For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதா? பைல்ஸ் வரக்கூடாது-ன்னா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...

மலச்சிக்கல் ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது பைல்ஸ் என்னும் மூல நோய்க்கு வழிவகுத்துவிடும்.

|

மலச்சிக்கல் பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகளை வெளிக்காட்டும். அதில் சிலருக்கு எடையைக் குறைப்பது கடினமாக இருக்கலாம். சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படலாம். இன்னும் சிலருக்கு அடிக்கடி முகப்பரு கூட வரலாம். நீங்கள் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பவராயின், உங்களுக்கு இரைப்பை குடல் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம். அதுவும் ஒருவர் மலச்சிக்கல் பிரச்சனையால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தால், அதற்கு சில ஆயுர்வேத வழிகளைப் முயற்சி செய்வது நல்லது.

Ayurvedic Remedies To Deal With Constipation In Tamil

ஒருவர் தினமும் தவறாமல் மலம் கழிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் இது நல்ல செரிமானம், ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமாகும். மேலும் மலச்சிக்கல் ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது பைல்ஸ் என்னும் மூல நோய்க்கு வழிவகுத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல் என்றால் என்ன?

மலச்சிக்கல் என்றால் என்ன?

மலச்சிக்கல் என்பது ஒருவரது குடல் இயக்கம் அசௌகரியமாக அல்லது அரிதாக இருக்கும் போது ஏற்படும் நிலையாகும். இந்த மலச்சிக்கல் பல நோய்களுக்கான அறிகுறியாக இருப்பதோடு, உடல் சூடு சமநிலையில் இல்லாமல் அதிகரிப்பதையும் குறிப்பதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மலம் கழிக்க வேண்டும். ஏனென்றால் மலத்தில் ஸ்டெர்கோபிலின், பாக்டீரியா, இறந்த செல்கள் மற்றும் பல உடலியல் செயல்முறைகளின் கழிவுகள் உள்ளன. தினமும் மலத்தைக் கழிக்காவிட்டால், இவை அனைத்தும் உடலால் உறிஞ்சப்பட்டு, உடலில் கழிவுகளின் தேக்கத்திற்கு வழிவகுக்கும்.

மலச்சிக்கலின் அறிகுறிகள்

மலச்சிக்கலின் அறிகுறிகள்

* தினமும் ஒருமுறை கூட மலம் கழிக்காமல் இருப்பது

* மலம் கடினமாக இருப்பது

* மலத்தைக் கழிக்க சிரமப்படுவது

* முழுமையடையாத வெறுமை உணர்வு

இப்போது மலச்சிக்கலை சமாளிக்க உதவும் ஆயுர்வேத வழிகளைக் காண்போம்.

உலர்ந்த கொடிமுந்திரி

உலர்ந்த கொடிமுந்திரி

தினமும் காலையில் 5-6 ஊற வைத்த உலர்ந்த கொடி முந்திரியை சாப்பிட்டு, ஊற வைத்த நீரையும் குடியுங்கள். பல ஆய்வுகளின் படி, உலர் கொடி முந்திரிகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது மலத்தை மென்மையாக்கி எளிதில் வெளியேற்ற உதவுகிறது.

தண்ணீர்

தண்ணீர்

தினமும் போதுமான அளவில் நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, ஆரோக்கியமான குடலியக்கத்திற்கு உதவி புரிந்து, மலத்தை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்ற உதவி புரியும். எனவே தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், பெருங்குடலின் செயல்பாடு தூண்டப்படுகிறது. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்யுங்கள். வேண்டுமானால் குடல் ஆரோக்கியத்திற்காக யோகாசனங்களையும் செய்யுங்கள்.

டயட்

டயட்

அன்றாட உணவுகளில் நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அதுவும் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுபவரானால், வெதுவெதுப்பான பாலில் 1/2 டீஸ்பூன் நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள். நெய் ஒரு நேச்சுரல் லூப்ரிகண்ட் மட்டுமின்றி, குடல்களை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

சுக்கு

சுக்கு

சுக்கு ஒரு மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அடிக்கடி கஷ்டப்பட்டு வந்தால், காலையில் வெதுவெதுப்பான நீரில் சிறிது சுக்கு பொடியை கலந்து குடியுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பின்பற்றினால், குடல் ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் தினமும் போதுவான நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Remedies To Deal With Constipation In Tamil

Here are some ayurvedic remedies to deal with constipation. Read on to know more...
Story first published: Wednesday, July 20, 2022, 13:00 [IST]
Desktop Bottom Promotion