பாடில்லை, மனித உடலைப் பற்றிய ஒவ்வொரு ஆராய்ச்சியும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மனித உடலில் இருக்கும் முக்கியமான அதிசயங்களில் ஒன்று நம்முடைய கைரேகை ஆகும்.

body parts as unique as your fingerprint

உலகத்தில் ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கைரேகை மட்டும்தான் இப்படி தனித்துவம் வாய்ந்ததா என்று கேள்விகேட்டால் அதற்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் நமது உடலில் இருக்கும் வேறு சில உறுப்புகளும் கூட இப்படி தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதன்படி உங்களுக்கு இருப்பது போல வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. இந்த பதிவில் உடலின் எந்தெந்த பாகங்கள் இப்படி தனித்துவத்துடன் இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருவிழிப் படலம்

கருவிழிப் படலம்

உங்கள் கண்கள்தான் உங்களின் ஆன்மாவிற்கும், உங்களுக்குமான அடையாளமாகும். கண்ணுக்குள் எவ்வளவு ஒளி நுழைய வேண்டும் என்பதை கருவிழிப் படலம்தான் முடிவு செய்கிறது, இது சிறிய உரை வடிவங்களைக் கொண்டுள்ளது. கருவளர்ச்சியின் போது டி.என்.ஏ கருவிழியின் நிறத்தையும் கட்டமைப்பையும் தீர்மானிக்கிறது, அதன் சீரற்ற குழிகள், உரோமங்கள், சுழல்கள் மற்றும் பிளவுகள் கருவின் வளர்ச்சியின் போது நிகழ்கின்றன. இது ஒவ்வொரு கருவிழியையும் தனித்துவமாக்குகிறது.

காது

காது

உங்கள் காதுகளின் விளிம்புகளை கவனியுங்கள். அதன் வளைவுகள் மற்றும் முகடுகளை உணருங்கள். அந்த வடிவமும், அமைப்பும் உங்களுக்கு மட்டும்தான் இருக்கும். பிரிட்டிஷ் ஆய்வில் ஒருவரை தனித்துவமாக அடையாளம் காண்பதில் ஒருவரின் காது 99 சதவீதம் துல்லியமாக இருப்பதாக கூறுகிறது.

உதடு ரேகை

உதடு ரேகை

தடயவியல் மற்றும் பல அறிவியல் ஆய்வுகளின் படி உதடு ரேகை என்பது கைரேகைகள் போல தனித்துவம் வாய்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. உதடு ரேகையை நீதிமன்றங்கள் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளும். ஒருவரின் உதடு ரேகை போல மற்றவருக்கு இருக்காது.

MOST READ: சாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா?

நாக்கு

நாக்கு

கைரேகையைப் போலவே நாக்கும் தனக்கென சொந்த வடிவத்தையும், அமைப்பையும் கொண்டுள்ளது. அதில் இருக்கும் சிறிய புள்ளிகள் மற்றும் முகடுகள் ஒவ்வொரு நாக்கிற்கும் வித்தியாசப்படும். நாக்கு வாய்க்குள் பாதுகாக்கப்படுவதால் விரல் நுனிகளைப் போலல்லாமல், இது வடுவாக மாறக்கூடும். காலப்போக்கில் இந்த வடிவங்கள் அரிதாகவே மாறுகின்றன.

கால் அச்சு

கால் அச்சு

குழந்தைகள் கருவில் இருக்கும்போது கைரேகைகள் உருவாகும்போது கால் அச்சும் உருவாகிறது. வெளிநாடுகளில் குற்றவாளிகளின் கைரேகைகள் மட்டுமில்லாமல் கால் ரேகைகளையும் பதிவு செய்கிறார்கள். கருவில் இருந்து உருவாகுவதால் கைரேகையைப் போலவே கால் அச்சும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். ஒருவரின் கால் அச்சு போலவே மற்றவருக்கு இருக்காது.

பற்கள்

பற்கள்

உங்கள் பற்கள் உங்கள் டி.என்.ஏவை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல்களை அடையாளம் காண பல் பதிவுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை உங்கள் தனிப்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். பல்வேறு விதமான பழக்கங்களாலும், சுற்றுசூழல் காரணங்களாலும் இரட்டை பிறவிகள் கூட வெவ்வேறு விதமான பற்கலிக் கொண்டுள்ளனர்.

MOST READ: அன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவுதான் இது...!

விழித்திரை

விழித்திரை

கண்ணின் பின்புறம் இருக்கும் விழித்திரை உங்கள் நரம்பு மண்டலத்தின் துல்லியமான பிரதிபலிப்பு ஆகும், இது உங்களுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் ஆரோக்கியம் கூட குறைந்து வருவதைக் கண்டறிய உங்கள் கண் மருத்துவர் கவனிக்கும் இரத்த நாளங்களின் வடிவத்தை இது காட்டுகிறது. இது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். இரட்டைப் பிறவிகளுக்குக் கூட விழித்திரை ஒரே மாதிரி இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Body Parts as Unique as Your Fingerprint

As like unique fingerprint, here are the other body parts also unique.
Story first published: Thursday, August 22, 2019, 15:17 [IST]
Desktop Bottom Promotion