For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதும் தூங்கி வழியுறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு…!

நாள் முழுவதும் உங்களுக்கு தூக்கம் வர பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் உடல் மாற்றங்கள் அல்லது மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

|

தூக்கம் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. உங்களுடைய நாளை நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள் என்பது அதற்கு முந்தைய நாளின் உங்கள் இரவு தூக்கத்தின் நிலையை பொருத்துதான் அமைகிறது. உங்கள் வாழ்க்கையை சுறுசுறுப்பாகவும், பல வெற்றிகளை பெறவும் உங்கள் உடல் ஆரோக்கியம் முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் மிக அவசியம். இரவு நேரங்களில் சரியாக தூக்கம் வரவில்லை என்று பலர் கூறுவார்கள். பலர் நாள் முழுக்க எனக்கு தூக்க உணர்வாகவே இருக்கிறது என்பார்கள்.

ayurveda-explains-reasons-for-feeling-sleepy-all-the-time

பகலில் நீங்கள் அடிக்கடி தூக்கம், சோம்பல், மந்தமான உணர்வை உணர்கிறீர்களா? முந்தைய இரவில் நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால், சோம்பல் என்பது வெளிப்படையான விளைவு. ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும் இது உங்களுக்கு நேர்ந்தால், ஏதோ நிச்சயமாக சரியில்லை! நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவும் தூக்கமாகவும் உணரக்கூடிய சில அடிப்படை சிக்கல்கள் இருக்கலாம், அதை விரைவில் சரிசெய்ய வேண்டும். நீங்கள் எப்போதும் தூக்க உணர்வுடன் இருக்கிறீர்களா? ஆயுர்வேதத்தில் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் உள்ளன. இக்கட்டுரையில் இதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பல பிரச்சனைகள்

பல பிரச்சனைகள்

இந்த பிரச்சினையில் நீங்கள் இப்போது கவனம் செலுத்தவில்லை என்றால், இந்த சோர்வு பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

தலைவலி

உடல் வலிகள்

இரவில் தூக்கம் இல்லாதது

எதற்கும் ஆர்வம் இல்லாதது

வேலை அல்லது படிப்புகளில் நாட்டம் இல்லாமை

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு

தினசரி வேலைகளை சமாளிப்பதில் சிரமம்

அஜீரணம்

சலிப்பு

MOST READ:30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?

ஆயுர்வேதம் மற்றும் தூக்கம்

ஆயுர்வேதம் மற்றும் தூக்கம்

நாள் முழுவதும் உங்களுக்கு தூக்கம் வர பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் உடல் மாற்றங்கள் அல்லது மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், இந்த பிரச்சினைக்கான தீர்வுகள் தங்களுக்குள்ளேயே மறைக்கப்படுகின்றன என்பதுதான். நாள் முழுவதும் உங்களுக்கு தூக்கம் மற்றும் மந்தமான உணர்வை ஏற்படுத்தும் காரணங்கள் என்னென்ன மற்றும் அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

முறையற்ற தூக்க அட்டவணை

முறையற்ற தூக்க அட்டவணை

பகலில் உங்களுக்கு தூக்கம் வரக்கூடிய மூல காரணங்களில் முறையற்ற தூக்கமும் ஒன்றாகும். குறைந்தது ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை இரவில் போதுமான தூக்கம் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் தூங்குவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன் காஃபினேட் (தேநீர் அல்லது காபி) பானங்களை தவிர்ப்பது நல்லது. காஃபினேட் பானங்களை காலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும்போதும், அது உங்களை புத்துணர்ச்சியாகவும் புதியதாக உணர உதவக்கூடும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது கோபம் போன்ற காரணிகள் உங்கள் தூக்க பழக்கத்தில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை உங்களை மந்தமாகவும் சோம்பலாகவும் ஆக்குகின்றன. இது தூக்கமில்லாத பகல் மற்றும் இரவுகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றிலிருந்து விடுபட, முடிந்தவரை மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பாதிக்கப்பட்ட விஷயங்களின் நேர்மறையான பக்கத்தைப் பாருங்கள்.

MOST READ:எச்சரிக்கை! ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

மனம்விட்டு பேசுங்கள்

மனம்விட்டு பேசுங்கள்

உங்கள் உறவுகளில் அல்லது வேலையில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவற்றை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். உங்களால் அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் மனம்விட்டு அதுகுறித்து பேசுங்கள். அவர்களின் உதவியுடன் அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவாருங்கள். நீங்கள் தொழில்முறை ஆலோசனையையும் தேர்வு செய்யலாம், இது உங்கள் உணர்ச்சி சிக்கல்களை சிறந்த முறையில் கையாள உதவும்.

அதிக உணவு உண்ணுதல்

அதிக உணவு உண்ணுதல்

இரவில் அதிக உணவை சாப்பிட்டால், அவர்கள் நன்றாக தூங்க முடியும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உங்கள் இரவு உணவை முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதேபோன்று துரித உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது. சரியான வழிகாட்டுதலுக்காக நீங்கள் ஒரு உணவியல் நிபுணரைக் கூட அணுகி ஆலோசனை பெறலாம்.

உடலின் எதிர்மறை சக்தி

உடலின் எதிர்மறை சக்தி

சிலர் இயற்கையாவே சோம்பல் உணர்வுடன் தூங்கிக்கொண்டும் அல்லது மந்தமாகவும் இருப்பார்கள். அப்படியிருப்பவர்கள் பெரும்பாலானோர் எதிர்மறையாக சிந்திப்பார்கள். அவர்கள் உடலும் எதிர்மறை விளைவுகளையே கொண்டிருக்கும். வாழ்க்கையையும் அவர்களின் எதிர்காலத்தையும் பற்றியும் நேர்மறையான கண்ணோட்டத்தைக் அவர்கள் கொண்டிருக்கமாட்டார்கள். அத்தகைய நபர்கள் யோகா, உடற்பயிற்சி, பிரார்த்தனை மற்றும் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையை கொண்டு வரக்கூடிய பிற எல்லா வழிகளையும் சேர்க்க வேண்டும்.

MOST READ:"இந்த" விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்...!

சில மறைக்கப்பட்ட நோய்கள்

சில மறைக்கப்பட்ட நோய்கள்

நீரிழிவு போன்ற சில நோய்கள் உள்ளன. அவை உங்கள் உடலை பலவீனமாக்கி, நாள் முழுவதும் உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும். சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவ்வப்போது சுகாதார சோதனைகளை மேற்கொள்வது நல்லது.

உடல் வகை

உடல் வகை

மனித உடலை மூன்று வகைகளாக பிரிப்பார்கள். அவை, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகும். மக்கள் அனைவரும் பொதுவாக இந்த மூன்று பிரிவுகளுக்குள்தான் இருக்க முடியும். மற்ற உடல் வகைகளைக் காட்டிலும் கபம் உடல் வகை உள்ளவர்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் அந்த வகைக்குள் வந்தால், இரவில் உங்கள் தூக்கத்தின் காலத்தை அதிகரிப்பதைக் கவனியுங்கள், இதனால் நீங்கள் பகலில் புதியதாக உணரலாம். பகலில் புதியதாகவும் சுறுசுறுப்பாகவும் உணரவும், இரவு நன்றாக தூங்கவும் உதவும் சில உதவிக்குறிப்புகளை பார்க்கலாம்.

செரிமானத்தை ஊக்குவிக்கும் உணவு

செரிமானத்தை ஊக்குவிக்கும் உணவு

பகலில் உங்களுக்கு மிகவும் தூக்கம் வந்தால், இடையில் ஒரு குறுகிய தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அதிக தூக்கமும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அஜீரணம் உங்களுக்கு தூக்கத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, செரிமானத்தை ஊக்குவிக்கும் இஞ்சி மற்றும் மிளகு போன்ற பல இயற்கை பொருட்களை உங்கள் உணவில் சேர்க்கவும். நீங்கள் பால் இல்லாமல் இஞ்சி தேநீர் கூட சாப்பிடலாம்.

MOST READ:முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான "அந்த" விஷயம் என்ன தெரியுமா?

உடற்பயிற்சி செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்யுங்கள்

வொர்க்அவுட்டின் பற்றாக்குறை சோம்பல் மற்றும் பல தொடர்புடைய நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். ஒரு எளிய பயிற்சியை தவறாமல் செய்தால், உங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் நல்ல ஆக்ஸிஜன் செல்லும். இதனால் நீங்கள் புதியதாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். பிராணயாமா போன்ற சில சுவாச பயிற்சிகளை செய்யுங்கள். மேலும், யோகா பயிற்சியும் செய்யுங்கள். இது உங்களை ஆற்றல் மிக்கதாக மாற்றும், மேலும் உங்கள் உடலில் உள்ள ஆற்றலை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும்.

அறையை பிரகாசமாக வைத்திருங்கள்

அறையை பிரகாசமாக வைத்திருங்கள்

புதிய காற்று நுழைய அனுமதிக்க உங்கள் அறை காற்றோட்டமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது தானாகவே ஆற்றல்மிக்க அதிர்வுகளைத் தருகிறது. மேலும், உங்கள் அறையை பிரகாசமாக வைத்திருங்கள். ஒரு இருண்ட அறையில் நீண்ட காலம் தங்கியிருப்பது மெலடோனின் சுரப்பிற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக உங்களுக்கு தூக்கம் வரும். முறையற்ற உட்கார்ந்த தோரணை உங்களுக்கு தூக்கத்தையும் சோம்பலையும் தருகிறது. நேரான மற்றும் எச்சரிக்கையான தோரணையை பராமரிக்கவும்.

ஆல்கஹாலை தவிர்க்கவும்

ஆல்கஹாலை தவிர்க்கவும்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் உங்கள் உடலை நன்கு ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள். உங்கள் உணவில் அதிக பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மிக முக்கியமான குறிப்பு புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் தூக்கம் மற்றும் மந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ayurveda explains reasons for feeling sleepy all the time

We are talking about the ayurveda explains reasons for feeling sleepy all the time. Read on.
Story first published: Tuesday, January 28, 2020, 11:55 [IST]
Desktop Bottom Promotion