For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொலஸ்ட்ரால் முதல் மலச்சிக்கல் வரை.. பல பிரச்சனைகளை போக்கும் பேரிக்காய்! ஆனா அதை இப்படி சாப்பிடணும்..

மழைக்காலத்தில் பேரிக்காய் அதிகம் கிடைக்கும். பேரிக்காய் மிகவும் தடிமனான தோலைக் கொண்டிருந்தாலும், இதன் சுவை மிகவும் இனிப்பாக சாப்பிடுவதற்கு அற்புதமாக இருக்கும்.

|

மழைக்காலம் தொடங்கிவிட்டது. கோடையில் அதிக வெயிலால் வெந்து கொண்டிருந்த நமக்கு இந்த மழைக்காலம் ஒரு நல்ல ஆறுதலைத் தரும் விதமாக இருக்கும். இந்த மழைக்காலத்தில் பேரிக்காய் அதிகம் கிடைக்கும். பேரிக்காய் மிகவும் தடிமனான தோலைக் கொண்டிருந்தாலும், இதன் சுவை மிகவும் இனிப்பாக சாப்பிடுவதற்கு அற்புதமாக இருக்கும். பேரிக்காய் சுவையான பழம் மட்டுமின்றி, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆரோக்கியமான பழமும் கூட.

Benefits of Eating Pears In Rainy Season In Tamil

பேரிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் கே, பொட்டாசியம், ஃபோலேட், நார்ச்சத்து, காப்பர், மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் கரிம சேர்மங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது தவிர பேரிக்காயில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுகிறத. இந்த நார்ச்சத்து பெக்டின் என்னும் வடிவில் உள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது. எனவே இந்த பழத்தை மழைக்காலத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும். இப்போது மழைக்காலத்தில் பேரிக்காயை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான பிரச்சனைகள் நீங்கும்

செரிமான பிரச்சனைகள் நீங்கும்

பேரிக்காயை சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் இது செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பேரிக்காயை சாப்பிடுவதால் வாய்வு தொல்லை மற்றும் அஜீரண கோளாறு போன்ற வயிற்று பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக பேரிக்காய் மலச்சிக்கலை நீக்கும்.

இரத்த சோகை சரியாகும்

இரத்த சோகை சரியாகும்

உடலில் இரும்புச்சத்து போதுமான அளவில் இல்லாமல் இருந்தால், பேரிக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பேரிக்காயில் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் இருக்கும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரிக்காயை அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

பேரிக்காயில் காணப்படும் சில உட்பொருட்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், இதய நோயின் அபாயமும் குறையும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் பேரிக்காயை தங்கள் உணவில் அதிகம் சேர்ப்பது நல்ல பலனைத் தரும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினமும் பேரிக்காயை சாப்பிடுவது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இந்த பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான திறனை உடலுக்கு அளிக்கிறது.

எலும்புகளுக்கு நல்லது

எலும்புகளுக்கு நல்லது

பேரிக்காயில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே பேரிக்காயை சாப்பிடுவது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் இது எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. பேரிக்காயில் போரான் என்னும் கெமிக்கல் உள்ளது. இது உடலில் கால்சியம் அளவைப் பராமரிக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் பேரிக்காயை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.

பேரிக்காயை தோலுடன் சாப்பிடலாமா?

பேரிக்காயை தோலுடன் சாப்பிடலாமா?

பேரிக்காயை சாப்பிடுவதற்கான சிறந்த வழி, அதை தோலுடன் சாப்பிடுவது தான். ஏனெனில் பேரிக்காயின் தோலில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே எக்காரணம் கொண்டும் பேரிக்காயை தோல் நீக்கிவிட்டு சாப்பிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Eating Pears In Rainy Season In Tamil

Here are some health benefits of eating pears in rainy season. Read on to know more..
Story first published: Friday, July 8, 2022, 12:13 [IST]
Desktop Bottom Promotion