For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த நேரத்துல எலுமிச்சை வேக வைத்த நீரை குடிச்சு பாருங்க... அசந்து போயிடுவீங்க..

எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும். இந்த எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் தெரியுமா?

|

எலுமிச்சை வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு புளிப்புச் சுவைமிக்க ஆரோக்கியமான பழம் என்பதை அனைவருமே அறிவோம். இந்த எலுமிச்சையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் நன்கு சுவையாக இருப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது. முக்கியமாக எலுமிச்சை செரிமான பிரச்சனைகளைப் போக்கவும், தாகத்தைத் தணிக்கவும் பெரிதும் உதவுகிறது. எலுமிச்சை ஆரோக்கியமானது என்பதால், இதை அடிக்கடி தங்களின் உணவில் சேர்க்க மறக்கமாட்டார்கள்.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும். இந்த எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சையின் சத்துக்கள்

எலுமிச்சையின் சத்துக்கள்

எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் ஃபோலேட் அமிலம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. இது தவிர, எலுமிச்சை உடல் எடையைக் குறைப்பதிலும், சிறுநீரக கற்களைக் கரைப்பதிலும் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்போது நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

சருமத்தை பளபளப்பாக்கும்

சருமத்தை பளபளப்பாக்கும்

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பதால் சருமத்தில் உள்ள பாக்டீயாக்களின் அளவு குறையும். இதன் விளைவாக சருமம் சுத்தமாக இருக்கும். குறிப்பாக இதில் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளதால், எலுமிச்சை வேக வைத்த நீர் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, சருமத்தில் ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது.

உயர் இரத்த அழுத்தம் குறையும்

உயர் இரத்த அழுத்தம் குறையும்

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இது உயர் இரத்த அழுத்தத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வர உதவுகிறது. வேண்டுமானால் ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடியுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

எலுமிச்சை வேக வைத்த நீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக இது வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி உடலை சுத்தப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

உடல் பருமன் குறையும்

உடல் பருமன் குறையும்

எலுமிச்சை வேக வைத்த நீர் உடல் எடையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக குறையத் தொடங்கும் மற்றும் உடலும் நீரேற்றத்துடன் இருக்கும்.

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

பல நேரங்களில் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் செரிமான மண்டலம் பாழாகி, மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில், எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமான மண்டலம் வலுவாகும்.

சிறுநீரக கல் பிரச்சனை குணமாகும்

சிறுநீரக கல் பிரச்சனை குணமாகும்

எலுமிச்சை வேக வைத்த நீரைக் குடிப்பது சிறுநீரக கற்களில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டின் விளைவைக் குறைக்கும். இந்த ஆக்சலேட்டானது கடினமான படிகங்களாகும். சிறுநீரக கற்கள் இருந்தால், அது வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.

எலுமிச்சை வேக வைத்த நீரை எப்போது மற்றும் எப்படி குடிப்பது?

எலுமிச்சை வேக வைத்த நீரை எப்போது மற்றும் எப்படி குடிப்பது?

எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு இறக்கி குளிர வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம். இருப்பினும், அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸை குடிப்பது சரும அழற்சி மற்றும் அரிப்பை உண்டாக்கும். எனவே இந்த பானத்தை தினமும் குடிப்பதாக இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னர் தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Drinking Boiled Lemon Water In Tamil

Here are some health benefits of drinking boiled lemon water. Read on to know more...
Story first published: Saturday, June 4, 2022, 17:30 [IST]
Desktop Bottom Promotion