Just In
- 17 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 51 min ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
- 1 hr ago
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Don't Miss
- News
ராப்ரி - சோனியா! அமித் ஷாவின் ராஜதந்திரத்தை தூசு தட்டிய 2 "பெண்கள்".. பீகாரில் பாஜக வீழ்ந்தது எப்படி
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Movies
மாமனிதன் கைப்பற்றிய 3 சர்வதேச விருதுகள்.. சிறந்த நடிகராக தேர்வான விஜய் சேதுபதி!
- Automobiles
விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
தினமும் ஒரு கப் தயிர் சாதம் சாப்பிடுவதால் பெறும் அற்புத நன்மைகள் குறித்து தெரியுமா?
கோடைக்காலத்தில் அதிகப்படியான வெயிலால் நாம் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்போம். கோடைக்கால வெயிலை சமாளிப்பதற்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன. கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க தயிர் பெரிதும் உதவி புரியும். தயிரை நாம் பல வழிகளில் உட்கொள்ளலாம். அதில் ஒன்று தான் தயிர் சாதம்.
தயிர் சாதம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. தயிர் சாதத்தில் புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. இந்த சத்துக்கள் அனைத்துமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதவை. குறிப்பாக தயிர் சாதத்தை பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் சேர்த்துள்ளனர் என்பது தெரியுமா? ஆம், தயிர் சாதம் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும். இப்போது தயிர் சாதத்தை தினமும் உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

செரிமானத்திற்கு நல்லது
தயிர் ஒரு புரோபயோடிக் பால் பொருள். இது செரிமான மண்டலத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஏற்கனவே சாதத்தில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது. அதுவும் தயிர் சாதத்தை உட்கொள்வது வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவி புரியும்.

மனதை அமைதிப்படுத்தும்
தயிர் சாதம் என்பது நன்கு ஓய்வெடுக்க உதவும் ஓர் அற்புத உணவு. இதில் புரோபயோடிக்குகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகளவில் உள்ளன. இவை அனைத்தும் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவுகின்றன.

ஆற்றலை வழங்கும்
ஒரு கப் தயிர் சாதமானது ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றலை வழங்கக்கூடும். தயிரில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது செரிமான நொதிகளால் உடைக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

சருமத்திற்கு நல்லது
தயிர் சாதத்தில் சருமத்திற்கு நன்மைகளை அளிக்கும் பண்புகள் உள்ளன. தயிர் சாதம் செரிமானத்தை எளிதாக்குவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குவதால், இது சருமத்தில் நேரடியாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் தயிர் சாதம் சாப்பிடுவோரின் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
தயிர் சாதத்தை உப்பு சேர்க்காமலேயே சாப்பிடலாம். ஆகவே இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இந்த சாதம் மிகவும் நல்லது. அதுவும் தயிர் சாதத்தை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.