For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில சீக்கிரம் எழுந்திருக்காத ஆளா நீங்க... அப்போ இத படிக்காதீங்க...

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதால் எந்த மாதிரியான நன்மைகள் நமக்கு கிடைக்கும், வாங்க அது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

|

காலையில் எழுந்திருக்க வேண்டும் என்றால் மிகவும் கஷ்டமானதாக இருக்கும் . என்ன தான் அலாரம் வைத்து எழுந்திருக்க நினைத்தாலும் நிறைய நேரங்களில் நம்மால் எழுந்திருக்க முடியாது. நம்மில் ஒரு சில பேர் மட்டுமே இப்படி காலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.

Benefits Of Waking Up Early In The Morning

மன அழுத்தம், பயம், பதட்டம், வலி போன்ற பல காரணிகள் நாம் நிம்மதியாக தூங்கி எழுவதால் போகிறது. எனவே காலையில் எழுவது உங்களுக்கு எந்த மாதிரியான நன்மைகளைத் தரும் என கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உற்பத்தி திறன்

உற்பத்தி திறன்

சமீப கால ஆய்வுகள் படி உங்களுடைய தூக்க முறைக்கும் உற்பத்தி திறனுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வாழ்க்கையில் பெரும்பாலும் முன்னேறியவர்கள் எல்லாரும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர். மேலும் நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்கும் போது அந்த நாளில் உங்களுக்கு கூடுதலான நேரம் கிடைக்கிறது. இதன் மூலம் அந்த நேரத்தை நீங்கள் ஆரோக்கியமாக செலவழித்து வாழ்வில் முன்னேறலாம். மேலும் இந்த பழக்கம் உங்களுக்கு 100 %ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

MOST READ: இந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

சரியான தூக்கம்

சரியான தூக்கம்

சரியான தூக்கம் உங்கள் மனம் மற்றும் தோல் திசுக்களை சரி செய்கிறது. எனவே நீங்கள் சரிவர தூங்காமல் இருந்தால் இந்த திசுக்கள் புதிப்பிப்பது, உடல் நல ஆரோக்கியம் போன்றவை கெட்டு விடும். எனவே சரியாக தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருப்பது முக்கியம்.

ஆரோக்கியமான காலை உணவு

ஆரோக்கியமான காலை உணவு

காலை உணவு தான் அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக செயல்பட எனர்ஜியை தருகிறது. எனவே நீங்கள் தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் போது உங்களுக்கு நன்றாக பசிக்கும். மேலும் காலை உணவை ஆரோக்கியமாக சமைப்பதற்கான நேரம் முதலில் கிடைக்கும். உணவை மென்று நிதானமாக சாப்பிட முடியும். அறக்க பறக்க ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டு ஆபிஸ்க்கு ஓட வேண்டாம். காலை உணவை தவிர்த்தால் நீங்கள் நொறுக்கு தீனிக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது. எனவே காலையில் சீக்கிரம் எழந்து ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

உடற்பயிற்சி செய்ய அதிக நேரம்

உடற்பயிற்சி செய்ய அதிக நேரம்

காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சி என்பதே கிடையாது. இதனால் நாள் முழுவதும் அவர்கள் தூங்கிக் கொண்டே தான் இருப்பார்கள். இவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான நேரமும் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் காலையில் எழுந்தால் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக பாயும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக திகழ்வீர்கள்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

காலையில் சீக்கிரம் எழும் போது ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவீர்கள், உடற்பயிற்சி செய்வீர்கள். இந்த இரண்டுமே இயல்பாகவே உங்க சரும அழகை மெறுகேற்ற ஆரம்பித்து விடும். இதனால் சருமத்திற்கு போதுமான போஷாக்கு, ஈரப்பதம், ஆக்ஸிஜெனேஷன், இரத்த ஓட்டம் எல்லாம் மேம்படும். மேலும் சருமத்தை பராமரிக்க ஸ்க்ரப் கொண்டு இறந்த செல்களை நீக்குதல், ஈரப்பதம் அளித்தல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளைச் செய்யவும் போதிய நேரம் கிட்டும். ஒட்டுமொத்தமாக உங்கள் சருமம் அழகு மிளிரும்.

MOST READ: நெனச்சத அதவிட செமயா செஞ்சு முடிக்கிற ராசிக்காரங்க இவங்கதான்... சூப்பர்ப்பா...

மனநல நன்மைகள்

மனநல நன்மைகள்

காலையில் வெகு சீக்கிரம் எழுந்திருக்கும் போது உங்களுக்கு கவனச் சிதறல் இருக்காது.உங்கள் வேலை, இலக்கு இப்படி எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும் என்றாலும் பரபரப்பு, படபடப்பு இல்லாமல் நிதானமாக செய்ய முடியும். கவனச் சிதறல் இல்லாமல் ஒரே நோக்கில் வேலை செய்ய முடியும். இதனால் உங்கள் மூளையின் சிறந்த முடிவெடுக்கும் திறன் மேம்படும். மாணவர்களும் காலையில் எழுந்து படிப்பது அவர்களது நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும் பாடங்களை எப்படி படிக்க வேண்டும் எனத் திட்டமிட போதுமான நேரம் கிடைக்கும்.

கவனச் செறிவு மேம்படுதல்

கவனச் செறிவு மேம்படுதல்

அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் கவனச் செறிவை மேம்படுத்துகிறது. காலையில் உலகமே தூங்கும் போது அமைதியான சூழல் நிலவுவதால் உங்கள் மூளை கவனத்தை எங்கும் கொண்டு செல்லாமல் குறிக்கோளை நோக்கி நகர்த்த முடியும். காலையில் எழுந்து படிப்பவர்கள் எல்லாரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூக்கத்தின் தரம்

தூக்கத்தின் தரம்

சரியான தூக்கம் சரியான நேரம் எழுந்திருப்பு உங்கள் மூளையை அமைதி படுத்தும். அதிகாலை எழுந்திருப்பதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் நாள்பட நாள்பட எந்த சிரமமும் இருக்காது. நம் உடம்பு அதற்கு ஒத்துப் போக ஆரம்பித்து விடும். இதனால் உடலினுள் மெட்டா பாலிசம் மேம்படும். நல்ல ஓய்வெடுத்த எண்ணத்தை உங்களுக்கு கொடுக்கும்.

அமைதியான நேரம்

அமைதியான நேரம்

காலையில் சீக்கிரம் எழும் போது அதிகாலை அமைதியை நீங்கள் விரும்பலாம். இயற்கையின் அழகு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். சுற்றுப் புறத்தில் உள்ள அமைதியான நிலை உங்கள் மனதையும் ஒட்டிக் கொண்டு சக்தியை கொடுக்கும். இந்த அமைதி உங்கள் மனதை மட்டும் அல்ல உடம்பின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

MOST READ: நவராத்திரி பண்டிகை நாட்களில் திருமணம் செய்யமாட்டார்கள் ஏன் தெரியுமா

முடிவு

முடிவு

இப்படி அதிகாலையில் எழுந்திருப்பது கஷ்டமாக இருந்தாலும் இதனால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. உங்களது மனம், உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த பழக்கத்தை கையில் எடுக்கலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தால் கூட நாள்பட நாள்பட பழக்கமாகி விடும். அப்புறம் என்னங்க, இப்பொழுதே உங்கள் கடிகாரத்தை எடுத்து அலாரம் வையுங்கள். இது இந்த நாளின் முதற்படியாக இருக்கட்டும். காலையில் சீக்கிரம் எழுந்து ஆரோக்கியத்தை பேணி நீடுழி வாழ்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Benefits Of Waking Up Early In The Morning

Waking up early can be as difficult as teaching a kid the multiplication table. All of us would really love to wake up early, but only a few of us manage to do so day after day.
Desktop Bottom Promotion