For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் மிளகுத் தூளில் தேன் கலந்து சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

இருமல், சளி, ஜலதோஷம். இந்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க நினைப்பார்கள். இருமல், சளி, ஜலதோஷம் போன்றவற்றை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

|

குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றினால் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் இருமல், சளி, ஜலதோஷம். இந்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க நினைப்பார்கள். இருமல், சளி, ஜலதோஷம் போன்றவற்றை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று தான் மிளகுத் தூள் மற்றும் தேன் கலவை. இந்த இரண்டு பொருட்களுமே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. குறிப்பாக இந்த மிளகுத் தூள் தேன் கலவை வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

Benefits Of Eating Honey And Pepper During Winter In Tamil

இப்போது குளிர்காலத்தில் மிளகுத் தூளில் தேன் கலந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து இன்றில் இருந்து நீங்களும் சாப்பிட ஆரம்பியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளி மற்றும் இருமல் நீங்கும்

சளி மற்றும் இருமல் நீங்கும்

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்குமானால், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேனில் 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். இப்படி சாப்பிட்டு தூங்குவதால், உடலினுள் சென்ற மிளகுத் தூளும், தேனும், சளியை திறம்பட கரைத்து வெளியேற்றும்.

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்களானால், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டியது அவசியம். அதற்கு மிளகு நீரைக் குடிக்கலாம். அதற்கு ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து, பின் அதில் மிளகை சேர்த்து வறுத்து, பின் நீரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். இந்த நீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். சுவைக்கேற்ப சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளவும். இந்த நீரைக் குடித்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும். இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு நீங்கும்.

வயிற்றிற்கு ஓய்வு கொடுக்கும்

வயிற்றிற்கு ஓய்வு கொடுக்கும்

சளியின் காரணமாக அஜீரண கோளாறால் அவதிப்பட்டு வந்தால், மிளகுத் தூளை தேனுடன் உட்கொள்ளுங்கள். இதனால் வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மிளகில் உள்ள நற்பண்புகள் வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதில் சிறந்தது. அதற்கு மிளகை தேனுடன் மட்டுமின்றி, பால், சமையல், மிளகு டீ என்று எந்த வடிவிலும் உட்கொள்ளலாம்.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்

மிளகில் உள்ள உட்பொருட்கள் தீவிரமான நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறன் கொண்டவை. குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை மிளகு குறைக்க உதவும். இதனால் இதய நோய்களின் அபாயம் குறையும். அதற்கு மிளகை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்

மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்

இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாக மன அழுத்தம்/மன இறுக்கம் உள்ளது. ஒருவர் மன இறுக்கத்தில் இருந்தால், அதில் இருந்து விடுபட உடனே முயல வேண்டும். இல்லாவிட்டால், அது பல மோசமான முடிவுகளை எடுக்க வைத்துவிடும். இத்தகைய சூழ்நிலையில் மன இறுக்கத்திற்கு மருத்துவ சிகிச்சையுடன், வீட்டு வைத்தியமும் மிகவும் அவசியம். அதில் மிளகில் உள்ள உட்பொருட்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆகவே தினமும் மிளகை தேனுடன் சாப்பிட்டு, உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Eating Honey And Pepper During Winter In Tamil

Here are some health benefits of eating honey and pepper during winter in tamil. Read on to know more...
Story first published: Friday, December 17, 2021, 11:37 [IST]
Desktop Bottom Promotion