For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்க நீங்க சாப்பிட வேண்டிய சமையலறை பொருள் என்ன தெரியுமா?

|

உடலின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். கார்போஹைட்ரேட்டுகளை சேமிப்பதில் இருந்து புரதங்களை உற்பத்தி செய்வது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது மற்றும் பித்தத்தை உருவாக்குவது வரை கல்லீரல் அனைத்தையும் செய்கிறது.

உடலின் இந்த உறுப்பு உங்கள் முழு உடலையும் நச்சுத்தன்மையடையச் செய்கிறது. உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், முழு மனித உடலும் ஆரோக்கியமாக உணர்கிறது. எனவே கல்லீரலை சுத்தப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் உணவை உட்கொள்வது அவசியம். இந்த பதிவில் கல்லீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரேப் ப்ரூட்

க்ரேப் ப்ரூட்

கிரேப் பழத்தில் உள்ள நரிங்கெனின் ஈனும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும் ,மற்றும் வீக்கத்தைக் குறைக்க உங்களுக்கு உதவும். மேலும் இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

பெர்ரீஸ்

பெர்ரீஸ்

கிரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் அந்தோசயின்கள் இருப்பதால் கல்லீரலை அனைத்து வகையான சேதங்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் கல்லீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

பீட்ரூட்

பீட்ரூட்

இந்த காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இது நச்சுக் கழிவுகளை உடைக்க உதவும் பித்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

MOST READ: கொரோனாவின் ஆபத்தான புதிய அறிகுறி... இந்த அறிகுறி இருந்தால் அவர்களை காப்பாற்றுவது கடினமாம்...!

பூண்டு

பூண்டு

இந்தியாவின் அனைத்து சமயலறைகளிலும் இருக்கும் பூண்டு, சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளுக்கு புகழ்பெற்றது. இதிலிருக்கும் அல்லிசின் முழு உடலையும் நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக இதனை மாற்றுகிறது.

மீன்

மீன்

கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதாக அறியப்படுகிறது, இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் லிப்பிட் திரட்சியைக் குறைக்கிறது.

மசாலாப்பொருட்கள்

மசாலாப்பொருட்கள்

கொத்தமல்லி, மஞ்சள், இஞ்சி மற்றும் டேன்டேலியன் வேர்கள் போன்ற பல மூலிகைகள் உள்ளன, அவை சக்திவாய்ந்த மசாலாப்பொருட்கள் மட்டுமல்ல கல்லீரலை சேதத்தில் இருந்து பாதுகாக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

MOST READ: முதல்முறை உடலுறவு கொள்ளும்போது அனைவரும் செய்யுற தவறுகள் என்னென்ன தெரியுமா? நீங்களும் பண்ணிருப்பீங்க!

காபி

காபி

காபியில் இருக்கும் பாலிபினால்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை சிரோசிஸின் வளர்ச்சிக்கு எதிராக கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பது உங்களின் கல்லீரலை பாதுகாக்கும். இந்த அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods For Liver Health

Check out the list of best foods for liver health.
Story first published: Friday, May 28, 2021, 14:30 [IST]