For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகள்!

|

பெண்களை விட ஆண்கள் மருத்துவர்களிடம் அதிகம் போக மாட்டார்கள். பல ஆண்கள் தங்களுக்கு இருக்கும் சில அந்தரங்க பிரச்சனைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள கூட யோசிப்பார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் மருத்துவர்களிடம் செல்வது என்பது அரிது. ஆனால் ஆண்கள் அவசியம் அவ்வப்போது மருத்துவர்களை சந்திக்க வேண்டியது அவசியம்.

Alarming Signs of Health Problem Men Should Never Ignore

பெண்களைப் போன்றே ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டு. அந்த பிரச்சனைகளுக்கு மருத்துவர்களை சந்தித்தால் தான், உடனடி தீர்வு காண முடியும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி, பெரும் அபாயத்தை சந்திக்க வேண்டி வரும். இங்கு ஆண்கள் சற்றும் புறக்கணிக்கக்கூடாத சில ஆரோக்கிய பிரச்சனைகளும், அவற்றிற்கான சில அறிகுறிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பாலுணர்ச்சியைத் தூண்டி நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் உணவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விறைப்புத்தன்மை குறைபாடு / ஆண் மலட்டுத்தன்மை

விறைப்புத்தன்மை குறைபாடு / ஆண் மலட்டுத்தன்மை

பெரும்பாலான ஆண்கள் தங்களின் வாழ்நாளில் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் ஆண் மலட்டுத்தன்மை. இருப்பினும், அதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முதன்மையானதாக கருதப்படுவது விறைப்புத்தன்மை குறைபாடு. அதாவது பலமுறை தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது, துணையை திருப்திப்படுத்த முடியாமல் போகும் நிலை.

இப்படி உங்களால் உங்கள் துணையை திருப்திப்படுத்த முடியாமல் போனால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். பல ஆண்கள் இந்த பிரச்சனைக்கு மருத்துவரை காண சங்கடப்படலாம். ஆனால் இப்பிரச்சனையை சரிசெய்வதற்கென்று ஏன் மருத்துவர்கள் உள்ளனர்? எனவே சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று தீர்வு காணுங்கள்.

ஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா?

தீவிர பிரச்சனையின் அறிகுறி

தீவிர பிரச்சனையின் அறிகுறி

ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனை ஏற்படுவதற்கு, இதய நோய், சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்றவை கூட காரணமாக இருக்கலாம். எனவே இந்த நோய்களை தீவிரமாகாமல் தடுக்க வேண்டுமானால், சீக்கிரம் மருத்துவரை காணுங்கள்.

விரை விதைகளில் கட்டிகள்

விரை விதைகளில் கட்டிகள்

விரை விதைகளில் உருவாகும் கட்டிகள் தீங்கு விளைவிக்காததாகத் தான் இருக்கும். ஆனால் பல நேரங்களில் இம்மாதிரியான கட்டிகள் பல தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். குறிப்பாக ஆண்கள் அவ்வப்போது தங்களின் விரைவிதைகளை பரிசோதித்து வந்தால், விரைவிதை புற்றுநோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

ஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இத செய்யுங்க...

விரை விதை புற்றுநோய்

விரை விதை புற்றுநோய்

விரை விதை புற்றுநோய் 20-35 வயதுடைய ஆண்களிடையே பொதுவானது. விரை விதைகளில் இருக்கும் அனைத்து கட்டிகளுமே புற்றுநோயினால் வருவதில்லை. ஆனால் அவற்றில் சில திரவ சேகரிப்பு, நோய்த்தொற்று அல்லது தோல் அல்லது நரம்புகளின் வீக்கத்தின் விளைவாக இருக்கலாம்.

மச்சம்

மச்சம்

அனைத்து மச்சங்களும் புற்றுநோயினால் வருவதில்லை என்பதை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனித உடலில் மச்சங்கள் இருப்பது இயற்கையான ஒன்று. ஒருவரது உடலில் 10 முதல் 40 மச்சங்கள் வரை இருக்கலாம். புற்றுநோயை உண்டாக்கும் மச்சமாக இருந்தால், அதன் நிறம் அல்லது வடிவத்தில் மாற்றம் ஏற்படும் அல்லது மச்சத்தில் இரத்தக்கசிவு, அரிப்பு அல்லது வலி போன்றவற்றை உணரலாம். இம்மாதிரியான நிலையில் உடனே தோல் மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.

முதுகு வலி ரொம்ப அதிகமா இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

ABCDE மச்சங்கள்

ABCDE மச்சங்கள்

உங்கள் மச்சங்கள் புற்றுநோயை உண்டாக்குகின்றனவா என்பதை அறிய ABCDE மச்சங்களை நினைவில் கொள்ளுங்கள்:

A - (Asymmetry) சமச்சீரற்ற தன்மை: மச்சத்தின் ஒரு பாதி மற்றொன்றுடன் பொருந்தாமல் இருக்கும்.

B - (Border) பார்டர் : மச்சத்தின் விளிம்புகள் மங்கலாக அல்லது ஒழுங்கற்றவையாக இருக்கும்.

C - (Colour) நிறம் : மச்சத்தின் நிறத்தில் மாற்றம். அதாவது மச்சம் முழுவதுமாக ஒரே மாதிரியாக இருக்காது அல்லது பழுப்பு, ப்ரௌன், கருப்பு, நீலம், வெள்ளை அல்லது சிவப்பு கலந்து இருக்கும்.

D - (Diameter) விட்டம் : மச்சத்தின் விட்டம் பென்சில் அழிப்பானை விட பெரியதாக இருக்கும்.

E - (Evolution) பரிணாமம்: மச்சத்தின் அளவு, வடிவம் அல்லது நிறம் மாறுபடும்.

சிறுநீர் பிரச்சனைகள்

சிறுநீர் பிரச்சனைகள்

ஆண்களுக்கு பெரும்பாலும் சிறுநீர் பிரச்சனைகள் வயதான காலத்தில் தான் ஏற்படும். ஆனால் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையை சந்தித்தால், உங்களுக்கு சிறுநீர் தயக்கம் இருக்கலாம். எப்போது புரோஸ்டேட் வீக்கம் ஏற்படுகிறதோ, அப்போது சிறுநீர் குழாயில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். இப்படி சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையை சந்தித்தால், அது புரோஸ்டேட் நோய்களுள் ஒன்றான புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கக்கா.. போகும் போது வலியுடன், இரத்தக்கசிவும் ஏற்பட காரணம் என்ன?

சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் அல்லது வலி

சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் அல்லது வலி

எப்போது ஒரு ஆண் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி மற்றும் அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்க எழுவது போன்றவற்றை சந்திக்கிறாரோ, அவர் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

எனவே ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். வலி மற்றும் ஆரோக்கிய பிரச்சனையை மறைப்பதால் எந்த ஒரு பலனும் இல்லை. உடலில் உள்ள பிரச்சனைக்கு உடனே மருத்துவரை அணுகி சிகிச்சையை மேற்கொண்டால் தான், நல்ல ஃபிட்டான ஆணாக இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Alarming Signs of Health Problem Men Should Never Ignore

Men often ingore their health. But there are few signs and symptoms that every men must know. Read on to know such symptoms...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more