For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையில் 2-18 வயதுடைய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடலாமா? போட்டால் பாதுகாப்பானதா?

கோவாக்சின் தடுப்பூசி 2-18 வயது வரையிலான குழந்தைகளுக்கு போடலாம் என்று கோவிட் -19 பொருள் நிபுணர் குழுவால் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

|

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த தடுப்பூசி 2-18 வயது வரையிலான குழந்தைகளுக்கு போடலாம் என்று கோவிட் -19 பொருள் நிபுணர் குழுவால் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Bharat Biotechs Covaxin Vaccine got emergency approval for kids aged 2-18 years

ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், செப்டம்பர் மாதம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் குறித்த 2 மற்றும் 3 ஆம் கட்ட ஆய்வுகளை முடித்தது. மேலும் ஆய்வு முடிவின் தரவு இந்த மாதம் இந்திய மருந்து மற்றும் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (DCGI) சமர்ப்பிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவாக்சின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் கோவிட் தடுப்பூசி

கோவாக்சின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் கோவிட் தடுப்பூசி

கோவாக்சின் இந்தியாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் கோவிட்-19 தடுப்பூசி ஆகும். பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி ஒரு வருடத்திற்கும் மேலாக பெரியவர்களுக்கு போட அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அது குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது என்பதை காட்ட தனித்தனி சோதனைகள் தேவைப்பட்டன. 2 ஆவது கட்டத்தில் 28 நாட்கள் இடைவெளியில் 525 இளைஞர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இருப்பினும், கோவாக்சின் இன்னும் டிசிஜிஐயிடம் ஒப்புதல் பெறவில்லை.

குழந்தைகள் 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் கோவாக்சின் பெற வாய்ப்புள்ளது. பெரியவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையில் 4-6 வார இடைவெளியை அரசு விதித்துள்ளது. இந்தியாவில், கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ZyCoV-D என்னும் தடுப்பு மருந்து 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

அறிக்கைகளின் படி, கோவாக்சின் தடுப்பூசிக்கான ஒப்புதல் நான்கு நிபந்தனைகளுடன் வருகிறது. அவை:

* அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சோதனை நெறிமுறைக்கு ஏற்ப விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* பரிந்துரைக்கும் தகவல்/தொகுப்புச் செருகல் (Package Insert/PI), தயாரிப்புப் பண்புகளின் சுருக்கம் (Summary of Product Characteristics/SmPC) மற்றும் உண்மைத்தாள் (Factsheet) அனைத்தும் திருத்தப்பட வேண்டும்.

* AEFI மற்றும் AESI தரவு உள்ளிட்ட பாதுகாப்புத் தரவை, முதல் இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் பின்னர் மாதந்தோறும், 2019 -ன் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை விதிகளின் படி வழங்க வேண்டும்.

* பிபி நிறுவனம் ஒரு இடர் மேலாண்மை உத்தியை வழங்க வேண்டும். மற்ற அனைத்து அளவுகோல்களின் முந்தைய அனுமதி 18 வயது வயது பிரிவில் உள்ளதைப் போலவே இருக்கும்.

கோவாக்சின் எவ்வாறு வேலை செய்கிறது?

கோவாக்சின் எவ்வாறு வேலை செய்கிறது?

ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் வணிகமான பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின், SARS-CoV-2 விகாரத்திற்கு எதிராக இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிப்பட்டு போடப்பட்ட தடுப்பூசி. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் என்னும் கோவிட்-19 தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 77.8% செயல்திறன் கொண்டது என்று தரவு தெரிவிக்கிறது. இது ஒரு செயலற்ற கொரோனா வைரஸ் விகாரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மனித செல்களுக்குள், இந்த தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் செயலற்ற கொரோனா திரிபு வளராது. மேலும் இது நோய்க்கிருமிகளுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆன்டிபாடி பதிலை முதன்மைப்படுத்துகிறது மற்றும் தூண்டுகிறது. பருவகால இன்ஃப்ளூயன்ஸா, போலியோ, பெர்டுசிஸ், ரேபிஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசிகள் அனைத்துமே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இது வேலை செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கோவாக்சின் உதவலாம்

கொரோனாவின் மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கோவாக்சின் உதவலாம்

குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடும் நடவடிக்கை வரவேற்கத்தக்க நடவடிக்கையாக பாராட்டப்பட்டது. ஏனெனில் கொரோனா மூன்றாவது அலை வந்தால், அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் குழுவாக இருக்கலாம். ஆனால் தடுப்பூசி போடுவதன் மூலம் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம். மேலும் கோவாசின் தவிர ZyCOV-D, ஒரு வகையான டிஎன்ஏ கோவிட் -19 தடுப்பூசி ஆகும். மேலும் இது இளம் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. எனவே இதுவும் குழந்தைகளுக்கு போடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bharat Biotech's Covaxin Vaccine got emergency approval for kids aged 2-18 years

The Subject Expert Committee (SEC) of the drug regulator has recommended granting an emergency use authorization to Covaxin for children aged 2-18 years. Know more.
Story first published: Wednesday, October 13, 2021, 15:01 [IST]
Desktop Bottom Promotion