For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேத முறைப்படி டெங்கு காய்ச்சலில் இருந்து நீங்க வேகமா குணமாக என்ன செய்யணும் தெரியுமா?

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் அற்புதமாக செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆரஞ்சு சாறு உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும்.

|

மழைக்காலம் தொடங்கினாலே கொசு தொல்லை ஆரம்பித்துவிடும். கொசுவால் பல நோய்கள் பரவுகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களும் தற்போது பரவதொடங்கியுள்ளது. டெங்கு என்பது வைரஸ் காய்ச்சல் போன்ற நோயாகும். இது ஏடிஸ் ஈஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. டெங்குவின் சில பொதுவான அறிகுறிகள் வாந்தி, கடுமையான தலைவலி, குமட்டல், சொறி, மூட்டு வலி, தசை வலி, கண்களுக்குப் பின்னால் உள்ள வலி மற்றும் சுரப்பிகள் வீக்கம் போன்றவை.

Ayurvedic Tips To Recover Faster From Dengue Fever in tamil

இந்த அறிகுறிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சோர்வு, வாந்தியில் இரத்தம், தொடர்ச்சியான வாந்தி, ஈறுகளில் இரத்தப்போக்கு, அமைதியின்மை மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. சிகிச்சையில் தற்போது அறிகுறிகளைக் கையாள்வது அடங்கும். அதிர்ஷ்டவசமாக, டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தய இலைகள்

வெந்தய இலைகள்

வெந்தய இலைகள் ஒரு சக்திவாய்ந்த வலி நிவாரணி. இரவு முழுவதும் தண்ணீரில் இலைகளை ஊறவைத்து, மறுநாள் காலையில் வடிகட்டிய திரவத்தை குடிப்பதன் மூலம் நீங்கள் இதைப் பெறலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் அற்புதமாக செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆரஞ்சு சாறு உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும்.

வேப்ப இலைகள்

வேப்ப இலைகள்

வேப்ப இலைகள் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை. உடலில் வைரஸின் வளர்ச்சி மற்றும் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இது பெரிதும் உதவும். இது வெள்ளை இரத்த அணுக்களின் பிளேட்லெட் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும். சில வேப்ப இலைகளை தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த திரவத்தை குடிக்கலாம்.

பப்பாளி இலைகள்

பப்பாளி இலைகள்

பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும். டெங்கு அறிகுறிகளைப் போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை பப்பாளி இலைகளை அரைத்து சாப்பிடலாம்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

டெங்கு காய்ச்சல் வாந்திக்கு வழிவகுக்கலாம். இது நீரிழப்பு உணர்வை ஏற்படுத்தும். இதைத் தடுக்க தேங்காய் நீரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு

உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு மஞ்சள் எவ்வளவு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த சூப்பர்ஃபுட் பல பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளது, அவை நோய்த்தொற்றை அகற்றவும் வைரஸ்களை எதிர்த்துப் போராடவும் முக்கிய நிலைகளில் வேலை செய்கின்றன. இதை நீங்கள் தயாரிக்கும் எந்த உணவிலும் சேர்க்கவும் அல்லது சூடான பாலுடன் சேர்த்து சாப்பிடவும்.

உணவுகள்

உணவுகள்

ஆம்லா, கிவி, ஆரஞ்சு மற்றும் அன்னாசி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்கள். மாதுளை மற்றும் பப்பாளி பழங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. காய்கறி சூப்களையும் சாப்பிடலாம். கிச்சடி மற்றும் மூங் டால் சூப் போன்ற லேசான மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். மோர் நீரேற்றத்திற்கும் நல்லது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. கோதுமை ரொட்டிகளைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக ஜோவர் ரொட்டியைச் சாப்பிடுங்கள், ஏனெனில் அவை ஜீரணிக்க இலகுவாக இருக்கும். டெங்கு காய்ச்சலின் போது பதப்படுத்தப்பட்ட அல்லது துரித உணவுகளை உட்கொள்ளக் கூடாது. மேலும் சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும், ஏனெனில் இது குணமடைவதை தாமதப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Tips To Recover Faster From Dengue Fever in tamil

Here we are talking about the Ayurvedic Tips To Recover Faster From Dengue Fever in tamil.
Story first published: Monday, November 8, 2021, 13:52 [IST]
Desktop Bottom Promotion