For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கல்லீரலை அனைத்து விதமான சேதங்களில் இருந்தும் பாதுகாக்க இதுல எதாவது ஒன்னு சாப்பிட்டா போதுமாம்...!

கார்போஹைட்ரேட்டுகளை சேமிப்பதில் இருந்து புரதங்களை உற்பத்தி செய்வது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது மற்றும் பித்தத்தை உருவாக்குவது வரை கல்லீரல் அனைத்தையும் செய்கிறது.

|

நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமெனில் நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒரு உறுப்பு அதன் செயல்பாட்டில் இருந்து விலகினாலும் நம் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அந்தவகையில் நம் உடலின் மிகவும் முக்கியமான பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல்தான்.

Best Foods For Liver Health

கார்போஹைட்ரேட்டுகளை சேமிப்பதில் இருந்து புரதங்களை உற்பத்தி செய்வது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது மற்றும் பித்தத்தை உருவாக்குவது வரை கல்லீரல் அனைத்தையும் செய்கிறது. இந்த உறுப்பு சரியாக செயல்படாமல் போனால் அது நம் உடல் முழுவதையும் நச்சுத்தன்மையை பரவச்செய்யும். உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், முழு மனித உடலும் ஆரோக்கியமாக உணரும். எனவே கல்லீரலை சுத்தப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் உணவை உட்கொள்வது அவசியம். இந்த பதிவில் கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டில் கல்லீரலை ஆதரிப்பதற்கும் கல்லீரல் நொதிகளை செயல்படுத்துவதற்கும் அவசியமான சில சல்பர் கலவைகள் உள்ளன, அவை உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு காரணமாகின்றன. இது செலினியத்தையும் கொண்டுள்ளது, இது ஒரு முக்கியமான கனிமமாகும், இது கல்லீரலின் நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது.

பெர்ரீஸ்

பெர்ரீஸ்

கிரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் அந்தோசயின்கள் இருப்பதால் கல்லீரலை அனைத்து வகையான சேதங்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, திராட்சைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, அவை சக்திவாய்ந்த கல்லீரல்-சுத்தப்படுத்திகளாக அறியப்படுகின்றன. அவை கல்லீரல் நச்சுத்தன்மையை போக்கும் என்சைம்களின் உற்பத்தியையும் அதிகரிக்கின்றன.

MOST READ: எகிப்து பிரமிடுகள் பற்றி நீண்ட காலமாக வெளிவராத ரகசியங்கள்... தலைசுற்ற வைக்கும் ரகசிய வரலாறு...!

வால்நட்

வால்நட்

பருப்புகள் கல்லீரல் சுத்திகரிப்புக்கு துணைபுரியும் அர்ஜினைன் எனப்படும் அமினோ அமிலத்தின் வளமான மூலமாகும். குளுதாதயோன் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் இதில் அதிகம், அவை கல்லீரலின் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

மஞ்சள்

மஞ்சள்

கல்லீரல் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதன் மூலமும் ஆரோக்கியமான கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்குவதன் மூலமும் ஆரோக்கியமான கல்லீரலைப் பராமரிக்க உதவும் மிக சக்திவாய்ந்த மசாலாப் பொருட்களில் மஞ்சள் ஒன்றாகும். இது பித்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பித்தப்பை-சிறுநீர்ப்பையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இது இரத்தத்தை சுத்திகரிக்கும் மற்றொரு உறுப்பு ஆகும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

கிரீன் டீ-ல் தாவர அடிப்படையிலான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை கேடசின்ஸ் என அழைக்கப்படுகின்றன, அவை கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவுவதற்கும் கல்லீரல் கொழுப்பு திரட்சியை அகற்றுவதற்கும் அறியப்படுகின்றன. எனவே ஆரோக்கியமான கல்லீரலை உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் 2-3 கப் கிரீன் டீயைப் பருகவும்.

பீட்ரூட்

பீட்ரூட்

இந்த காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இது நச்சுக் கழிவுகளை உடைக்க உதவும் பித்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன்மூலம் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

MOST READ: உங்க ராசிப்படி எந்த ராசிக்காரங்கள கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க வாழ்க்கை நரகமாகும் தெரியுமா?

காபி

காபி

காபியில் இருக்கும் பாலிபினால்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை சிரோசிஸின் வளர்ச்சிக்கு எதிராக கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Foods For Liver Health

Here are foods that may somewhat help cleanse your liver naturally:
Desktop Bottom Promotion