Just In
Don't Miss
- Movies
டயலாக்கை உளறி தள்ளும் ஆண்ட்ரியா.. என்ன செஞ்சாலும் ரொம்ப கியூட் நீங்க கொஞ்சும் ரசிகர்கள்!
- News
‘அச்சே தின்' எங்க வருது.. தினமும் மக்களை பலிதான் கொடுக்குறீங்க- பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!
- Sports
என்னுடைய பணிக்காலம் பிசிசிஐயின் பொற்காலம்.. எந்த சர்ச்சைகளுக்கும் இடமில்லை.. கங்குலி கருத்து
- Automobiles
இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும்... வருகிறது புது ரூல்ஸ்...
- Technology
இன்று பூமியை நெருங்கும் ஆபத்தான சிறுகோள்: இறுதி நொடியில் கண்டுபிடித்த NASA- பூமிக்கு ஆபத்தா?
- Finance
தங்கம் தான் விமோசனம்.. 192% பணவீக்கத்தை குறைக்க இதுதான் ஓரே வழி..!
- Travel
ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
நம் வீட்டு சமையலறையில் மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் அதிகம் உள்ளன. அதில் ஒன்று தான் பெருங்காயத் தூள். இந்த பெருங்காயத் தூள் சமைக்கும் உணவிற்கு நல்ல சுவையைக் கொடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். பொதுவாக பெருங்காயத் தூள் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளைப் போக்குகிறது.
நமது சமையலறையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மற்றொரு பொருள் தான் தேன். இது சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். தேனில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், சோடியம், குளோரின், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதோடு தேனில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நொதிகள் காணப்படுகின்றன. இவை உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இத்தகைய தேனுடன் பெருங்காயத் தூளை சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்பது தெரியுமா? ஆம், பெருங்காயத் தூளை தேனில் கலந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

எடை இழப்பிற்கு உதவும்
உடல் பருமனால் கஷ்டப்படுகிறீர்களா? உங்கள் எடையை வேகமாகவும், எளிதிலும் குறைக்க வேண்டுமா? அப்படியானால் தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுங்கள். இதனால் பெருங்காயத் தூள் உடலின் மெட்டபாலிசத்தை சரிசெய்யும், தேன் ஆக்ஸிஜனேற்ற கொழுப்பை எரிக்கும். இதற்கு தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

வயிற்று உப்புசம் நீங்கும்
எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்ட பின்னர் பலரும் வயிற்று உப்புச பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. இம்மாதிரியான சூழ்நிலையில், வயிற்று உப்புசத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுங்கள். இதனால் இவை இரண்டிலும் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இப்பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.

அசிடிட்டி சரியாகும்
இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை அசிடிட்டி. இந்த அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பேனில் சிறிது பெருங்காயத் தூளை சேர்த்து சூடேற்றி இறக்கி தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி செய்வதனால், அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வயிற்று வலி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தக்கும் ஓர் பிரச்சனை தான் வயிற்று வலி. இந்த வயிற்று வலியை சந்திக்கும் போது, தேனில் பெருங்காயத் தூள் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு ஸ்பூன் தேனில் சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிட்டு, சிறிது வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால், வயிற்று வலி குறைய ஆரம்பிக்கும்.

மலச்சிக்கல் நீங்கும்
நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியென்றால் காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயத் தூளை தேனில் கலந்து சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சீராக்கப்பட்டு, உணவில் உள்ள சத்துக்கள் உடலால் நன்றாக உறிஞ்சப்படும். அதோடு இது உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. முக்கியமாக இது வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது.