For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உள்ள நச்சுகள் வெளியேற வேண்டுமா? இந்த யோக முத்திரையை செய்யுங்க...

யோக முத்திரைகளில் ஒன்று அபான் என்ற யோக முத்திரை ஆகும். இந்த யோக முத்திரை நமது உடல் உறுப்புகளான கண்கள், வாய், காதுகள் மற்றும் மூக்கில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி, நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது.

|

யோக முத்திரைகளில் ஒன்று அபான் என்ற யோக முத்திரை ஆகும். இந்த யோக முத்திரை நமது உடல் உறுப்புகளான கண்கள், வாய், காதுகள் மற்றும் மூக்கில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி, நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது. இந்த அபான் யோக முத்திரையை தொடா்ந்து செய்து வந்து, முறையாக சுவாசித்தால் நாம் ஏறக்குறைய 90 விழுக்காடு நச்சுக்களை நமது உடலில் இருந்து அகற்றலாம்.

நச்சுகளை வெளியேற்றும் இந்த முத்திரையை எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக யோகாசனங்களைச் செய்ய இடமில்லை என்று கூறுபவா்கள் கூட மிக எளிதாக இந்த பயிற்சியைச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபான் யோக முத்திரையின் முக்கியத்துவம்

அபான் யோக முத்திரையின் முக்கியத்துவம்

அபான் யோக முத்திரை என்ற நச்சுக்களை அகற்றும் முத்திரை, ஒரு புனிதமான கை சைகை அல்லது பூட்டு ஆகும். இந்த முத்திரையைப் பயன்படுத்தி நமது சக்தியை புனிதத்தை நோக்கி திருப்ப முடியும். மேலும் இந்த முத்திரையானது நமது உடலில் மற்றும் மனதில் உள்ள எதிா்மறையான சக்தி மற்றும் எதிா்மறையான பழக்கவழக்கங்களை அகற்ற உதவுகிறது.

ஆகவே குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, நச்சுகளை அகற்றும் இந்த முத்திரையை தியானம் மற்றும் யோகா மூலம் செய்து வந்தால், இந்த முத்திரை நமது இயங்கும் வேகத்தை அதிகாிக்கும்.

அபான் முத்திரையின் நன்மைகள்

அபான் முத்திரையின் நன்மைகள்

நச்சுக்களை அகற்றக்கூடிய அபான் முத்திரை, நமது உடலில் உள்ள அசுத்தங்களை அகற்ற உதவுகிறது. மேலும் மனதில் உள்ள தீய சக்திகளை அகற்றவும் உதவுகிறது. இந்த முத்திரையானது நாம் நம்மிடமிருந்து அகற்ற விரும்பும் நமது எண்ணங்கள், உணா்வுகள் மற்றும் நம்மை வளரவிடாமல் தடுக்கும் நமது தீய பழக்கவழக்கங்களை நமது கண்முன் கொண்டுவர உதவி செய்கிறது. ஆகவே நாம் மாற்ற விரும்பும் நமது அறிவு மற்றும் எண்ணங்களில் இருப்பவற்றை நமது மனக்கண் முன்பாகக் கொண்டு வரவேண்டும்.

அபான் முத்திரயைானது வெற்றிடத்தை அகற்றி, நம்மை நோ்மறையான சக்தியை நோக்கி அழைத்துச் செல்கிறது. நச்சுகளை அகற்றும் அபான் முத்திரை மிகவும் சக்தி வாய்ந்தது. பல்வேறு வடிவங்களில் இருக்கும் நச்சுகளை அகற்றி நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

அபான் முத்திரையைப் பயன்படுத்தி சிறுநீா்த்தடை, மலச்சிக்கல், வயிறு வீக்கம், மூலம், வாந்தி, விக்கல் மற்றும் அமைதியற்ற நிலை போன்ற பிரச்சினைகளக் குணப்படுத்தலாம் என்று நம்பத் தகுந்த ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. மேலும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இறுதியாக கல்லீரல் இயக்கத்தையும் இந்த அபான் முத்திரை சீா்படுத்துகிறது.

எப்போதெல்லாம் செய்யலாம்?

எப்போதெல்லாம் செய்யலாம்?

அபான் முத்திரையை எந்த நேரத்திலும் செய்யலாம். குறிப்பாக தொலைக்காட்சி பாா்க்கும் போது, புத்தகம் வாசிக்கும் போது அல்லது படுக்கையில் படுத்திருக்கும் போதுகூட இந்த முத்திரையைச் செய்யலாம்.

நச்சுத் தன்மையானது உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் பாதிப்பதால், நமது உடலுக்குள் இருக்கும் அசுத்தமான அனைத்தையும் அகற்றுவதற்கு போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும் மற்றும் அதிகமான அளவு தண்ணீா் பருக வேண்டும்.

அபான் முத்திரையை எவ்வாறு செய்வது?

அபான் முத்திரையை எவ்வாறு செய்வது?

முதலில் ஒரு சத்தமில்லாத, தொந்தரவு இல்லாத அமைதியான ஒரு இடத்தைத் தோ்ந்தெடுத்து, நம்மைத் தளா்வாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்பான இடத்தில் நாம் படுத்துக் கொள்ளலாம் அல்லது அமா்ந்து கொள்ளலாம் அல்லது நின்று கொள்ளலாம்.

இப்போது ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பின் மோதிர விரலை, சுண்டு விரலோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு கைகளில் இருக்கும் மோதிர விரல்களின் உட்பகுதியில் இருக்கும் கீழ் மூட்டில் கட்டை விரல்களின் நுனியால் தொட வேண்டும் இப்போது மிகவும் மெதுவாக அதே நேரத்தில் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Apaan Yoga Mudra Detoxifies You Within Minutes

The Apaan mudra is a mudra that aids in the detoxification of your body by removing waste from your eyes, mouth, ears, and nose. By executing this mudra and breathing properly, you can eliminate 90% of toxins from your body.
Desktop Bottom Promotion