Just In
- 2 hrs ago
வார ராசிபலன் (03.06.2022-09.07.2022) - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- 3 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க நேரிடலாம்...
- 13 hrs ago
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- 14 hrs ago
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
Don't Miss
- News
"பூனைக்குட்டி" வெளியே வருகிறது.. பாஜகவில் இணைகிறார் அமரீந்தர் சிங்.. குடியரசு துணை தலைவர் வேட்பாளரா?
- Technology
'இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம்': 23 வயதில் இறந்த பிரபல Youtuber!
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Movies
மகன் விஜய் வரல.. மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த ஆயுர்வேத பால் நோயெதிர்ப்பு சக்தியை இருமடங்கு அதிகரிக்குமாம்.. அதை எப்படி தயாரிப்பது?
ஓமிக்ரான் கொரானா புயல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் இந்தியாவிலும் இது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே வேளையில் குளிர்காலம் என்பதால் பலர் குளிர்கால நோய்த்தொற்றுக்களாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். பலர் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதற்கு வைட்டமின் சி-யை அதிகம் உட்கொள்கிறார்கள். அதோடு பலர் ஆயுர்வேதத்தின் உதவியையும் நாடுகின்றனர். ஆயுர்வேதத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயங்கள் மட்டுமின்றி, ஆயுர்வேத பாலும் உண்டு.

ஆயுர்வேத பால்
ஆயுர்வேதத்தில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறப்பான பால் உண்டு. இதை காலையில் குடித்து வந்தால், இது பல வகையான வைரஸ்கள் மற்றும் நோய்களிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், அது உடல் சோர்வை நீக்கும். பொதுவாக பால் குடிப்பதால் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும். இப்போது இந்த ஆயுர்வேத பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இந்த ஆயுர்வேத பாலை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

ஆயுர்வேத பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்:
* நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும்.
* நினைவாற்றல் அதிகரித்து கற்கும் திறனை அதிகரிக்கும்.
* இந்த பால் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இரத்தத்தின் pH அளவு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், இரத்த நோய்கள், வயிற்று பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் ஆகியவற்றைத் தடுக்கிறது.
* ஆண்களின் பாலியல் திறனை மேம்படுத்துகிறது. அதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்குகிறது.
* மாதவிடாய் காலத்தில் பெண்களின் எலும்புகளில் உள்ள பலவீனம் மற்றும் பிரச்சனைகளை நீக்குகிறது.
* சருமத்தின் பொலிவையும், பிரகாசத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
* இந்த ஆயுர்வேத பால் சருமத்தை இறுக்கமாக்கி, விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்கிறது.
இப்போது ஆயுர்வேத பாலை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

தேவையான பொருட்கள்:
* பாதாம் - 10
* பேரிச்சம்பழம் - 3
* பசும்பால் - 1 டம்ளர்
* மஞ்சள் தூள் - 4 சிட்டிகை
* பட்டைத் தூள் - 2 சிட்டிகை
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை:
இந்த ஆயுர்வேத பால் தயாரிப்பதற்கு, முதலில் 10 பாதாம் மற்றும் 3 பேரிச்சம் பழத்தை இரவு நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் பாதாமின் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெதுவெதுப்பான பாலில் அரைத்த விழுதை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, பட்டைத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்தால், ஆயுர்வேத பால் தயார்.

எப்போது குடிக்க வேண்டும்?
இந்த ஆயுர்வேத பாலை காலையில் வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், இரவு தூங்கும் முன்பு குடிக்கலாம். ஆனால் உணவு உண்ட 2 மணிநேரத்திற்கு பின் குடித்துவிட்டு தூங்க வேண்டும். மேலும் இந்த பால் குடித்த 40 நிமிடத்திற்கு வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

நினைவில் கொள்ள வேண்டியவை:
* பட்டை சூடான குணம் கொண்டது. எனவே 2 சிட்டிகைக்கு மேல் பட்டைத் தூளை சேர்க்கக்கூடாது.
* சர்க்கரை நோயாளிகள், இந்த பாலைக் குடிப்பதாக இருந்தால் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
* மற்றபடி இந்த பால் மிகவும் ஆரோக்கியமானது, பாதுகாப்பானது மற்றும் அனைவரும் குடிக்க ஏற்றது. முக்கியமாக அனைத்து வயது மக்களும் இதைக் குடிக்கலாம்.