For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்க இந்த மூன்று விஷயங்களை சரியாக பண்ணுனா போதுமாம்...!

கொரோனா தொற்று இந்தியா பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதனுடன் சில ஆபத்தான இணைப்பு நோய்களும் மக்களைத் தாக்க தொடங்கியுள்ளது.

|

கொரோனா தொற்று இந்தியா பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதனுடன் சில ஆபத்தான இணைப்பு நோய்களும் மக்களைத் தாக்க தொடங்கியுள்ளது. அந்த நிலையில் மக்களை வேகமாகத் தாக்கிக் கொண்டிருக்கும் நோய்த்தொற்றுகளில் ஒன்று மியூக்கோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்றுநோயாகும்.

Black Fungus: Simple Oral Tips To Prevent the Fungal Infection

கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை நோயாகும், இது நீண்ட காலமாக ஸ்டெராய்டுகள் வழங்கப்பட்ட நோயாளிகளில் பொதுவாகக் காணப்படுகிறது, நீண்ட காலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர் அல்லது வெண்டிலேட்டர் வைக்கப்பட்டவர்கள் , மோசமான மருத்துவமனை சுகாதாரம் அல்லது நீரிழிவு போன்ற பிற நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் கருப்பு பூஞ்சையால் எளிதில் தாக்கப்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கருப்பு பூஞ்சை தொற்று அபாயகரமானதாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா நோயாளிகளை ஏன் தாக்குகிறது?

கொரோனா நோயாளிகளை ஏன் தாக்குகிறது?

COVID மருந்துகள் உடலை பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை குறைவாகவும் விடக்கூடும். நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு அல்லாத COVID-19 நோயாளிகளிலும் அவர்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க முடியும், இது பூஞ்சை தொற்று ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் சில எளிய பல் சுகாதார விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், கருப்பு பூஞ்சை உள்ளிட்ட வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களைப் பிடிக்கும் வாய்ப்புகளை ஒருவர் குறைக்க முடியும் என்று பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்

கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்

கருப்பு பூஞ்சையின் பிரதான அறிகுறி வாய்வழி திசுக்கள், நாக்கு, ஈறுகள், மூக்கடைப்பு, கடுமையான வலி, முகத்தின் வீக்கம், கண்களுக்குக் கீழே கனத்தன்மை, காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும். கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு 3 வழிகளில் குறைக்கலாம் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் கொரோனா தொற்று ஆபத்தான நிலைக்கு போயிருச்சுனு அர்த்தமாம்... உஷார்...!

வாய்வழி சுகாதாரத்தை கடைப்பிடிக்கவும்

வாய்வழி சுகாதாரத்தை கடைப்பிடிக்கவும்

COVID மீட்புக்குப் பிறகு, ஸ்டெராய்டுகள் மற்றும் பிற மருந்துகளை உட்கொள்வது வாயில் உள்ள பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ந்து சைனஸ், நுரையீரல் மற்றும் மூளையில் கூட சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை / மூன்று முறை துலக்குவதன் மூலம் உங்கள் வாயை கவனித்துக்கொள்வது மற்றும் வாய்வழி சுத்தம் செய்வது பூஞ்சைத் தொற்றில் தப்பிக்க மிகவும் உதவும்.

வாய் கொப்பளித்தல்

வாய் கொப்பளித்தல்

COVID-19 க்குப் பிறகு நல்ல வாய்வழி சுகாதாரத்தைப் பேணுவது நோயாளிகள் நோயின் தாக்கத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாகும். நோயாளிகள் எதிர்மறை முடிவை பெற்றவுடன் பல் துலக்கும் பிரஷை மாற்றவும், தொடர்ந்து வாயைக் கொப்பளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MOST READ: தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

ப்ரஷ் மற்றும் டங் க்ளீனரை கிருமி நீக்கம் செய்யவும்

ப்ரஷ் மற்றும் டங் க்ளீனரை கிருமி நீக்கம் செய்யவும்

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தங்கள் ப்ரஷ் மற்றும் டங் க்ளீனரை மற்றவர்கள் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்டிசெப்டிக் மவுத்வாஷைப் பயன்படுத்தி ப்ரஷ் மற்றும் டங் கிளீனரை தவறாமல் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இது அனைத்து விதமான தொற்று நோயிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Black Fungus: Simple Oral Tips To Prevent the Fungal Infection

Read to know how you can reduce your chances of getting the black fungus infection.
Story first published: Saturday, May 22, 2021, 14:47 [IST]
Desktop Bottom Promotion